பக்கவாதத்தின் அறிகுறிகளை கவனிக்காமல் விட்டுவிடாதீர்

ப. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

தந்­தை­யைப் போலவே தாமும் சொந்த தொழில் நடத்தி அதில் வெற்றி காண வேண்­டும் என்று முடி­வெ­டுத்­தார் திரு ர.ஆனந்தா ஷரு­ராஜா. 1983ஆம் ஆண்­டில் உடல் ஆரோக்­கி­யத் துறை சார்ந்த தன் நிறு­வ­னத்தை ஆரம்­பித்­தார். ‌‌‌‌

வாரத்­தின் ஆறு நாட்­களை அலு­வ­லகப் ­பணிகளுக்கே ஒதுக்­கி­னார். அதுவே அவ­ரது நீடித்த வாழ்க்­கை­முறை ஆனது. வேலை­யி­லி­ருந்து நீண்டகால விடுப்புகூட எடுத்­த­து இல்லை.

ஒரு­நாள், அலு­வ­ல­கத்­தி­லி­ருந்து புறப்­பட்டு தம் வாக­னத்தின் ஓட்­டு­நர் இருக்­கை­யில் அமர முயன்­ற­போது வலது காலை அவ­ரால் நகர்த்த முடி­ய­வில்லை. அது­வ­ரை­யில், இதை அவர் அனு­ப­வித்­த­தில்லை. ஏன் வலது கால் செய­லி­ழந்து போனது என்ற குழப்­பம் அவருக்கு. தம் அலு­வ­லக ஊழி­யர் ஒரு­வ­ரி­டம் திறன்­பேசி வழி தக­வல் தெரி­வித்த அவர், பின்­னர் சுய­நி­னை­வின்றி வாக­னத்­தில் கிடந்­தார். மருத்­து­வ­ம­னைக்கு கொண்­டுச் செல்­லப்­பட்டு, மூன்று நாட்­க­ளாக கண்­வி­ழிக்­க­வில்லை. பின்­னர் சுய­நி­னைவு வந்­த­தும் தம்­மைப் பக்­க­வா­தம் தாக்­கி­யுள்­ளதை அறிந்­து­கொண்­டார். உல­கமே தலை­கீ­ழா­னது, மனம் நொந்துபோனது.

SPH Brightcove Video

“பக்­க­வா­தம் தாக்­கும் வரை அதைப் பற்றி சிந்­தித்­ததே இல்லை. வேலை­யி­லேயே மூழ்­கி­யி­ருந்­த­தால், அறி­கு­றி­களைக் கவ­னிக்­கா­மல் விட்­டு­விட்­டேன்,” என எட்டு ஆண்­டு­க­ளுக்கு முன் நடந்த சம்­ப­வத்தை வருத்­தத்­து­டன் நினை­வு­கூர்ந்­தார் திரு ஆனந்தா.

பக்­க­வா­தம் அவ­ரின் 55வது வய­தில் தாக்­கிய பின்­னர், அவ­ரின் நட­மாட்­ட­மும் பேச்­சும் பாதிக்­கப்­பட்­டன. தமக்கு இருந்த உயர் ரத்த அழுத்­தத்­தைக் கண்­கா­ணிக்­கா­மல் போனதே இதற்கு வித்­திட்­டது. பக்­க­வா­தம் ஏற்­ப­டு­வ­தற்கு முன், வேலை­யி­டத்­தில் சுமார் ஆறு மாதங்­க­ளாக மன­உ­ளைச்­ச­லு­டன் செயல்­பட்­ட­தா­க­வும் தின­மும் நான்கு மணி நேரம் மட்­டுமே உறங்­கி­ய­தா­க­வும் திரு ஆனந்தா குறிப்­பிட்­டார். இச்­சம்­ப­வம் திரு ஆனந்­தா­வை­யும் அவ­ரின் குடும்­பத்­தா­ரை­யும் உலுக்­கி­ய­போ­தும் நிலைமை சீரா­கும் என்ற நம்­பிக்கை வைத்­தி­ருந்­த­னர்.

முதல்­ப­டி­யாக அவ­ரின் பேச்சு மீண்­டும் வழக்­க­நி­லைக்கு வரு­வ­தில் கவ­னம் செலுத்­தப்­பட்­டது. பேச்­சுப் பயிற்­சி­க­ளின் உத­வி­யு­டன் மூன்று மாதங்­க­ளுக்­குள் குறைந்­தது 100 சொற்­களை அவ­ரால் கூற முடிந்­தது.

மருத்­து­வ­ம­னை­யில் நட­மாட்­டத்­திற்கு உத­வும் அசை­வுப் பயிற்­சி­க­ளுக்­கும் திரு ஆனந்தா சென்­றார். வீட்­டி­லும் சில உடற்­பயிற்­சி­களில் அவர் ஈடு­பட்­டார். மீண்டு வரு­வோம் என்ற தன்­னம்­பிக்­கை­யும் பொறு­மை­யும் படிப்­ப­டி­யாக அவ­ரின் உடல் தேறி வர வழி­வ­குத்­தது.

