காரைக்கால் அம்மையாரின் ‘திருவிரட்டை மணிமாலை’ இசைவட்டு வெளியீடு

63 நாயன்­மார்­களில் ஒரு­வ­ரான காரைக்­கால் அம்­மை­யார் அரு­ளிய ‘திரு­வி­ரட்டை மணி­மாலை’ தொகுப்­பில் 20 பாடல்­கள் உள்­ளன. இறை­வனை நேரா­கக் கண்டு பாடப்­பட்ட இத்­தி­ரு­மு­றைப் பாடல்­கள் தெய்­வீகம் நிறைந்­தவை. இம்­மா­தம் 4ஆம் தேதி, வியாழக்­கி­ழ­மை­யன்று ஸ்ரீ தெண்­டா­யு­த­பாணி ஆலய மண்­ட­பத்­தில் இந்த 20 பாடல்­களை இசை­வட்­டாக ‘கலா­மஞ்­சரி’ எனும் தமி­ழி­சைப் பரப்பு மன்­றம் வெளி­யிட்­டது.

கலா­மஞ்­ச­ரி­யின் நிறு­வ­னர் திரு­மதி சௌந்­தரநாயகி வயி­ர­வன் இப்­பா­டல்­க­ளைப் பாடி­யுள்­ளார். இப்­பா­டல்­க­ளுக்கு திரு­மதி கௌரி கோகுல் கர்­நா­டக ராகங்­களை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு இசை­வடி­வம் கொடுத்­தி­ருக்­கி­றார். மிரு­தங்­கத்­தில் திரு எஸ் தேவ­ரா­ஜ­னும் வய­லி­னில் திரு வெ சிவ­கு­மா­ர­னும் இணைந்­துள்­ள­னர்.

இசை­வட்­டில் உள்ள 20 பாடல்­களில், ஐந்து பாடல்­க­ளுக்­குச் சென்­னை­யைச் சேர்ந்த செல்வி சுருதி உமை­யாள் அபி­ந­யம் பிடித்­துள்­ளார். அம்­மை­யார் வாழ்ந்த இடங்­க­ளான காரைக்­கால், திரு­வா­லங்­காடு, குல­சே­க­ரப்­பட்­டி­னம் போன்ற இடங்­களுக்கு நேர­டி­யா­கச் சென்று காணொளி எடுத்து அவை இசை­வட்­டில் வரும் பாடல்­க­ளின் பின்­னணி­யில் இடம்­பெற்­றுள்­ளன.

டெப்போ ரோடு ஸ்ரீ ருத்­ர­கா­ளி­யம்­மன் ஆல­யத்­தில் காரைக்­கால் அம்­மை­யா­ரின் விக்­கி­ர­கம் ஒன்று உள்­ளது. அக்­கோ­வி­லி­லும் பாடல் காட்­சி­கள் எடுக்­கப்­பட்டு அவை­யும் இசை­வட்­டில் சேர்க்­கப்­பட்­டுள்­ளன. நிகழ்ச்­சி­யில் சிறப்பு பேச்­சா­ள­ரா­கக் கலந்­து­கொண்டு காரைக்­கால் அம்­மை­யார் அரு­ளிய பாடல்­களில் உள்ள சிறப்­பம்­சங்­களை தமிழ், ஆங்­கி­லம் என இரண்டு மொழி­க­ளி­லும் அழ­காக எடுத்­துக் கூறிய திரு வெங்­கட்­ரா­மன், இசை­வட்­டி­லும் அம்­மை­யா­ரின் வாழ்க்கை வர­லாற்றை சுருக்­க­மாக விவ­ரித்­துள்­ளார்.

இந்­நி­கழ்ச்­சிக்கு தக­வல், தொடர்பு மற்­றும் சுகா­தார மூத்த துணை அமைச்­சர் டாக்­டர் ஜனில் புதுச்­சேரி சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்டு இசை­வட்டை வெளி­யிட்­டார்.

இசை­வட்டு வெளி­யீட்­டி­லி­ருந்து கிடைக்­கப்­பெற்ற தொகை­யி­லிருந்து 50% ‘கிளப் 2 கேர்’ (Club 2 care) அற­நி­று­வ­னத்­திற்கு வழங்­கப்­பட்­டது. மன­நல ஆரோக்­கி­யத்­தைப் பேணு­வ­தில் இந்த அற­நிறுவனம் கவ­னம் செலுத்தி வரு­கிறது.

டாக்­டர் ஜனில் தமது உரை­யில், “பழ­மை­யா­னப் படைப்­பு­க­ளான கவி­தை­கள், இலக்­கி­யங்­க­ளைப் படைப்­ப­தற்கு கடி­ன­மான உழைப்­பும் முயற்­சி­யும் தேவை. இப்­ப­டிப்­பட்ட பாராட்­டிற்குரிய படைப்­பு­களை நமது இளைய தலை­மு­றை­யி­ன­ருக்கு எடுத்­துச் செல்ல வேண்­டும்,” என்று கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!