தைப்பூச ஊர்வலம்: ஒரு மெய்நிகர் பயணம்

கொவிட்-19 சூழலால் காவடிகள் இன்றி, மேளதாளம் இன்றி மிக எளிமையான முறையில் கடந்த வியாழக்கிழமையன்று தைப்பூசத் திருவிழா நடந்து முடிந்தது. ஒவ்வோர் ஆண்டும் பக்தர்கள் மேற்கொள்ளும் ஊர்வலம் இவ்வாண்டு தைப்பூசத்தின்போது இல்லை. இந்தியர்களைத் தவிர்த்து பிற இனத்தவரும் மிக ஆவலோடு காண வரும் ஒன்று இந்தத் தைப்பூச ஊர்வலம்.

இந்நிலையில், தைப்பூசத் திருவிழாவில் பக்தர்கள் ஊர்வலம் செல்லும் பாதையில் மெய்நிகராகப் பயணம் மேற்கொள்ளும் ஓர் அனுபவத்தை ‘வேல் வேல்: A Sonic Walk’ என்ற இணைய முகவரியில் வழங்குகிறது ‘தி ஆர்ட்ஸ் ஹவுஸ்’. தளத்திற்குச் செல்வோரை ஈர்ப்பதற்காக இசை, காணொளி, தகவல்கள் போன்ற அம்சங்களை உள்ளடக்கியுள்ளது இந்த இணையத்தளம்.

தைப்பூசத் திருவிழாவின் முக்கியத்துவத்தையும் கொண்டாட்ட முறைகளைப் பற்றியும் சுவாரசியமாக விளக்கப்படுகிறது.

தைப்பூசத்தில் வாசிக்கப்படும் இசை, ஊர்வலம் இடம்பெறும் சாலைகளின் பெயர்கள், அவற்றின் வரலாறு ஆகியனவும் இந்தப் படைப்பில் அடங்கும். பிற நாட்டவர் சிங்கப்பூரர்களின் கலாசாரத்தையும் பண்பாட்டு வழிமுறைகளையும் அறிந்திட இது ஒரு நல்ல வாய்ப்பு. இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழா கொண்டாட்டங்கள் கணிசமாகக் குறைந்திருக்கும் நிலையில், சமூகம் தொடர்ந்து ஒன்றிணையும் வாய்ப்புகளை இந்த இணையத்தளம் ஏற்படுத்தித் தரும் என்று ஆர்ட்ஸ் ஹவுஸ் நம்புகிறது.

“இந்திய திருவிழாக்களில் குறிப்பாக தைப்பூசத்தில் சமூக உணர்வு என்பது ஒரு முக்கிய அம்சமாக விளங்குகிறது. மக்கள் தொடர்ந்து இந்த சமூக உணர்வைப் பெறுவதற்கு இந்த மெய்நிகர் ஊர்வல அனுபவம் கைகொடுக்கும் என்று நம்­பு­கி­றோம்.

“மேலும், ஒரு கதா­பாத்­தி­ரத்தை மட்­டுமே கொண்டு ‘பிரௌன் வாய்­சஸ்’ படைக்­க­வி­ருக்­கும் நாட­கக் காட்­சி­கள், சிங்­கப்­பூ­ரின் அடை­யா­ளத்­தில் ஒருங்­கி­ணைந்த அம்­ச­மாக தைப்­பூ­சக் கொண்­டாட்­டங்­கள் எவ்­வாறு விளங்­கு­கின்­றன என்­பதை வெளிப்­ப­டுத்­தும்,” என்றார் ‘வேல் வேல்: A Sonic Walk’ ஏற்பாட்டாளர் திரு ஸ்ரீதர் மணி.

ஊர்வலம் இடம்பெறும் லிட்டில் இந்தியா, சிலிகி ரோடு, ஃபோர்ட் கேனிங் போன்ற முக்கிய இடங்களைப் பற்றிய ஒலிப்பதிவுகளும் மெய்நிகர் ஊர்வலத்தில் இடம்பெற்றுள்ளன.

இம்மாதம் 28ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி வரை இத்தளம் இயங்கும். தளத்தை அனைவரும் தங்களின் கைத்தொலைபேசி மூலம் நாடலாம். இதற்கான இணைப்பு: velvel.sg

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!