பக்கவாதம் தொடர்பில் மருத்துவ நிபுணரின் ஆலோசனைக் குறிப்புகள்

உயர் ரத்த அழுத்­தத்­தைக்

கட்­டுக்­குள் வைத்­தி­ருக்க...

குடும்­பத்­தின் சுகா­தா­ரப் பின்­னணி, அதிக நட­மாட்­டம் இல்­லாத வாழ்க்­கை­முறை, புகைப்­பி­டித்­தல், உடல் பரு­மன் ஆகி­ய­வற்­றால் உயர் ரத்த அழுத்­தம் வரும் அபா­யம் அதி­கம். ஆரோக்­கிய உண­வு­முறை, உடற்­ப­யிற்சி, ரத்த அழுத்­தத்­தைக் கண்­கா­ணித்­தல், சுகா­தா­ரப் பரி­சோ­த­னைக்­குச் செல்­வது முக்கியம்.

உணவு தயா­ரிப்­பின்­போது...

பாரம்­ப­ரிய இந்­திய உண­வில் உப்பு, சர்க்­கரை, எண்­ணெய், நெய், ஆகி­ய­வற்­றின் அளவு அதி­க­மாக இருக்­கக்­கூ­டும். காப்பி, தேநீர், இனிப்பு வகை­கள், சோறு, சப்­பாத்தி போன்­ற­வற்­றில் இவை இருக்­க­லாம். இவற்­றைத் தின­மும் உட்­கொண்­டால் உயர் ரத்த அழுத்­தம், உயர் ரத்­தக் கொழுப்பு, நீரி­ழிவு நோய் போன்­றவை ஏற்­ப­ட­லாம்.

இளம் வய­தி­ன­ரும் பக்­க­வா­த­மும்...

பக்­க­வா­தம் எந்த வய­தி­லும் தாக்­க­லாம். வாழ்க்­கை­முறை தெரி­வு­கள் (புகைப்­பி­டித்­தல், ஆரோக்­கி­ய­மற்ற உண­வு­முறை) கார­ண­மாக இருக்­க­லாம். வயது அதி­க­ரிக்க, பக்­க­வா­தம் வரும் வாய்ப்­பும் அதி­க­ரிக்­க­லாம். தகுந்த சிகிச்­சை­க­ளு­டன் நோய் வரும் சாத்­தி­யம் குறை­யும்.

பக்­க­வா­தத்­தின் ஆரம்ப அறி­கு­றி­கள்...

ஒரு­பு­றம் முகம் கோண­லா­கப் போவது, கை பல­வீ­ன­மாகி எதை­யும் தூக்க முடி­யா­மல் போவது, பேசுவதில் சிரமம் ஏற்படுவது போன்ற அறி­கு­றி­களை ஒரு­வ­ரி­டம் கண்­டால், உட­ன­டி­யாக 995 என்ற எண்­ணுக்கு அழைத்து மருத்­துவ உத­வியை நாட­வும்.

பக்­க­வா­தத்­தி­லி­ருந்து குண­ம­டைய...

பக்­க­வா­தம் வந்­த­பின் நோயா­ளி­களுக்­குச் சிகிச்சை அவ­சி­ய­மா­னது. நோயாளி­யின் உடல்நலத்­தை­யும் பக்­க­வா­தத்­தின் கடு­மை­யை­யும் பொறுத்து உட­ன­டி­யாக சிகிச்சை தொடங்­கி­வி­டும். ஒரு நோயாளி குண­ம­டை­யும் பய­ணத்­திற்கு ஒரு மருத்­து­வக் குழுவே தேவைப்­படும்.

பரா­ம­ரிப்­பா­ள­ரின் பங்கு...

பக்­க­வா­தம் கொண்­ட­வர்­கள் தகுந்த நிபு­ண­ரு­டன் உடற்­ப­யிற்சி செய்­யும்­போது பரா­ம­ரிப்­ப­வர்­களும் ஈடு­பட்டு நோயா­ளிக்கு உத­வ­லாம். அவர்­க­ளுக்கு மன­த­ள­வில் ஆத­ரவு தரும் வகை­யில், பரா­ம­ரிப்­பா­ளர்­கள் பேச­லாம். உடற்­ப­யிற்சி, குடும்ப நட­வ­டிக்­கை­களில் ஈடுபட ஊக்­கு­விக்­க­லாம். அதே சமயம் தூக்­க­மின்மை, பசியின்மை, வழக்­க­மான நட­வ­டிக்­கை­களில் ஆர்­வ­மின்மை போன்ற அறி­கு­றி­க­ளைக் கண்­கா­ணிக்­க­வும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!