‘கிருமியை ஒழிக்க ஒத்துழைப்பு அவசியம்’

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் சிங்­கப்­பூ­ரில் ஒரு­வர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக முதன்­மு­த­லில் கடந்­தாண்டு தொடக்­கத்­தில் அறி­விக்­கப்­பட்­ட­போது நாடே நடுங்­கிப் போனது.

கிரு­மி­யால் பாதிக்­கப்­பட்­ட­வர் யாரை­யெல்­லாம் சந்­தித்­தார், எங்­கெல்­லாம் சென்­றார் போன்ற விவ­ரங்­க­ளைச் சேக­ரிப்­ப­தற்­காக தொடர்பு­க­ளின் தட­ம­றி­யும் (Contact tracing) அதி­கா­ரி­கள் களத்­தில் இறக்­கப்­பட்­ட­னர்.

கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் முயற்­சி­யில் இவர்­களின் பங்கு மிக இன்­றி­ய­மை­யாதது. கொவிட்-19 கிருமி தொற்­றி­ய­வர்­க­ளு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்­த­வர்­களை உடனே கண்­ட­றிந்து அவர்­க­ளுக்கு 14 நாட்­கள் வீட்­டி­லேயே இருப்­ப­தற்­கான உத்­த­ர­வு பிறப்­பிக்­கப்­ப­டு­வதை இவர்­கள் உறுதி செய்­ப­வர்­கள்.

இதற்கு முன் விமா­னத் துறை­யில் இருந்த 39 வயது நர­சிம்­மன், கடந்த ஆண்டு ஏப்­ரல் மாதம் தொடர்­பு­க­ளின் தடங்­க­ளைக் கண்­டறி­யும் பணி­யில் ஈடு­ப­டத் தொடங்கி­னார்.

கிருமி தொற்­றி­ய­வ­ரு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்த குடும்ப உறுப்­பி­னர்­கள், நண்­பர்­கள், சக பணி­யா­ளர்­கள் போன்­ற­வர்­க­ளு­டன் தொடர்­பு­கொண்டு அவர்­க­ளி­டம் தொலை­பேசி வழி தக­வல் பெறு­வது அவ­ரின் வேலை.

கொவிட்-19 கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் ஒரு சில மாதங்­களில் உச்­சத்­தில் இருந்­த­போது நாளுக்­குச் சுமார் 100 பேரு­டன் திரு நர­சிம்­மன் போன்ற அதி­கா­ரி­கள் தொடர்­பு­கொள்ள வேண்­டி­ய­தாக இருந்­தது.

“ஒரே விவ­கா­ரத்­தைப் பற்றி இரு வேறு நபர்­க­ளி­டம் கேட்­கும்­போது, அவர்­க­ளி­ட­மி­ருந்து மாறு­பட்ட பதில்­கள் வரும். அத­னால் உண்­மை­யான தக­வலை உறு­தி­செய்­வ­தற்கு மேலும் சில­ரு­டன் தொடர்­பு­கொள்ள வேண்­டி­ய­தாக இருக்­கும்,” என்று பணி­யின் ஆரம்­பக்­கட்­ட சவால்­களைப் பற்றி பகிர்ந்­து­கொண்­டார் திரு நர­சிம்­மன்.

‘டிரேஸ்­டு­கெ­தர்’ பயன்­பா­டும் ‘சேஃப்எண்ட்ரி’ வரு­கைப் பதிவு முறை­யும் அறி­மு­க­மான பிறகு அதி­கா­ரி­க­ளின் வேலைப் பளு கணி­ச­மான அளவு குறைந்­தது.

ஒரு­வர் குறிப்­பிட்ட ஓர் இடத்­தில் எத்­தனை மணிக்கு இருந்­தார் என்ற தக­வலை உட­னுக்­கு­டன் பெறும் வச­தியை இவை ஏற்­ப­டுத்­தித் தந்­தன.

