அமரர் மு. தங்கராசன் நினைவேந்தல் கூட்டம்

அமரர் மு. தங்கராசன் நினைவேந்தல் கூட்டம்

1 mins read
2b99bd4b-15e7-49bf-b26e-fe1a5ee2b1f1
நினைவேந்தல் நிகழ்வை திரு பொன் சுந்தரராசு நெறிப்படுத்தினார். செய்தி, படம்: உமறுப்புலவர் முன்னாள் மாணவர் சங்கம் -

அம­ரர் மு. தங்­க­ரா­சன் அவர்­க­ளுக்­குச் சென்ற ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யன்று, மாலை ஆறு மணிக்கு இணை­ய­ம் வ­ழி நினை­வேந்­தல் கூட்­டம் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. இக்­கூட்­டம் உம­றுப்­பு­ல­வர் உயர்­நி­லைப்­பள்ளி முன்­னாள் மாண­வர் சங்­கத்­தின் தலை­மை­யில் நடை­பெற்­றது.

திரு. பொன் சுந்­த­ர­ராசு அவர்­கள் கூட்­டத்தை நன்­மு­றை­யில் நெறிப்­ப­டுத்தி நடத்­தும் பொறுப்பை ஏற்­றி­ருந்­தார்.

இந்த நினை­வேந்­தல் நிகழ்­வில் சமூ­கத் தலை­வர்­கள், கவி­ஞர்­கள், தமி­ழா­சி­ரி­யர்­கள், முன்­னாள் மாண­வர்­கள் எனப் பல­ரும் கலந்­து­கொண்­ட­னர். பேரா­சி­ரி­யர் வீர­மணி, அம­ரர் மு. தங்­க­ரா­சன் உரு­வப்­ப­டத்­திற்கு மாலை அணி­வித்து நிகழ்­வைத் தொடங்கி வைத்­தார்.

கூட்­டத்­தில் பல்­வேறு தமிழ் அமைப்­பு­க­ளின் தலை­வர்­களும் ஆசி­ரி­யர்­களும் முன்­னாள் மாண­வர்­களும் மு. தங்­க­ரா­சன் பற்­றிய நினை­வ­லை­க­ளைப் பகிர்ந்­து­கொண்­டனர். அத்துடன் தமி­ழுக்கு அவர் ஆற்­றி­யுள்ள அளப்­ப­ரிய சேவை­கள் குறித்­தும் பாராட்­டிப் பேசி­னர்.

இக்­கூட்­டத்­தில் மு. தங்­க­ரா­ச­னின் 'நாட்­டுப்­பு­றத்­தில்' என்­னும் நூல் வெளி­யீ­டும் நடை­பெற்­றது. நூலை அச்­சி­டும் பொறுப்பை ஏற்­றி­ருந்த திரு ஜோதி­நா­தன், நூல் உரு­வாக்­கப்­ப­ணி­யின் நூலா­சி­ரி­ய­ரோடு பணி­யாற்­றிய அனு­ப­வத்­தைச் சுவை­ப­டப் பகிர்ந்­து­கொண்­டார். அந்­நூல் குறித்­துத் தமி­ழ­றி­ஞர் சுப. திண்­ணப்­பன் அவர்­கள் அறி­மு­க­உரை நிகழ்த்­தி­னார்.

புனி­த­ம­ரம் ஸ்ரீபா­ல­சுப்­பிர­ம­ணி­யர் ஆலய நிர்­வா­கக்­கு­ழு­வின் தலை­வர் திரு. நாரா­ய­ண­சாமி நூலை வெளி­யிட்­டார்.

மோன்­டி­சோரி நிறு­வ­னக் குழு­வின் தலை­வர் முனை­வர் சந்­துரு முதல் நூலைப் பெற்­றுக்­கொண்­டார். இணை­யத்­தின் வழியே இந்­நூ­லின் சிறப்­பு­கள் குறித்து காந்தி­கி­ரா­மிய நிகர்­நி­லைப் பல்­க­லைக்­க­ழ­கப் பேரா­சி­ரி­யர் ஓ. முத்­தையா அவர்­கள் உரை­யாற்­றி­னார்.