தமிழ் முரசு போட்டியில் கைக்கணினி பரிசு

தமிழ் முரசு போட்டியில் கைக்கணினி பரிசு

4 mins read
7fa5b8dc-4e38-49b6-ab5c-a4a5276abaaf
தமிழ் முரசின் செய்தி ஆசிரியரும் மின்னிலக்க ஆசிரியருமான திரு தமிழவேல் (இடக்கோடி), போட்டியில் வெற்றி பெற்ற நித்யா வெங்கடேசனிடம் கைக்கணினியையும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், தமிழ் முரசு அடங்கிய ஈராண்டு சந்தாவையும் பரிசாக வழங்கினார். நித்யாவின் தாயார் திருவாட்டி சுகந்தி வெங்கடேசன் (வலக்கோடி) உடன் உள்ளார். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், ஜோபின் சஜோ -
multi-img1 of 3

இர்­‌‌‌ஷாத் முஹம்­மது

சிங்­கப்­பூ­ரின் ஒரே தமிழ் நாளி­தழான தமிழ் முரசு தனது 85வது ஆண்டு நிறை­வைக் கொண்­டா­டும் வண்­ணம் தனது வாச­கர்­க­ளுக்­குக் கடந்த ஜூலை மாதம் இணை­யத்­தில் போட்டி ஒன்றை நடத்­தி­யது.

அதில் வாச­கர்­கள் எளிய கேள்­வி­க­ளுக்­குப் பதி­ல­ளித்து வெற்­றிக்­குத் தகு­தி­பெற்­ற­னர்.

தமிழ் முரசு செய்­தித்­தா­ளைக் கைக்­க­ணினி மூலம் படிக்­கும் வகை­யில் அண்­மை­யில் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ், தமிழ் முரசு இணைந்து கைக்­க­ணினி தொகுப்பை அறி­முகம் செய்­தன.

மக்­க­ளி­டம் அதிக வர­வேற்­பைப் பெற்று வரும் கைக்­க­ணினி தொகுப்பு, இந்­தப் போட்­டி­யின் வெற்­றி­யா­ளர்­க­ளுக்­கான பரி­சாக வழங்­கப்­பட்­டது.

போட்­டி­யில் பங்­கேற்ற அனை­வ­ருக்­குமே ஒரு வாரத்­திற்­குத் தமிழ் முரசு செய்­தித்­தாளை இணை­யத்­தில் படிக்­கும் சந்தா இல­வ­ச­மாக வழங்­கப்­பட்­டது.

இப்­போட்­டி­யில் வென்ற மூவ­ருக்கு 'சாம்­சங் கேலக்சி டேப் ஏ வைஃபை' கைக்­க­ணினி, ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ், தமிழ் முர­சின் ஈராண்டு சந்­தா­வு­டன் பரி­சாக வழங்­கப்­பட்­டது.

வெற்­றி­யா­ளர்­களில் ஒரு­வ­ரான திரு அ‌ஷோக் குமார் ராமச்­சந்­தி­ரன், தாம் தொடர்ந்து தமிழ் முர­சைப் படித்து வந்­தா­லும் கைக்­கணினி மூலம் இனி படிக்க முடி­யும் என்­பது மேலும் மகிழ்ச்­சித் தரு­வ­தா­கக் கூறி­னார்.

மூத்த மகள் உயர்­நி­லைப் பள்­ளி­யி­லும் இளைய மகள் தொடக்­க­நிலை நான்­கி­லும் பயில்­வ­தாக கூறிய அவர், மாண­வர் முரசு, தமிழ் முரசு செய்­தித்­தாட்­களை அவர்­கள் படிப்­பதை வழக்­க­மா­கக் கொண்­டி­ருப்­ப­தா­க­வும் கூறி­னார்.

வங்கி ஒன்­றில் தொழில்­நுட்ப வல்­லு­ந­ராக பணி­யாற்­றும் அவர், உள்­ளூர் தமிழ் அமைப்­பு­களில் இணைந்து பல்­லாண்­டு­க­ளா­கச் சேவை­யாற்றி வரு­கி­றார். தமது மகள்­களை உயர்­த­மிழ் பயில அவர் ஊக்­கு­வித்­தார்.

வெற்றி பெற்ற மற்­றொ­ரு­வர் நான்கு ஆண்­டு­க­ளாக சிங்­கப்­பூ­ரில் பணி­யாற்­றும் தமி­ழ­கத்­தைச் சேர்ந்த ஊழி­யர் குமார் ஜோபின் சஜோ, 27.

கடந்த மே மாதம் 18ஆம் தேதி அவ­ரது சொந்த ஊரான கன்னியாகு­ம­ரி­யில் அவ­ருக்­குத் திரு­மணம் நடக்க அனைத்து ஏற்­பாடு­களும் செய்து முடிக்­கப்­பட்ட நிலை­யில் கொவிட்-19 நோய்ப் பர­வல் கார­ண­மாக விமா­னங்­கள் ரத்து செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து அந்த ஏற்­பா­டு­கள் ஒத்­தி­வைக்­கப்­பட்­டன.

"எப்­போ­து­தான் விமா­னச் சேவை­கள் தொடங்­கும் என்­பதை அறிய தின­மும் தமிழ் முர­சின் இணை­யப் பக்­கத்­தைப் பார்த்து வந்­தேன். அப்­போது இப்­போட்­டிக்­கான அறி­விப்­பைக் கண்டு அதில் கலந்­து­கொண்­டேன். நான் வெற்றி பெறு­வேன் என்று கன­வி­லும் நினைத்­த­தில்லை," என்று கூறி­னார் ஜோபின்.

"சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் (எஸ்­பி­எச்) நிறு­வ­னத்­தி­லி­ருந்து அழைப்பு வந்­த­போது மிக­வும் மகிழ்ச்சி அடைந்­தேன். இது­போன்ற போட்­டி­களில் நான் வெற்றி பெற்­றதே இல்லை," என்று கூறிய அவர், தமது வருங்­கால மனை­வி­யி­டம் இதைப் பற்றி கூறி மகிழ்ச்­சி­யைப் பகிர்ந்­த­தா­க­வும் தெரி­வித்­தார்.

வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கும் விடு­தி­யில் வசிக்­கும் அவர், கொவிட்-19 சூழ­லால் இது­வரை மூன்று முறை இடம் மாற்­றப்­பட்டுள்ளார்.

இருப்­பி­னும் தங்­கும் விடு­தி­யில் உள்ள நண்­பர்­க­ளு­டன் சேர்ந்து கைக்­க­ணினியில் செய்­தி­க­ளைப் படித்து வரு­வ­தாக அவர் சொன்­னார்.

"எங்­களில் சிலர் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தி­க­ளை­யும் படிக்­கி­றோம். மற்­ற­வர்­கள் தின­மும் இந்­தக் கைக்­க­ணினி மூலம் தமிழ் முர­சைப் படித்து வரு­கி­றோம். விடு­தி­யில் முடங்­கிக் கிடக்­கும் எங்­க­ளுக்கு இந்­தக் கைக்­க­ணினி மூலம் கிடைக்­கும் செய்­தி­க­ளைப் படிப்­ப­தில் ஒரு­வித மன­நிம்­மதி கிடைக்­கிறது," என்­றார் அடுத்த மாதம் திரு­ம­ணத்­திற்­காக தமி­ழ­கம் செல்­ல­வி­ருக்­கும் ஜோபின்.

தின­மும் தமிழ் முரசு அச்­சுப் பிர­தி­யைத் தவ­றா­மல் படிக்­கும் 19 வயது நித்யா வெங்­க­டே­சன் இப்­போது கைக்­க­ணி­னி­யில் செய்­தி­க­ளைப் படித்து வரு­கி­றார்.

தமிழ் முரசு சந்­தா­தா­ரர்­க­ளாக இருக்­கும் குடும்­பத்­தில் இளம் உறுப்­பி­ன­ரான நித்யா, செய்­தித்­தா­ளில் இடம்­பெற்ற விளம்­ப­ரத்­தைக் கண்டு இணை­யம் மூலம் போட்­டி­யில் கலந்து­கொண்­டார்.

தனது தந்­தை­யி­டம் மட்­டுமே கூறி­விட்டு இந்­தப் போட்­டி­யில் கலந்­து­கொண்­ட­வர் வெற்­றி­யா­ள­ரா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­தில் அள­வு­க­டந்த மகிழ்ச்சி கொண்­டார்.

"இனி நான் போகும் இடத்­தி­ல் எல்­லாம், பேருந்­தில் பய­ணம் செய்­யும்­போது உட்­பட எளி­தா­கப் படிக்­க­லாம்.

"செய்­தி­க­ளைப் பெரி­தாக்­கிப் படிப்­பது, மற்­ற­வர்­க­ளு­டன் பகிர்­வது என பல அம்­சங்­கள் இதில் இருப்­ப­தால் மிக­வும் சுவா­ர­சிய அனு­ப­வத்­தைத் தரு­கிறது," என்­றார் தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கத்­தில் தாதி­மைத் துறை­யில் பயி­லும் இந்த முத­லாம் ஆண்டு மாணவி.

தமிழ் முரசு தொகுப்புகளில் ஒன்றுக்குச் சந்தா சேர்ந்து வெல்லுங்கள்!

மேற்கண்ட வெற்றியாளர்களைப் போல நீங்களும் சாம்சங் கேலக்சி டேப் ஏ (வைஃபை) கைக்கணினிக்கு உரிமையாளர் ஆகலாம். கைக்கணினியில் தமிழ் முரசு, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மின்-செய்தித்தாள்கள் இடம்பெறும். இந்தச் செய்தி கைக்கணினி உள்ளடங்கும் இந்த மின்னிலக்கத் தொகுப்புக்கான மாத சந்தா $29.90 மட்டுமே. உங்களது விருப்பத்திற்கேற்ப மற்ற தொகுப்புகளும் உள்ளன. தமிழ் முரசு சந்தா தொகுப்புக்குப் பதிவு செய்து உங்களுக்கு அல்லது உங்கள் அன்புக்குரியவர்களுக்கு 'பிலிப்ஸ் ஏர் பியூரிஃபையர்', 'பேனசோனிக் மைக்ரோவேவ் அவன்' போன்ற கவர்ச்சிகரமான பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெறுங்கள். சந்தாதாரராக சேர இந்த 'கியூஆர்' குறியீட்டை வருடவும் அல்லது tmsub.sg/deepavali இணையத்தளத்திற்குச் செல்லவும் அல்லது 6388 3838 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். இம்மாதம் 30ஆம் தேதிக்குள் சந்தாதாரராக சேருவோருக்கு மட்டுமே இந்தச் சலுகை பொருந்தும்.