கனிவன்பு நிறைந்த சேவைத் தரத்திற்கு அங்கீகாரம்

கனிவன்பு நிறைந்த சேவைத் தரத்திற்கு அங்கீகாரம்

3 mins read
91daaac2-5e24-44ef-b4c4-e1ecab6a1f86
(மேல்படம்) மூத்த பெல்மேன் பணியில் உள்ள 30 வயது மு.பன்னீர்குமார், சாதாரண ஊழியர் பிரிவில் விருது பெற்றார்.நிர்வாகி பிரிவில் 47 வயது திருவாட்டி ஆட்ரிக்கு விருது வழங்கப்பட்டது.படங்கள்: Ramada by Wyndham Singapore at Zhongshan Park, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 2

ப. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

விருந்­தோம்­பல் தொழில்­து­றை­யின் தலை­சி­றந்த சேவை­யா­ளர்­கள், இம்­மா­தம் நடந்­தே­றிய 2020ஆம் ஆண்டு தேசிய கனி­வன்பு தங்க விருது நிகழ்ச்­சி­யில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­ட­னர். சிங்­கப்­பூர் கனி­வன்பு இயக்­க­மும் சிங்­கப்­பூர் ஹோட்­டல் சங்­க­மும் இணைந்து ஏற்­பாடு செய்­தி­ருந்த இந்த வரு­டாந்­திர விருது நிகழ்ச்­சி­யில் மொத்­தம் 127 விரு­து­கள் வழங்­கப்­பட்­டன. விருது பெற்ற இரு­வரை தமிழ் முரசு நேர்­கண்­டது.

ஐந்து ஆண்­டு­க­ளாக தள­வா­டத் துறை­யில் பணி­யாற்­றி­விட்டு ஹோட்­டல் துறை­யில் நான்கு ஆண்­டு­களுக்கு முன் கால் பதித்­தார் திரு மு.பன்­னீர்­கு­மார். பர­ப­ரப்­பான வேலைச் சூழ­லில் இடம்­பெற வேண்­டும் என்று 'ரமடா பை வயிண்­டம் சிங்­கப்­பூர் எட் ஜொங்­‌‌‌ஷான் பார்க்' ஹோட்­ட­லில் 'பெல்­மேன்' பணி­யில் சேர்ந்­தார்.

ஹோட்­ட­லுக்கு வரும் விருந்­தினர்­க­ளின் பய­ணப் பெட்­டி­க­ளைக் கையாள்­வ­தும் அவர்­கள் ஹோட்­டலி­லி­ருந்து வெளியே செல்­வ­தாக இருந்­தால் அதற்­கான ஏற்­பா­டு­கள் செய்­வ­தும் இவ­ரது பணி­யா­கும். சுற்­றுப்­ப­ய­ணி­க­ளி­டம் உரை­யா­டு­வதில் இன்­பம் காணும் பன்­னீர்­குமார், பிற­ரின் தேவை­களை அறிந்து, தம்­மால் இயன்ற உத­வி­யைப் புரி­யும் குணம் படைத்­த­வர்.

சிங்­கப்­பூ­ரில் எத்­த­கைய வெளிப்­புற நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­ட­லாம் என்று நீண்­ட­கா­ல­மாக ஹோட்­ட­லில் தங்­கி­யி­ருந்த வெளி­நாட்­ட­வர் ஒரு­வர் திரு பன்­னீர்­கு­மா­ரி­டம் கேட்க, அவரை மெக்­ரிட்சி நீர்த்­தேக்­கப் பூங்­கா­விற்கு தமது ஓய்வு நாளில் தாமே அழைத்­துச் சென்­றா­ராம் திரு பன்­னீர்­கு­மார்.

"அடிக்­கடி அந்த ஹோட்­டல் வரு­கை­யா­ள­ரைச் சந்­தித்து பேசி­ய­தில் எங்­க­ளி­டையே நட்­பு­றவு மலர்ந்­தது. அத­னால் என் ஓய்வு நாளில் அழைத்­துச் சென்­றது எனக்கு இன்­பமே," என்று கூறி­னார் 30 வயது திரு பன்­னீர்­கு­மார்.

கடந்­தாண்டு தாய­கத்­திற்­குத் திரும்­பிய விருந்­தி­னர்­க­ளி­டம் இதற்கு­முன் பயன்­ப­டுத்­தப்­பட்ட பய­ணப் பெட்­டி­களை இல­வ­ச­மாக வழங்கி, அவர்­கள் பொருட்­க­ளைப் பத்­தி­ர­மாக விமான நிலை­யத்­திற்­குக் கொண்டு செல்ல உத­வி­னார்.

விமான நிலை­யத்­தில் காணா­மல் போன பய­ணப் பெட்­டி­கள், டாக்சி வாக­னத்­தில் விட்­டுச் சென்ற திறன்­பே­சி­கள் போன்­ற­வற்றை ஹோட்­டல் வரு­கை­யா­ளர்­களுக்கு மீட்­டுத் தர­வும் உத­வும் இந்­தச் சேவை­யா­ளர், சாதா­ரண ஊழி­யர்­கள் பிரி­வில் தேசிய கனி­வன்பு தங்க விருதை வென்­றார்.

