விமானச் சுற்றுலாவுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

விமானச் சுற்றுலாவுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

2 mins read
61409c77-3637-43a4-8cb4-5f0fb998d9ec
விமானி அறையில் விளக்கம் அளிக்கும் திரு சரவணன் அய்யாவு, விளையாட்டுகளில் ஈடுபட்டதுடன் விமானி, சிப்பந்தி சீருடையை அணிந்து மகிழ்ந்த சிறார்கள். படங்கள்: ஸ்கூட் -
multi-img1 of 3

இர்­ஷாத் முஹம்­மது

கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான போரில் முன்­க­ளப் பணி­யா­ளர்­களா­கக் கள­மி­றங்­கி­னர் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை ஊழி­யர்­கள். இவர்­களை கௌர­விக்­கும் நோக்­கி­லும் எளி­தில் பாதிப்­ப­டை­யக்­கூ­டிய குடும்­பங்­கள், குழந்­தை­க­ளி­டம் விழாக்­கா­லக் குதூ­க­லத்­தைக் கொண்­டு­செல்­ல­வும் ஸ்கூட் விமான நிறு­வ­னம் ஆண்­டி­றுதி 'ஸ்கூட்-மஸ் சர்­பி­ரைஸ்' கிறிஸ்­து­மஸ் நிகழ்ச்­சிக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

இரண்டு வெவ்­வேறு நாட்­களில் மொத்­தம் நான்கு முறை நடத்­தப்­பட்ட கொண்­டாட்ட நிகழ்­வு­களில் 188 பேர் கலந்­து­கொண்­ட­னர். இவர்­க­ளைக் கிட்­டத்­தட்ட 100 ஸ்கூட் தொண்­டூழி­யப் பணி­யா­ளர்­கள் வர­வேற்று உப­ச­ரித்­த­னர்.

விமா­னச் சிப்­பந்­தி­கள் 32 பேர், விமா­னி­கள் 24 பேர் ஒன்று­சேர்ந்து 'போயிங் 787 டிரீம்­லை­னர்' விமா­னத்­தில் நடத்­திய நிகழ்ச்­சி­யில் மக்­கள் விரும்­பும் பல அம்­சங்­கள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தன.

நீண்­ட­கா­லம் வெளி­நா­டு­களுக்­குப் பய­ணம் செய்­ய­மு­டி­யாத சூழ­லில் வெகு­நாட்­க­ளுக்­குப் பின்­னர் விமா­னத்­தில் ஏறிய வரு­கை­யா­ளர்­க­ளுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்­தி­ருந்­தது.

விமா­னி­யின் அறை உட்­பட உணவு வைப்­பி­டம், விமா­னச் செயல்­மு­றை­கள், வெவ்­வேறு இருக்­கைப் பிரி­வு­க­ளின் அம்­சங்­கள் போன்­ற­வற்றை விமா­னச் சுற்­று­லா­வின்­போது வந்­தி­ருந்­த­வர்­க­ளால் காண­மு­டிந்­தது.

கண்­க­வர் அலங்­கா­ரங்­க­ளு­டன் அழ­கிய தோற்­றம் அளித்த விமான நிலை­யத்­தில், உற்­சா­க­மூட்­டும் பல விளை­யாட்­டுப் போட்­டி­களும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தன. விமானி­யின் அறைக்கு வரு­வோரை உப­சரித்து விளக்­கம் அளித்த விமானி­களில் ஒரு­வர் முதல் அதி­காரி சர­வ­ணன் அய்­யாவு.

"நமது சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­கள் நமது பாது­காப்­புக்­கா­க­வும் நல­னுக்­கா­க­வும் பல தியா­கங்­களைச் செய்­துள்­ள­னர். அவர்­களுக்கு விமா­னத்­தைச் சுற்­றிக் காட்டி முகங்­களில் மகிழ்ச்­சி­யை­யும் புன்­ன­கை­யை­யும் பார்த்­த­தில் அள­வில்லா மகிழ்ச்சி அடைந்­தேன்," என்­றார் சர­வ­ணன்.

"வான­வில்­லைப் பார்க்க வேண்­டு­மா­னால் கண்­டிப்­பாக மழைக்­காலத்­தைத் தாண்­டி­தான் ஆக­வேண்­டும். அது என்ன பெரிய சவால்? அதை­யெல்­லாம் நாம் தாண்டி வந்­து­விட்­டோம். சந்­தோ­‌‌ஷ­மாக இருங்­கள். 2021 எல்­லா­ருக்­கும் நல்ல ஆண்­டாக அமை­யும் என்­கிற நம்­பிக்கை இருக்­கிறது," என்று பகிர்ந்­தார் சர­வ­ணன்.

விமா­னத்­தின் உள்ளே வான­வில் நிறங்­களில் வண்ண விளக்கு­கள் ஒளி­யூட்­டப்­பட்டு வந்­தி­ருந்­த­வர்­க­ளுக்கு உணவு உப­ச­ரிக்­கப்­பட்­டது. விளை­யாட்­டு­களில் வெற்றி­பெற்ற குழந்­தை­கள் ஸ்கூட் விமானி சீரு­டை­ய­ணிந்து தங்­க­ளின் பெற்­றோர்­க­ளுக்கு உணவு உப­ச­ரித்த காட்­சி­யும் அனை­வ­ரின் மன­தை­யும் கொள்­ளை­கொண்­டது.

கொவிட்-19 கொள்ளை நோயின் தொடக்­கக் கட்­டத்­தில், சிங்­கப்­பூரர்­கள் நாடு திரும்­ப­வும் அத்­தி­யா­வ­சிய விநி­யோ­கச் சங்­கி­லி­கள் பாதிப்­பின்றி செயல்­ப­ட­வும் ஸ்கூட் நிறு­வனம் அதன் விமா­னங்­க­ளைத் தொடர்ந்து இயக்கி வந்­தது.

இருப்பினும் அதை­ய­டுத்து நிறு­வனத்­தின் விமா­னி­கள், சிப்­பந்­தி­களில் பல­ருக்­குச் சம்­ப­ளக் குறைப்பு ஏற்­பட்­டது. துணை வரு­மா­னத்­திற்­காக வேறு இடத்­தில் வேலை செய்ய வேண்­டிய கட்­டா­ய­மும் ஏற்­பட்­டது. நெருக்­கடி தந்த ஓர் ஆண்­டாக இருந்­தா­லும் ஸ்கூட் விமா­னச் சிப்­பந்­தி­களும் விமா­னி­களும் கைகோத்து இந்த அர்த்­த­முள்ள கிறிஸ்­து­மஸ் கொண்­டாட்ட நிகழ்­வுக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­த­னர்.