ஏற்­கெ­னவே திரட்­டப்­பட்ட தக­வல் இருந்­த­தால், அத்­த­க­வலை உறு­தி­செய்­வ­தற்கு மட்­டுமே பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளு­டன் தொடர்­பு­கொள்ள வேண்­டி­ய­தாக இருந்­தது.

முன்பு தொடர்­பு­க­ளின் தடங்­களைக் கண்­ட­றி­வ­தற்கு அதி­காரி­கள் சரா­ச­ரி­யாக நான்கு நாட்­கள் வரை எடுத்­துக்­கொண்­ட­னர்.

இந்த மின்­னி­லக்­கத் தீர்­வு­க­ளால் தடங்­க­ளைக் கண்­ட­றி­வ­தற்கு இவர்­க­ளுக்கு இரண்டு நாட்­கள்­கூட ஆவ­தில்லை.

வாரத்­தில் நான்கு நாட்­க­ளுக்கு 12 மணி நேர வேலை பார்க்­கும் திரு நர­சிம்­மன், சக பணி­யா­ளர்­களு­டன் ஓர் அணுக்­க­மான உற­வைக் கொண்­டி­ருப்­ப­தா­கக் கூறி­னார். தொடர்­பு­க­ளின் தட­ம­றி­யும் ஒட்­டு­மொத்த எண்­ணிக்கை குறை­யும்­போது தமது பணி மூலம் சக சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு உதவ முடி­வ­தில் பெரு­மி­தம் கொள்­வ­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

பாது­காப்­பான சூழலை நிலை­நாட்­டு­வ­தற்கு அனை­வ­ரின் ஒத்­துழைப்­பும் அவ­சி­யம் என்று கூறி ஓர் உதா­ர­ணத்­தைப் பகிர்ந்­து­கொண்­டார்.

உண­வங்­காடி நிலை­யத்­திற்­குச் சாப்­பி­டு­வ­தற்­காக ஓர் முதிய தம்­ப­தி­யர் சென்­றி­ருந்­த­னர். கண­வர் ‘டிரேஸ்­டு­கெ­தர்’ செய­லி­யைப் பயன்­ப­டுத்­து­ப­வர் என்­றா­லும் அவ­ரின் மனைவி பயன்­ப­டுத்­து­வ­தில்லை.

அதன் பின்­னர் கொவிட்-19 கிருமி தொற்­றி­ய­வ­ரின் அருகே இருந்­த­தால் அந்த கண­வ­ருக்கு வீட்­டில் தங்­கும் உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­ப­டு­வ­தாக இருந்­தது.

திரு நர­சிம்­மன் மேலும் விசாரித்­த­தில் அம்­மு­தி­ய­வர் அவ­ரின் மனை­வி­யு­டன்­தான் குறிப்­பிட்ட அந்த இடத்­திற்கு உணவு உண்­ணச் சென்­றி­ருந்­தார் என்ற புதிய தக­வல் கிடைத்­தது.

அப்­படி இரு­வ­ருமே ‘டிரேஸ்­டு­கெ­தர்’ செய­லி­யைப் பயன்­ப­டுத்­தாமல் போயி­ருந்­தால், அவர்­கள் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­கும் சாத்­தி­யம் அதி­க­ரித்­திருக்­க­லாம்.

தற்­போது தொடர்­பு­க­ளின் தடங்­க­ளைக் கண்­ட­றி­யும் குழுவை வழி­ந­டத்­தும் திரு நர­சிம்­மன், “தயவு­செய்து டிரேஸ்­டு­கெ­தர் செய­லி­யை­யும் சேஃப்எண்ட்ரி பதிவு முறை­யை­யும் பயன்­ப­டுத்­துங்­கள். அது உங்­க­ளை­யும் உங்­க­ளுக்கு நெருக்­க­மா­ன­வர்­க­ளை­யும் பாது­காப்­பாக வைத்­தி­ருக்க உத­வும்,” என்று அறி­வு­றுத்­தி­னார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!