மூத்த 'பெல்­மேன்'னாக பணி­யாற்­றும் திரு மு.பன்­னீர்­கு­மார் எதிர்­கா­லத்­தில் துறை சார்ந்த சான்­றி­த­ழுக்­குப் பயின்று, ஹோட்­டலின் வர­வேற்­புப் பிரி­வில் பணி­யாற்ற ஆசைப்­ப­டு­கி­றார்.

வர­வேற்­புப் பிரிவு தமது வேலைக்­கான இடம் இல்லை என்­றா­லும் அங்கு சென்று அவ்­வப்­போது உத­வு­வது திரு­மதி சி.ஆட்ரிக்கு வழக்­கம். தற்­போது அண்­டாஸ் ஹோட்­ட­லின் உணவு பானப் பிரிவு செயல்­பாட்டு பயிற்சி நிர்­வா­கி­யாக பணி­யாற்­றும் இவர், ஹோட்­டல் துறை­யில் 22 ஆண்டு­களுக்கு மேலான அனு­ப­வம் கொண்­ட­வர்.

கிராண்ட் ஹயட் ஹோட்­ட­லில் தம் பணி­யைத் தொடங்­கிய திரு­மதி ஆட்ரி, ஹயட் ஹோட்­டல்­கள் குழு­மத்­தில் இடம்­பெ­றும் அண்­டாஸ் ஹோட்­டல் உணவு பானப் பிரி­வின் செயல்­பாட்­டுப் பணி­யில் 2017ஆம் ஆண்­டில் அமர்த்­தப்­பட்­டார்.

இந்த 47 வயது நிர்­வாகி ஹோட்­ட­லின் உணவு பானப் பிரிவு சுமு­க­மா­கச் செயல்­ப­டு­வதை உறுதி­செய்­யும் அதே வேளை­யில் விருந்­தி­னர்­க­ளுக்கு ஹோட்­ட­லைச் சுற்­றிக் காட்­ட­வும் வர­வு­வேற்­புப் பிரி­வில் சக ஊழி­யர்­க­ளுக்கு விருந்­தி­னர்­க­ளின் தேவை­க­ளைப் பூர்த்தி செய்­ய­வும் உத­வு­வார்.

ஒரு­முறை, சீன மூதாட்டி ஒரு­வர் காலை உண­வுக்­காக ஹோட்­டல் உண­வ­கத்­திற்கு வந்­தி­ருந்­தார். அவ­ருக்கு ஆங்­கி­லம் தெரி­ய­வில்லை. திரு­மதி ஆட்ரி அவ­ரது கையைப் பிடித்து, உணவு வகை­களைப் பொறு­மை­யு­டன் பார்­வை­யி­டச் செய்து, கேட்­டதை வழங்­கி­னார்.

திருப்­தி­யு­டன் உண்ட அம்­முதி­ய­வர், திரு­மதி ஆட்­ரியை கட்­டிப்­பி­டித்து நன்றி தெரி­வித்­தா­ராம். ஹோட்­டல் வர­வேற்பு இடத்­தில், தங்­க­ளின் துறு­துறு குழந்­தை­களைப் பெற்­றோர்­கள் சமா­ளிக்க போராட, பழங்­கள் அல்­லது சித்­தி­ரம் வரை­யும் காகி­தங்­க­ளைப் பிள்­ளை­க­ளுக்­குக் கொடுத்து பெற்­றோர்­கள் ஓய்­வெ­டுக்க வகை­செய்­வா­ராம் இவர். ஒரு­வ­ரின் உடல், முக­பா­வம் கொண்டு, அவர்­க­ளது தேவை­களை உண­ரும் திறன் பல்­லாண்டு கால சேவை­யில் இவ­ருக்கு உரு­வா­னது.

"சிறந்த சேவை வழங்­கு­வது தொடர்­பில் கற்­றுக்­கொ­டுக்­க­லாம் ஆனால் கனி­வன்பு என்­பது உள்­ளத்­தி­லி­ருந்து வர வேண்­டும். பிற­ரோடு இயல்­பாக பழ­கும் குண­மும் பொறு­மை­யும் சேரும்­போது, இத்­துறை ஒரு­வ­ருக்கு ஏற்­ற­தாக விளங்­கும்," என்று கூறி­னார் இளம் ஊழி­யர்­க­ளுக்­குப் பயிற்சி வழங்­கி­வ­ரும் இந்த அனு­ப­வ­சாலி.

திரு­மதி ஆட்­ரிக்கு, நிர்­வாகி பிரி­வில் தேசிய கனி­வன்பு தங்க விருது வழங்­கப்­பட்­டது.

கொவிட்-19 சூழ­லி­லும் உயர்­தர சேவை வழங்க ஹோட்­டல் துறை கடப்­பாடு கொண்­டுள்­ளது என்­ப­தற்கு இவ்­வி­ரு­வ­ரும் சிறந்த எடுத்­துக்­காட்­டு­க­ளாக உள்­ள­னர்.