இன்று அவ­ரின் பேச்­சுத் திறன் ஓர­ள­வுக்கு வழக்­க­நி­லைக்­குத் திரும்­பி­விட்­டது. அவ­ரால் மெல்ல மெல்ல நடக்க முடி­கிறது, நடைப்­ப­யிற்சி, யோகா­ச­னம், உடற்­ப­யிற்சி ஆகி­ய­வற்­றில் அவர் ஈடு­பட்டு வரு­கி­றார். உடற்­பி­டிப்பு நிபு­ண­ரின் சேவை­யும் அவ­ருக்கு உதவி வரு­கிறது.

ஆரோக்­கி­ய­மற்ற கொழுப்பு நிறைந்த கடை உணவை அதி­கம் சாப்­பிட்­டுக்­கொண்­டி­ருந்­த­வர் காய்­க­றி­கள், பழங்­கள், ‘நட்ஸ்’, ‘சீட்ஸ்’ ஆகியன உள்­ள­டங்கிய உண­வு­வகை­களை இப்­போது சாப்­பி­டு­கி­றார். அரி­சிக்­குப் பதி­லாக பெரும்­பா­லும் ‘கீனுவா’ (Quinoa) வகையை உட்­கொள்­கி­றார். எட்டு மணி நேரத்தை உறக்­கத்­திற்­கா­கவே ஒதுக்­கு­கி­றார். வேலை­யி­டத்­தில் முன்­பு­போல் அதிக நேரம் இருப்­ப­தில்லை. கிடைக்­கும் ஓய்வு நேரத்தை உடல்­ந­லம் பேணு­வ­தில் செல­வ­ழிக்­கி­றார். உதவியின்றித் தாமாக, இயல்­பாக நடப்­ப­தைத் தமது அடுத்த இலக்­கா­கக் கொண்­டுள்­ளார் திரு ஆனந்தா.

“மன­உ­ளைச்­ச­லால் உட­லில் ஏற்­படும் அறி­கு­றி­க­ளைக் கண்­கா­ணிக்­கா­மல் விட்­டு­வி­டா­தீர்­கள். பக்­க­வா­தம் வரு­வ­தற்கு இரண்டு வாரங்­க­ளுக்கு முன், குளி­ரான அறை­யில் எனக்கு வியர்த்­துக் கொட்­டியதை என் மனைவி பார்த்­தி­ருக்­கி­றார். ஒருவேளை, அப்­போதே ஒரு மருத்­து­வரை பார்த்­தி­ருந்­தால் இந்­நி­லை­யைத் தவிர்த்­தி­ருக்­க­லாம்,” எனக் கூறி­னார் 63 வயது திரு ஆனந்தா.

பக்­க­வா­தம் திடீ­ரென்று தாக்­கி­ய­தில் தாம் உயி­ரி­ழந்­தி­ருக்­கக்­கூ­டும் என்று கூறிய திரு ஆனந்தா, பக்­க­வா­தத்­திற்­கான அறி­குறி தென்­பட்­டால் உட­ன­டி­யாக மருத்­து­வ­ரைப் பார்ப்­பது அவ­சி­யம் என்­றார்.

வேலை­யி­டத்­தில் ஏற்­படும் மன­உ­ளைச்­சல் குறித்து மெத்­த­ன­மாக இருந்­து­விட வேண்­டாம் என்­றும் இளம் வய­தி­ன­ரை­யும் பக்­க­வா­தம் தாக்­கு­கிறது என்­றும் அவர் சுட்­டி­னார். பக்­க­வா­தத்­தால் பாதிப்­ப­டைந்­த­வர்­கள் வழக்­க­நி­லைக்­குத் திரும்ப சிங்­கப்­பூர் தேசிய பக்­க­வா­தச் சங்­கம் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை ஏற்­பாடு செய்து வரு­கிறது. இது குறித்து அவர் அறிய வந்து, 2015ஆம் ஆண்­டி­லி­ருந்து அவற்­றில் பங்­கேற்­க­வும் முற்­பட்­டார். இன்று சங்­கத்­தின் நிர்­வா­கக் குழு உறுப்­பி­ன­ராக இடம்­பெற்று, பொது­மக்­க­ளுக்­கும் நிறு­வ­னங்­க­ளுக்­கும் பக்­க­வா­தம் குறித்த விழிப்­பு­ணர்வை ஏற்­படுத்தி வரு­கி­றார்.

“என் தந்தை எளி­தில் மனந்­த­ளர்ந்­தி­ட­மாட்­டார். போரா­டும் குணம் படைத்­த­வர். அவ­ரைப் போலவே நானும் இருந்து, என் மனை­வி, பிள்­ளை­க­ளுக்­கா­க­ இதி­லி­ருந்து மீண்­டு­வர வேண்­டும் என்று உறு­தி­கொண்­டேன். நீண்­ட­கா­லம் ஆனா­லும் வாழ்க்கை வழக்­கத்­திற்­குத் திரும்­பும் என்ற நம்­பிக்கை கொண்­டுள்­ளேன். பக்­க­வா­தத்­திற்கு ஆளா­ன­வர்­கள் நம்­பிக்­கையை ஒரு­போ­தும் கைவிட்­டு­வி­டக்­கூ­டாது,” என்று அறி­வு­றுத்­தி­னார் திரு ஆனந்தா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!