முப்பரிமாணத்தில் ‘துரியோதனன்’

கிரு­மித்­தொற்று விளை­வித்த பாதிப்­பு­க­ளால் கடந்த ஆண்டு நாம் நினைத்­துக்­கூட பார்த்­தி­ராத அள­விற்கு நம்­மைச் சுற்றி பல­வும் இணை­யம் வழி மெய் நிகர் பாணி­யில் நிகழ்த்­தப்­பட்­டன. அதில் மேடை நாடக படைப்­பு­களும் ஒன்று. இணை­யம் வழி படைக்­கப்­படும் மேடை நாட­கங்­களில், மேடை நாட­கச் சாரம் என்­பதை சிறி­த­ளவு இழந்து விடு­கி­றோம். நாட­கத்தை நேரில் பார்த்து ரசிக்­கும் உணர்­வுக்கு ஈடா­காது. இதற்கு தீர்­வாக அதி­ந­வீன தொழில்­நுட்­பத்­தின் உத­வி­யோடு ஒரு புதிய முயற்­சியை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது அகம் நாடக அமைப்பு.

மேடை நாட­கத்தை நாம் பார்த்து ரசிக்­கும் விதத்­தில் புது­மையை புகுத்தி இதி­காச இலக்­கி­யங்­களில் மிக முக்­கி­ய­மான படைப்­பான மகா­பா­ர­தத்­தின் துரி ­யோ­த­னன் கதா­பாத்­தி­ரத்தை முப்­ப­ரி­மாண மெய்­நி­கர் வடி­வில் நம் கண்­முன்னே கொண்டு வந்­துள்­ளது அகம் நாடக அமைப்பு.

சிங்­கப்­பூர் தமிழ் நாட­கத் துறை வர­லாற்­றின் முதல் முப்­ப­ரி­மாண மெய்­நி­கர் முயற்­சி­யான இது வால்­யூ­மெட்­ரிக் கேப்ச்­சர் (Volumetric Capture) என்ற தொழில்­நுட்­பத்­தைக் கொண்டு உரு­வாக்­கப்­பட்டு, ஆக்­மென்­டெட் ரியா­லிட்டி (Augmented reality)/ வெர்ச்­சு­வல் ரியா­லிட்டி (Virtual reality) வடி­வில் படைக்­கப்­ப­டு­கிறது.

“இந்தப் படைப்பு பல திறமை வாய்ந்த உள்­ளூர் கலை­ஞர்­களின் ஒரு­மித்த கன­வும் கடின உழைப்­பையும் கொண்டது. மேடை நாட­கத்­தின் எதிர்­கா­லத்­தில் தொழில்­நுட்­பம் எவ்­வித பங்கை ஆற்­ற­லாம் என்­ப­தற்­கான ஓர் ஆராய்ச்­சி­யா­கத்­தான் இந்தத் தயா­ரிப்­பைத் தொடங்­கி­னோம். மின்­னி­லக்க உல­கம், முப்­ப­ரி­மாண உல­கம், நாம் இருக்­கும் உல­கம், இவற்றை ஒருங்­கி­ணைத்து பார்­வை­யா­ளர்­கள் வீட்­டி­லி­ருந்­த­வாறே நாடக உல­கிற்­குள் நுழை­யும் ஓர் அனு­பவத்தை வழங்­கும் ஒரு முயற்­சி­தான் இது,” என்­றார் நாட­கத்­தின் இயக்­கு­ந­ரும் நிர்­வாக தயா­ரிப்­பா­ள­ரு­மான திரு சுப்­ர­ம­ணி­யம் கணேஷ்.

துரி­யோ­த­னன் நாட­கத்­தின் ஆரம்­பம், துரி­யோ­த­ன­னின் அரண்­மனை முகப்­பில் தொடங்கு­கிறது. அங்கு துரி­யோ­த­ன­னின் கதா­யு­தம், சகு­னி­யின் பகடை ஆட்டப் பலகை, கர்­ண­னின் கவ­சம் ஆகிய பொருட்­களின் பின் அடங்­கி­யுள்ள கதையைத் துரி­யோ­த­ன­னின் குரல் விளக்கு­கிறது. அடுத்த காட்­சி­யில் போர் முடிந்து ஓய்ந்த சூழ­லில் துரி­யோ­த­ன­னாகக் கம்­பீ­ர­மாக தோற்­றம் தரு­கி­றார் சிங்­கப்­பூ­ரின் பிர­பல முன்­னணி மேடை நாடகக் கலை­ஞர் திரு ரெ.சோம­சுந்­த­ரம்.

இந்த நாட­கத்­தில், இந்­திய இதி­காச வர­லாற்­றில் மிகக் கொடூ­ர­மான வில்­ல­னாக துரி­யோ­த­னன் தனது கண்­ணோட்­டத்­தை­யும் நியா­யத்­தை­யும் விளக்­கு­கி­றார். நினை­வில் நிற்­கும் அழா­கான வச­னங்­களை எழுதி இந்த மெய்­நி­கர் தமிழ் நாடக அனு­ப­வத்­திற்கு சிறப்பு சேர்த்­துள்­ளார் நாட­கத்­தின் கதா­சி­ரி­யர், பிர­ப­லமான மேடை நாடக எழுத்­தா­ளர் டாக்­டர் இள­வ­ழ­கன்.

“இப்­ப­டைப்­பில் என் எழுத்து இடம்­பெற்­றி­ருப்­பது மகிழ்­வா­க­வும், பெரு­மை­யா­க­வும் உள்­ளது. மேடை நாட­கத்­தின் அடுத்­தக்­கட்ட பய­ணத்­தில் இது ஒரு முக்­கிய கட்­டம். மூன்று மணி நேரத்­திற்­கான கதை, வச­னத்தைச் சுருக்கி மூன்று நிமிட ‘மாதி­ரிச் சு­ருக்­க­மாக’ குறைத்து, அதற்­குள் துரி­யோ­த­ன­னின் கதாபாத்­தி­ரத்­திற்­கான நியா­யத்தை, தமி­ழின் தேனினிமை தேயாது விளக்க வேண்­டும் எனும்­நோக்கத்தில் இவ்வரிகள் இயற்­றப்­பட்­டன,” என்­றார் இள­வ­ழ­கன்.

தயா­ரிப்­பின் தொடக்­க­விழா இம்­மா­தம் 20ஆம் தேதி சிங்­கப்­பூர் தேசிய கலைக்­கூ­ட­த்தில் நடை­பெற்­றது. விழா­வில் கலா­சார, சமூக, இளை­யர்துறை அமைச்­சர் எட்­வின் டோங் கலந்­து­கொண்டார்.

இந்நாட­கத்தை ‘துரி­யோ­த­னன்’ எனும் இல­வச செயலி வழி காண­லாம். VR கரு­வி­களை வைத்­தி­ருப்­ப­வர்­கள் நாடக காட்­சிக்­குள் சென்று மின்­னி­லக்க முறை­யில் நேர­டி­யாக காண்­பது போன்ற ஓர் உணர்வை அனு­ப­விக்­க­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!