பயிற்சி அளிப்பதில் உன்னத விருது பெற்ற அதிகாரிகள்

எஸ்.வெங்­க­டேஷ்­வ­ரன்

 

கிரு­மிப் பர­வல் முறி­ய­டிப்பு நட­வ­டிக்­கை­கள் கடந்த ஆண்டு நடை­மு­றை­யில் இருந்­த­போது நேரடி வகுப்­பு­களும் பயிற்­சி­களும் ரத்து செய்­யப்­பட்­டன.

அப்­போது சிங்­கப்­பூர் சிறைச் சேவைக்­கான அதி­கா­ரி­களை உரு­வாக்­கும் மூத்த பயிற்­று­விப்­பா­ளர் துணை சூப்­ப­ரிண்­டன்­டண்ட் வேணு ஆர்ஷ், ஆக்­க­பூர்­வ­மான தீர்­வு­களை உரு­வாக்­கி­னார்.

அவ­ரி­டம் பயிற்சி பெற்­ற­வர்­களை உட­ல­ள­வி­லும் மன­த­ள­வி­லும் வலு­வாக வைத்­தி­ருந்­தார்.

கடந்த ஆண்­டுக்­கான உள்­து­றைக் குழு­வின் சிறந்த பயிற்­று­விப்­பா­ளர் விருது திரு வேணு­வுக்கு வழங்­கப்­பட்­டது.

வீட்­டி­லி­ருந்­த­ப­டியே 'ஸூம்' வழி தின­மும் ஒரு மணி நேரத்­திற்­குப் பயிற்சி வகுப்­பு­கள் நடத்­தி­னார் 41 வயது திரு வேணு.

பயிற்சி பெறு­ப­வர்­கள், தங்­க­ளின் கருத்து­க­ளைப் பயிற்­று­விப்­பா­ளர்­க­ளு­டன் தனிப்­பட்ட முறை­யில் பகிர்ந்­து­கொள்­வ­தற்­காக 'பென்ஜூ' (Penzu) என்ற மின்­னி­லக்­கக் குறிப்­பேட்டு தளம் ஒன்­றை­யும் அவர் பயன்­ப­டுத்­தி­னார்.

நேர­டிப் பயிற்­சி­கள் கடந்த ஆகஸ்ட் மாதத்­தில் மறு­ப­டி­யும் தொடங்­கி­ய­தால், குறு­கிய காலத்­திற்­குள் பயிற்சி வழங்க வேண்­டிய சூழ­லில் இருந்­த­னர் பயிற்­று­விப்­பா­ளர்­கள்.

அந்­நே­ரத்­தில் உடல் வலி­மை­யைக் கூட்­டும் பயிற்­சி­களில் சிறைச் சேவைக்­குத் தேவை­யான செய­லாற்­றல்­க­ளை­யும் உள்­ளடக்­கிய ஒரு புதிய பயிற்சி முறையை திரு வேணு மற்ற பயிற்­று­விப்­பா­ளர்­க­ளு­டன் இணைந்து உரு­வாக்­கி­னார்.

இம்­மா­தம் 11ஆம் தேதி­யன்று உள்­து­றைக் குழு பயிற்­சிக்­க­ழ­கத்­தில் இப்­பு­திய பயிற்சி முறை­யைச் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் காட்டி அதைப் பற்றி பேசி­னார் திரு வேணு.

"தாக்­கு­தல் அல்­லது சண்டை ஏற்­படும் சூழ்­நி­லை­யில் அதி­கா­ரிக்­குச் சில நொடி­கள் என்ன செய்­வ­தென்று தெரி­யா­மல் போக­லாம். ஆனால் அந்த சில நொடி­களில் நடக்­கக்­கூ­டி­யவை பல. இவ்­வாறு உடல் உறைந்து போகும் நேரத்­தில் கையா­ளக்­கூ­டிய மதி­நுட்ப உத்­தி­க­ளைத் தங்­க­ளின் நேர­டிப் பயிற்­சி­களில் சேர்க்­க­லாம்," என்­றார் சிங்­கப்­பூர் சிறைச் சேவை­யில் 20 ஆண்டு கால அனு­ப­வ­முள்ள திரு வேணு.

கடந்த ஆண்டு செப்­டம்­ப­ரில் தொடங்­கிய இந்­தப் பயிற்சி திட்­டம், அதி­கா­ர­பூர்­வ­மாக நவம்­பர் மாதம் நடப்­புக்கு வந்­தது.

தற்­போது நேரடி முறை­யில் மட்­டும் நடத்­தப்­படும் இந்த பயிற்சி முறை மூலம் இது­வரை 66 பேர் பய­ன­டைந்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே கடந்த ஆண்­டின் சிறந்த இணை பயிற்­று­விப்­பா­ளர் விருதை மேஜர் கண்­ணன் செல்­வ­ராஜ் பெற்­றார்.

பேரி­டர் உதவி மற்­றும் மீட்­புக் குழு­வில் (DART) 'ரோட்டா' தள­ப­தி­யாக பணி­யாற்­றும் அவர், அபா­ய­க­ர­மான பல சூழல்­களைச் சந்­தித்­துள்­ளார்.

