'அதிபர் சவால்' அறப்பணி நிகழ்ச்சிக்கு $85,000 நன்கொடை

'அதிபர் சவால்' அறப்பணி நிகழ்ச்சிக்கு $85,000 நன்கொடை

1 mins read
180c9258-84fa-4b24-b57c-bcc72d7ca43f
துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டுடன் (இடமிருந்து) ஸ்ரீ சிவதுர்கா கோயில் தலைவர் திருகே.ராமச்சந்திரா, ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயில் அறங்காவலர் திரு சுப்பையா வேலு, இந்து அறக்கட்டளை வாரியத் துணைத் தலைவர் திரு ஆர்.தினகரன், செட்டியார் கோயில் குழும உறுப்பினர் திரு சாத்தப்பன். படம்: இந்து அறக்கட்டளை வாரியம் -

இவ்­வாண்­டின் 'அதி­பர் சவால்' அறப்பணி நிகழ்ச்­சிக்­காக சிங்­கப்­பூ­ரில் உள்ள 11 இந்­துக் கோயில்­களும் இந்து அறக்­கட்­டளை வாரி­ய­மும் இணைந்து $85,000 நன்­கொ­டையை வழங்­கி­யுள்­ளன.

ஸ்ரீ வீர­மா­கா­ளி­யம்­மன், ஸ்ரீ சிவ­துர்கா, ஸ்ரீ முனீஸ்­வ­ரன், ஸ்ரீ மன்­மத காரு­ணீஸ்­வ­ரர், ஸ்ரீ ருத்ர காளி­யம்­மன், ஸ்ரீ செண்­பக விநா­ய­கர், ஸ்ரீ தர்ம முனீஸ்­வரன், ஸ்ரீ மகா மாரி­யம்­மன், அருள்­மிகு வேல்­மு­ரு­கன் ஞான­மு­னீஸ்­வ­ரர், ஸ்ரீ வட­பத்­திர காளி­யம்­மன் ஆகிய கோயில்­கள், செட்­டி­யார் கோயில் குழு­மத்­தின்­கீழ் உள்ள ஸ்ரீ தெண்­டா­யு­த­பாணி கோயில், ஸ்ரீ லயன் சித்தி விநா­ய­கர் கோயில், இந்து அறக்­கட்­டளை வாரி­யத்­தின்­கீழ் உள்ள ஸ்ரீ மாரி­யம்­மன், ஸ்ரீ ஸ்ரீநி­வா­சப் பெரு­மாள், ஸ்ரீ சிவன், ஸ்ரீ வைரா­வி­மட காளி­யம்­மன் ஆகிய கோயில்­கள் இணைந்து நன்­கொ­டையை வழங்­கின. நன்­கொ­டைக்­கான காசோலை வழங்­கும் நிகழ்வு இம்­மா­தம் 3ஆம் தேதி லிட்­டில் இந்­தி­யா­வில் நடை­பெற்ற தீபா­வளி ஒளி­யூட்டு விழா­வின்­போது இடம்­பெற்­றது. ஒளி­யூட்டு விழா­வில் பங்கேற்ற துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட், 'அதி­பர் சவால் நன்­கொடை'யின் சார்­பில் காசோ­லை­யைப் பெற்­றுக்­கொண்­டார்.