நெடுந்தொலைவு ஓடுவதில் ஒத்த வயதினருக்கு இல்லாத வேகம் 73 வயது திரு கே.சந்திரசேகரனிடம் உண்டு. 56 வயதில் ஓடுவதில் ஏற்பட்ட ஈடுபாடு, அவரைப் பல நெடுந்தொலைவு ஓட்டங்களில் பங்கேற்க வைத்தது. இவ்வாண்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மெய்நிகர் ஓட்டத்தில் கலந்துகொண்டு 17.5 கி.மீ ஓடி முடித்தார் இந்த வீரர். வயதைக் காரணம் காட்டி உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதில் அறவே நம்பிக்கை இல்லாதவர் இவர். "ஓடுவதில் எனக்கு ஒருவித மனநிறைவு கிடைக்கிறது," என்கிறார் துடிப்புமிக்க சந்திரசேகரன்.
73 வயதிலும் ஓயாமல் ஓடுகிறார்
1 mins read
-

