எஸ். வெங்கடேஷ்வரன்
விரும்பியவர்களுக்கு அன்பை வெளிக்காட்ட பரிசுகள் வழங்கும் பழக்கம் காலங்காலமாக நடை
முறையில் உள்ளது.
ஆனால் சில சமயங்களில் பரிசுகளைப் பெறுபவருக்கு அப்பொருட்கள் தேவையில்லாமல் போகலாம். பரிசுகள் வழங்கும் வழக்கத்தை சமூக, சுற்றுச்சூழல் நலன் கருதி நடத்தும் வகையில் ஒரு புது இணைய வர்த்தகத் தளத்தை உருவாக்கியுள்ளனர் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நால்வர்.
கணினி அறிவியல் துறையில் முதுகலைப் பட்டம் படிக்கும் மூன்று மாணவர்களான திரு வெங்கடேசன் ஹரிஷ், 27, திரு சுதர்ஷன் ஸ்ரீவத்ஸன், 27, திரு டெங் டாவ் சியோங், 35, உட்பட அதே துறையில் பட்டதாரியும் முன்னாள் மாணவருமான
திருமதி ஜோய் சியா, 42, ஆகியோர் இணைந்து 'கிராட்டிஃபை' என்ற புது நிறுவனத்தைத் தொடங்கினர். அத்துடன் Gratify.sg என்ற இணைய வர்த்தகத் தளத்தை உருவாக்கியுள்ளனர்.
இந்தப் பிரச்சினையைச் சமாளிக்கும் வண்ணம் கிராட்டிஃபையின் தளம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் பரிசுப் பொருட்களைத் நேரடியாக திறக்கும் அதே அனுபவத்தை மின்னிலக்க முறையில் பெறுநருக்கு அத்தளம் வழங்குகிறது என்றும் திரு ஸ்ரீவத்ஸன் தெரிவித்தார்.
சுகாதாரப் பராமரிப்பு, தொழில்நுட்பம், அழகுப் பராமரிப்பு, விளையாட்டு என்று பல பிரிவுகளில் கிராட்டிஃபையின் தளத்தில் பொருட்கள் வழங்கப்படுகின்றன. விரும்பிய பரிசுப் பொருட்களை வாங்கி அதன் இணைய குறிப்பைப் பரிசு பெறுபவர்களுக்கு அனுப்பிவைக்கலாம். மின்னியல் வடிவில் முதலில் அனுப்பி வைக்கப்படும் பரிசை பரிசு பெறுபவர்கள் திறந்து அந்த பொருள் என்ன என்பதை பார்க்கலாம்.
அந்தப் பொருள் வேண்டு
மெனில் அதை ஏற்றுக்கொள்ளலாம். இல்லாவிட்டால் அந்தப் பொருளின் மதிப்பிற்குச் சமமான வேறொரு பொருளைத் தேர்வு செய்யலாம்.
அல்லது அதே இணையத்
தளத்தில் அந்தப் பொருளுக்
குரிய ரொக்க மதிப்பை ஒரு சமூக நல அமைப்பிற்கு நன்கொடை செய்துவிடலாம்.

