‘போற்–று–வோம் கொண்–டா–டு–வோம்’ பாராட்டு நிகழ்ச்சி

சிங்­கப்­பூர் தமிழ்ச் சமூ­கத்­திற்கு மட்­டு­மல்­லாது உல­க­ள­வில் தமிழ்ப்­பணி ஆற்றி வரும் முனை­வர் சுப.திண்­ணப்­பன் அவர்­க­ளுக்கு, மதுரை உல­கத் தமிழ்ச் சங்­கம் 2020ஆம் ஆண்­டுக்­கான தமி­ழக அர­சின் மொழி­யி­யல் அறி­ஞர் விருதை வழங்­கி­யுள்­ளது.

இதற்­குப் பாராட்டு தெரி­விக்­கும் வகை­யில் சிங்­கப்­பூ­ரில் செயல்­படும் அண்­ணா­மலை பல்­க­லைக்­க­ழக முன்­னாள் மாண­வர்­கள் சங்­க­மும் அழ­கப்பா கல்வி நிலைய முன்­னாள் மாண­வர் குழு­வும் இணைந்து 'போற்று­வோம் கொண்­டா­டு­வோம்' என்ற இணைய நிகழ்ச்­சியை மார்ச் 21ஆம் தேதி­யன்று நடத்­தின.

தமிழ்த்­தாய் வணக்­கம், வர­வேற்­புரை ஆகி­ய­வற்­றைத் தொடர்ந்து முனை­வர் சுப. திண்­ணப்­பன் ஆற்­றிய சாத­னை­க­ளைப் பற்­றிய காணொ­ளித் தொகுப்பு ஒன்று ஒளி­ப­ரப்­பப்­பட்­டது. இத­னை­ய­டுத்து, முனை­வர் திண்­ணப்­பன் பற்றி 'விருது வரும் தேடி விரைந்­தொளி­வார் ஓடி' என்ற தலைப்­பில் கவி­தை வாசித்­தார் அழ­கப்பா கல்வி நிலைய முன்­னாள் மாண­வர் குழு­வின் தலை­வர் திரு அ.கி வர­த­ராஜன்.

விழா­வில் சிறப்பு விருந்­தி­ன­ராகக் கலந்­து­கொண்ட சிங்­கப்­பூர் முன்­னாள் நிய­மன நாடா­ளு­ மன்ற உறுப்­பி­ன­ரான முனை­வர் இரா. தின­க­ரன், சிறப்­புரை ஆற்­றி­னார். நட­மா­டும் பல்­க­லைக்­க­ழ­க­மா­கத் திக­ழும் சுப. திண்­ணப்­பன் அவர்­கள் தமி­ழுக்­கும், தமிழ்ச் சமூ­கத்­துக்­கும் ஆற்­றிய பணி­க­ளை­யும் சாத­னை­க­ளை­யும் தொண்­டு­க­ளை­யும் எடுத்­து­ரைத்­தார்.

மேலும், சிங்­கப்­பூ­ரின் முன்­னாள் அதி­பர் திரு எஸ். ஆர். நாதன் அவர்­க­ளுக்­குத் தமிழ் ஆசா­னாக இருந்து பயிற்­று­வித்­தது, தமி­ழர் அல்­லாத 500க்கும் மேற்­பட்­ட­வர்­களை தமி­ழில் பேச வைத்­தது ஆகிய பெரு­மை­கள் முனை­வர் திண்­ணப்­பன் அவர்­க­ளையே சாரும் என்­றும் குறிப்­பிட்­டார்.

சுப. திண்­ணப்­பன் அவர்­க­ளுக்கு அண்­ணா­மலை பல்­க­லைக்­க­ழக முன்­னாள் மாண­வர்­கள் சங்­க­மும் அழ­கப்பா கல்வி நிலைய முன்­னாள் மாண­வர் குழு­வும் இணைந்து பொன்­னாடை போர்த்தி மாலை அணி­வித்­துச் சிறப்­புச் செய்­த­னர். அடுத்து சுப.திண்­ணப்­பன் அவர்­கள் ஏற்­புரை வழங்­கி­ய­து­டன் இப்­பா­ராட்டு விழா­வுக்கு நன்றி தெரி­வித்­தார்.

படிப்­ப­டி­யா­கத் தாம் கற்ற மொழி­யி­யல் அறிவே தமது பல முயற்சி­களுக்கு அடித்­த­ள­மாக அமைந்­த­தாக நினைவு கூர்ந்­தார் அவர்.

தமிழ் சார்ந்த பல சிங்­கப்­பூர் அமைப்­பு­க­ளின் தலை­வர்­களும் பிரதி­நி­தி­களும் இணைய நிகழ்­வில் கலந்­து­கொண்­ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!