சிங்கை-இந்திய கலைஞர்கள் சங்கமித்த ‘ஆர்ட்வாக்’

வண்­ண­ம­ய­மான லிட்­டில் இந்­தி­யாவை மேலும் மெரு­கூட்­டி­யுள்ளது ‘ஆர்ட்­வாக் லிட்­டில் இந்­தியா’. வரு­டாந்­திர கலை­விழா கொண்­டாட்­ட­மான இது, சிங்­கப்­பூர் கலை வாரத்­தை­யொட்டி ஜன­வரி 22ஆம் தேதி முதல் பிப்­ர­வரி 2ஆம் தேதி வரை நடை­பெறுகிறது.

லாசால் கலைப் பள்ளி, சிங்­கப்­பூர் பய­ணத்­துறைக் கழகம், லிஷா எனப்­படும் லிட்­டில் இந்­தியா வர்த்­த­கர்­கள், மர­பு­டை­மைச் சங்­கம் ஆகி­யவை ஒன்­றி­ணைந்து நடத்­திய இந்­தக் கலை­விழா ‘பேசேஜ் ஆஃப் டைம்’ (Passage of time) எனும் கருப்­பொ­ரு­ளைக் கொண்­டது.

விழாவில் முத்­தாய்ப்­பாக விளங்­கியது லிட்­டில் இந்­தியா சுவர்­களை அலங்­க­ரித்த அழகுமிகு சுவ­ரோ­வி­யங்­கள்­. இந்த ஆண்டு மக்­கள் பார்த்து ரசிக்க மொத்­தம் நான்கு சுவ­ரோ­வியங்­கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டன.

ரோச்­சோ எம்­ஆர்டி நிலை­யத்­தில் இ­ருந்து சுவ­ரோ­வி­யக் கண்­காட்சி தொடங்­கு­கிறது. 50 டன்­லப் ஸ்ட்­ரீட்­டில் மித்ரா ஜீவானந்­த­னின் ‘விளக்கு பிபி’ என்­னும் விசித்­தி­ர­மான கலைப்­படைப்­பைக் காண முடி­யும். இது இந்­திய எண்­ணெய் விளக்கை மைய­மாகக் கொண்டு உரு­வாக்­கப்­பட்ட ஒரு புதுமை படைப்பு. இருளை நீக்கி ஒளி­யைக் கூட்­டு­வ­தைக் கரு­வா­கக் கொண்ட மித்­ரா­வின் படைப்பு, இந்த மந்­த­மான கிரு­மித்­தொற்று காலத்­தில் லிட்­டில் இந்­தி­யா­வுக்கு உற்­சாக வண்­ணங்­கள் சேர்த்து மேலும் உயிரூட்டும் நோக்­கில் உரு­வாக்­கப்­பட்­டது.

லிட்­டில் இந்­தி­யா­வில் பிராட்வே ஹோட்­ட­லின் முகப்­பில் ஏழு மாடி உய­ரத்­தில் நிற்­கும் சிங்­கப்­பூ­ரின் மிக உய­ர­மான சுவ­ரோ­வி­யங்­களில் ஒன்­றான ‘டான்­சிங் இன் யூனி­சன்’ (Dancing in Unison) படைப்­பும் இந்தக் கலை­வி­ழா­வின் சிறப்பு அம்­சம்.

பத்­ம­ஸ்ரீ விருது பெற்ற இந்­தி­யா­வின் பஜ்ஜு ஷியாம், சிங்­கப்­பூ­ரை சேர்ந்த நகர்ப்­பு­றக் கலை­ஞர் சாம் லோ ஆகி­யோர் இணைந்து படைத்­துள்ள இது, தனித்­து­வம் பெற்­றது. ‘மனி­தர்­களான நாம் இயற்­கை­யை­யும் சுற்­றுச்­சூ­ழ­லை­யும் மதிக்க வேண்­டும். சிர­ம­மான காலங்­களில் நாம் இயற்­கை­யு­டன் ஒன்­றி­ணைந்து வாழ்­வ­தற்கு அதுவே உத்­த­ர­வா­தம் அளிக்­கும்’ என்ற கருத்தை உள்­ள­டக்­கி­யது அந்த ஓவி­யம்.

இந்த ஓவி­யத்­தில் கோண்ட் கலை­யில் ஒரு பகு­தி­யான மரத்தை சித்­திரிக்­கிறது. பூமி­யில் நிலத்­தி­லி­ருந்து காற்­று­வரை அனைத்­தும் ஒன்றல்ல பல வகை­களில் இணைக்­கப்­பட்­டவை என்­பதைக் காட்­டு­கிறது. சுதந்­தி­ரத்­தின் அடை­யா­ள­மாக கிளை­க­ளின் மீது அமர்ந்­தி­ருக்­கும் வண்ண வண்­ணச் சிட்­டுக்­கு­ரு­வி­கள் திகழ்­கின்­றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!