மாறுபட்ட வடிவில் தமிழ் மேடை நாடகம் ‘வெனிஸ் வணிகன்’

நட்­பின் சிறப்பு, கரு­ணை­யின் பெருமை, காத­லின் அழகு, பழி உணர்ச்­சி­யின் உச்­சக்­கட்­டம் என திருப்­பங்­கள் நிரம்­பிய கதை­தான் வில்­லி­யம் ஷேக்ஸ்­பி­ய­ரின் ‘தி மெர்­சென்ட் அஃப் வெனிஸ்’.

இதை ‘வெனிஸ் வணி­கன்’ என்ற தமிழ் மேடை நாட­க­மாக அரங்­கேற்­ற­வி­ருக்­கின்­ற­னர் அவாண்ட் நாடகக் குழு­வி­னர்.

கொவிட்-19 கிருமி முறி­ய­டிப்பு முயற்­சி­கள் தொடங்­கி­ய­தி­லி­ருந்து கலைப் படைப்­பு­களை அரங்­கு­களில் மக்­கள் நேர­டி­யா­கச் சென்று பார்க்க முடி­யாத நிலை ஏற்­பட்­டு இ­ருந்­த­து. இதனை அடுத்து தேசிய கலை­கள் மன்­றம் செப்­டம்­பர் 11 ஆம் தேதி­யி­லி­ருந்து சிறிய அள­வி­லான நேரடி நிகழ்ச்­சி­கள் அரங்­கேற அனு­மதி வழங்­கி­யுள்­ளது.

இந்நிலையில் அவாண்ட் நாட­கக் குழு­வின் ‘வெனிஸ் வணி­கன்’ நாடகம் அக்­டோ­பர் 15, 16, 17 ஆகிய தேதி­களில் தேசிய நூலக வாரிய நாடக நிலை­யத்­தில் மேடை­யே­ற­வுள்­ளது.

முழுநீள நாட­க­மாக படைக்­கப்­ப­ட­வி­ருந்த இந்த நாட­கத்­தைச் சுருக்கி அமைத்­துள்­ளார் நாடக இயக்­கு­னர் திரு க. செல்வா.

இதற்குத் தமி­ழாக்­கத்தை இயற்­றி­ய­வர் திரு­மதி உமை­யாள் திரு. இவ­ரின் வச­னங்­க­ளுக்கு 12 நடி­கர்­கள் உயிர்­கொ­டுத்­துள்­ள­னர்.

ஆக்­ரோ­ஷம், கதா­பாத்­தி­ரங்­களுக்கு இடையே நிக­ழும் கார­சா­ர­மான விவா­தம், நகைச்­சுவை, காதல் காட்­சி­கள் எனக் குறைந்த அளவு தமிழ்ப் புலமை உள்­ள­வர்­கள்­கூட ரசிக்­கும் விதத்­தில் நாட­கம் அமைந்­துள்­ளது.

‘வெனிஸ் வணி­கன்’ நாட­கத்தை அவாண்ட் நாட­கக் குழு, சென்ற ஆண்டு மேடை வசன படைப்­பாக படைத்­தி­ருந்­தது. அதற்கு நல்ல வர­வேற்பு கிடைத்­ததை அடுத்து வரும் வியா­ழக்­கிழமை முதல் சனிக்­கி­ழமை வரை ஒரு மாறு­பட்ட பரி­மா­ணத்­தில் நாடகக் குழு நாட­கத்­தைப் படைக்­கப்­ப­ட­வுள்­ளது.

நுழை­வுச்­சீட்­டு­க­ளுக்கு www.sistic.com.sg/events/venice1020 இணை­யப்­பக்­கத்தை நாட­வும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!