லிட்டில் இந்தியாவில் ‘பபல் டீ’

பொருட்­கள் வாங்­கிய கையோடு ஆவி­ப­றக்­கும் டீ, அதற்கு அரு­கில் வடை என்று மாலை நேரத்­தில் தேநீர் அருந்த லிட்­டில் இந்­தியா பக்­கம் பலர் ஒதுங்­கு­வர். இந்த மோகத்தை மெல்ல ‘பபல் டீ’ பக்­கம் திருப்ப லிட்­டில் இந்­தி­யா­வில் முதன்முறை­யாக ‘பபல் டீ’ கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

திரும்­பும் இட­மெல்­லாம் இந்­திய உண­வுக் கடை­களே இருக்­கும் லிட்­டில் இந்­தி­யா­வில், இக்­க­டை­யைத் திறந்து வைத்­து, பல­ரின் கவ­னத்தை ஈர்த்­துள்­ளார் ஒரு­வர்.

திரு மு.க. முஹம்­மது ஜஃபர் அலி (41), சுமார் 12 ஆண்­டு­க­ளாக லிட்­டில் இந்­தி­யா­வில் கைத்­தொ­லை­பேசி வியா­பா­ரம் நடத்தி வரு­கிறார்.

இரண்டு கைத்­தொ­லை­பேசி கடை­கள் வைத்­தி­ருந்த இவர், கொவிட்-19 நெருக்­க­டி­யால் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் உட்­பட தமது 90% வாடிக்­கை­யா­ளர்­களை இழந்­தார்.

என்று விடி­வுகாலம் வரும் என்று காத்­திருக்­கா­மல் காலத்­திற்கு ஏற்ப மாறிக்­கொள்ள முடி­வெ­டுத்­தார் ஜஃபர். புத்­தாக்­கச் சிந்­த­னை­யு­டன் தம் இரண்டு கைத்­தொ­லை­பேசி கடை­களில் ஒன்றை, இம்­மா­தம் 1ஆம் தேதி­மு­தல் ‘பபல் டீ’ கடை­யாக மாற்­றி­னார்.

‘பபல் டீ’ என்­பது 1980களில் தைவா­னின் தைச்­சுங் பகு­தி­யில் தோன்­றிய தேநீர் அடிப்­படை­யி­லான ஒரு பானம். கடந்த 10 ஆண்­டு­களாக இந்த பான வகை தைவா­னில் மட்­டு­மல்­லா­மல் சிங்­கப்­பூர், ஜப்­பான், சீனா, தென்­கொ­ரியா, மலே­சியா எனப் பல நாடு­களில் பிர­ப­ல­மா­கி­யுள்­ளது.

பலர் இதை வாரத்­தில் ஒரு முறை­யா­வது விரும்பி அருந்­தும் நிலை இன்று. பானத்­தில் சேர்க்­கப்­படும் மர­வள்­ளிக்­கி­ழங்கை வைத்து செய்­யப்­படும் மெல்­லிய உருண்டை வடிவ ‘பெர்ல்ஸ்’ (pearls), இந்த வகை பானத்­தின் சிறப்­பம்­சம்.

இந்த பானத்தை அனைத்து வய­தி­ன­ரும் விரும்பி அருந்­து­கின்­ற­னர்.

லிட்­டில் இந்­தி­யா­விற்கு வரும் வழக்­க­மான வாடிக்­கை­யா­ளர்­கள் பல­ருக்கு ‘பபல் டீ’ பரு­கிய பழக்­கம் இல்லை.

இவ்­வாறு இருக்க, இந்த இடத்­தில் ‘பபல் டீ’ கடையை எதற்­காக தொடங்­கி­னீர்­கள் என்று கேட்­ட­தற்கு, அவர் “தெரு முழுக்க இந்­திய உண­வுக் கடை­கள்­தான். நிறைய போட்டி. நானும் புதி­தாக ஓர் இந்­திய உண­வுக் கடையை திறந்­தி­ருந்­தால் அதில் புதுமை ஏதும் இருந்திராது.

“இதற்கு வர­வேற்பு கிடைக்­குமா இல்­லையா என்று இப்­பொ­ழுது எனக்­குத் தெரி­யாது. சவால்­கள் இருந்­தா­லும் களத்­தில் இறங்கி எனது யோச­னை­களை நடை­முறைப்படுத்தி அதன் சாத்­தி­யத்­தை சோதனை செய்து பார்ப்­பது முக்­கி­யம் என்று நான் நினைக்­கி­றேன்.

“நான் என் ஊழி­யர்­களி­ட­மும் எப்­போ­தும் கூறும் ஒன்று ‘மாத்தி யோசி’. அப்­படி மாற்றி யோசித்து எடுத்த முடி­வு­தான் இந்த பபல் டீ கடை,” என்­றார்.

இவர் நடத்­தும் ‘பபல் டீ’ கடை, ‘இச் எ கப்’ என்­னும் பபல் டீ நிறு­வ­னத்­தின் ஒரு கிளை­யா­கும்.

வீட்­டில் உள்ள தம் பிள்­ளை­கள் மட்­டு­மல்­லா­மல் பெரி­ய­வர்­களும் பபல் டீயை ஆசை­யாய் வாங்­கிக் குடிப்­ப­தைக் கவ­னித்­த­தில் இந்த யோசனை வந்­த­தா­கக் கூறி­னார்.

‘சில நேரம் மனி­தர்­களைவிட, ஒரு குவளை தேநீர் இத­மா­னது’ என்று எழு­தப்­பட்ட சுவ­ரொட்டி ஒன்று கடை வாச­லில் வைக்­கப்­பட்­டி­ருக்­கிறது.

இது பல­ரின் கவ­னத்­தை­யும் ஈர்த்­துள்­ளது. கடைக்கு வரும் வாடிக்­கை­யா­ளர்­கள் பலர் முதன்­மு­றை­யாக இந்த பானத்தை அருந்­து­ப­வர்­க­ளாக இருப்­ப­தா­க­வும் கூறி­னார் திரு ஜஃபர்.

கிரு­மித்­தொற்று பாதிப்­பி­னால் லிட்­டில் இந்­தி­யா­விற்கு வரும் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் எண்­ணிக்கை குறைந்­தி­ருந்­தா­லும், தங்­க­ளது குடும்­பங்­க­ளு­டன் வரும் சிங்­கப்­பூர்­வா­சி­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­தி­ருப்­ப­தாக கூறிய திரு ஜஃபர், வியா­பா­ரம் பெரு­கும் என்ற நேர்­மறை சிந்­தனை­யு­டன் செயல்­பட்டு வரு­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!