"துவாஸ் பகு­தி­யில் ஏற்­பட்ட தீச்­சம்­ப­வம் ஒன்­றில் என் குழு­வு­டன் மீட்­புப் பணி மேற்­கொள்ள வேண்­டி­யி­ருந்­தது. பின்­னிரவு இரண்டு மணி முதல் காலை ஒன்­பது மணி வரை ஓயா­மல் தொடர்ந்து வெப்­பத்­தி­லும் புகை­மூட்­டத்­தி­லும் தீயை அணைக்க வேண்­டி­யி­ருந்­தது. இத்­த­கைய சூழ­லில் மன­த­ள­வில் வலிமை இருப்­பது அவ­சி­யம்," என்­றார் திரு கண்­ணன், 39.

சாலை விபத்­து­கள், உயிரை மாய்த்­துக்­கொள்­ளும் சம்­ப­வங்­கள், தொழிற்­சாலை விபத்­து­கள், ஆழத்­தில் நெருப்பு மூண்டு அணைக்­கச் சவா­லாக உள்ள தீச்­சம்­ப­வங்­கள் போன்ற பலதரப்பட்ட சூழல்களில் மீட்­புப் பணி­களில் ஈடு­பட்­டுள்­ளார் திரு கண்­ணன்.

'லயன் ஹார்ட்' செயல்­பாட்­டுப் படைப்­பி­ரி­வின் (Operation Lion Heart Contingent) தள­ப­தி­யாக வெளி­நாட்டு மீட்­புப் பணி­க­ளி­லும் ஈடு­பட்­டி­ருந்­தார் கண்­ணன். 2018ஆம் ஆண்­டில் லாவோ­சில் அணை ஒன்று இடிந்து விழுந்­த­போது 14 நாட்க­ளுக்கு அங்கு தேடி, மீட்­கும் பணி­களில் உத­வி­னார் அவர்.

வெள்­ளத்­தில் வீடு இழந்­தோ­ருக்­குத் தற்­கா­லிக முகாம்­களை அமைத்­தும் கொடுத்­தார். தமக்கு ஏற்­பட்ட இது­போன்ற அனு­ப­வங்­க­ளைப் பயிற்சி வகுப்­பு­க­ளின்­போது பகிர்ந்­து­கொண்டு வரு­கி­றார் திரு கண்­ணன்.

"உள்­ளூர் மட்­டு­மல்­லா­மல் வெளி­நாடு­களி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்­கும் பயிற்­சி­கள் வழங்­கி­யுள்­ளேன். நாம் வகுப்­பில் எவ்­வ­ள­வு­தான் பயிற்சி வழங்­கி­னா­லும் சம்­ப­வம் நிக­ழும்­போது வழக்­கத்­திற்கு மாறான பல­வும் நடக்­க­லாம். அதற்கு மன­த­ள­வில் தயார்ப்­ப­டுத்­திக்­கொள்ள எனது அனு­ப­வங்­க­ளைக் கூறு­கி­றேன்," என்­றார் அவர்.

குடி­மைத் தற்­காப்­புப் பயிற்­சிக் கழ­கத்­தில் நேர­டிப் பயிற்சி வச­தி­களை உரு­மாற்­றும் திட்­டப் பணிக்­கு­ழுக்­களில் ஓர் உறுப்­பி­ன­ரா­க­வும் இவர் இருக்­கி­றார்.

அது­போக 'டார்ட்' குழு­வில் சேரும் பங்­கேற்­பா­ளர்­கள், மேலும் பாது­காப்­பாக, பயிற்­சித் திட்­டத்தை வெற்­றி­க­ர­மாக நிறை­வேற்­றும் வாய்ப்­பு­களை அதி­கப்­ப­டுத்­தும் வகை­யில் குடி­மைத் தற்­காப்­புப் பயிற்­சிக் கழ­கத்­து­டன் சேர்ந்து புதிய திட்­டம் ஒன்றை உரு­வாக்­கும் பணி­யி­லும் ஈடு­பட்­டுள்­ளார் கண்­ணன்.

கொள்­ளை­நோய் சிக்­க­லால் உள்­து­றைக் குழு பயிற்­சிக் கழ­கத்­தைச் சேர்ந்த 1,500 பயிற்­று­விப்­பா­ளர்­கள் அவர்­க­ளின் பயிற்சி­களை மாற்­றி­ய­மைக்க வேண்­டி­யி­ருந்­தது. பயிற்­சித் திட்­டங்­க­ளைச் சிறப்­பாக மாற்­றி­ய­மைத்த பயிற்­று­விப்­பா­ளர்­க­ளுக்­குக் கடந்த ஆண்டு டிசம்­பர் மாதம் ஒன்­பது தனிப்­பட்ட விரு­து­க­ளை­யும் ஐந்து குழு விரு­து­களை­யும் உள்­து­றைக் குழு பயிற்­சிக்­க­ழ­கம் வழங்­கி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!