பெண்களின் மனதில் ஊக்கத்தைத் தூண்டியது

'வானமே எல்லை!' மகளிர் கொண்டாட்ட நிகழ்ச்சி

சிங்­கப்­பூர் அர­சாங்­கம் 2021ஆம் ஆண்டை மக­ளி­ரைக் கொண்­டாடும் ஆண்­டாக அறி­வித்­துள்­ளதை ஒட்டி, பெண்­க­ளைப் பெரு­மைப்­படுத்­தும் வித­மாக சிங்­கப்­பூ­ரில் செயல்­படும் அண்­ணா­மலை பல்­கலைக்­க­ழக முன்­னாள் மாண­வர்­கள் சங்­கம், மக­ளிர் தின சிறப்பு நிகழ்ச்­சி­யாக "வானமே எல்லை" என்ற நிகழ்ச்­சியை மார்ச் 28ஆம் தேதி இணைய வாயி­லாக நடத்­தி­யது.

சமு­தாய மேம்­பாட்­டில் பெண்­களின் பங்­க­ளிப்பு இன்­றி­ய­மை­யாதது. மனித வாழ்­வி­யலை அடுத்­த­ கட்­டத்­துக்கு முன்­னேற்­றிச் செல்­வ­தில் பெண்­கள் பெரும் சக்தி­யாகத் திகழ்­கி­றார்­கள் என்­றால் அது மிகை­யா­காது.

சாதிக்கத் துடிக்­கும் பெண்­களின் மன­தில் மேலும் ஊக்­கத்­தைத் தூண்­டும் வண்­ணம் தன்­முனைப்­புப் பேச்­சா­ளர் திரு­மதி சரோ­ஜினி பத்­ம­நா­தன் சிறப்­புரை ஆற்றினார்.

கடந்த 36 ஆண்­டு­க­ளாக சிங்­கப்­பூர் பொதுத்­து­றை­யில் பல்­வேறு தலை­மைத்­து­வப் பொறுப்­பு­களில் பணி­யாற்­றிய அனு­ப­வத்­து­ட­னும் பெண்­கள் மற்­றும் குடும்­பம் போன்ற தலைப்­பு­களில் பல பயி­ல­ரங்­கு­களை நடத்­திய நிபு­ணத்­து­வத்­து­ட­னும் திரு­மதி சரோ­ஜினி பத்­ம­நா­தன், தன்­னம்­பிக்­கை­தான் பெண்­க­ளின் வளர்ச்­சிக்­கான மூல­த­னம் என்ற உட்­க­ருத்­து­டன் பெண்­கள் மேம்­பாட்­டின் முக்­கி­யத்­து­வம் பற்றி எடுத்­து­ரைத்­தார்.

பெண்­கள் மேன்­மே­லும் வளர்ந்து வெற்­றி­பெற 'HHH' (Head + Heart + Hand) என்ற உத்திமுறையைக் கற்­பித்­தார்.

இதன்­வழி அவர் கூறி­யது, பெண்­க­ளின் உயர்­வுக்கு அவர்­களின் சிந்­த­னை­கள் தெளி­வா­க­வும் புது­மை­யா­க­வும் சிறந்த திட்­ட­மி­டு­த­லும் வேண்­டும், பெண்­க­ளின் சீரிய சிந்­த­னை­களை அவர்­கள் முழு­ம­ன­து­ட­னும், மன­வ­லி­மை­யு­டன் அனைத்து செயல்­க­ளை­யும் கடின உழைப்­பின் மூலம் வெற்­றி­க­ர­மாக நிறை­வேற்ற வேண்­டும் என்­பதே இதன் விளக்­கம்.

'உள்­ளம் என்­பது எப்­போ­தும் உடைந்து போகக்­கூ­டாது; என்ன இந்த வாழ்க்கை என்று ஒருபோதும் எண்­ணம் தோன்­றக்­கூ­டாது' என்ற வரி­களை மேற்­கோள் காட்டி, பல­வித எடுத்துக்­காட்­டு­க­ளு­டன் பல பரி­மா­ணங்­களைத் தொட்­டுப் பேசிய அவர், தமது சிறு வய­தில் தன்­னம்­பிக்­கை­யு­டன் தாம் மேற்­கொண்ட கடல்­வ­ழிப் பய­ணத்­தைப் பற்றி விளக்­கிக் கூறி அனை­வ­ரது மன­தி­லும் தன்­னம்­பிக்­கையை நிறைத்து தமது உரையை நிறைவு செய்­தார்.

மேலும், திரு­மதி விஜி ஜெக­தீஷ் 'வணி­கம் மற்­றும் தொழில்­மு­னைவு' என்ற தலைப்­பிலும் முனை­வர் கண்­ணாத்­தாள் நட­ரா­ஜன் 'கல்­வி­யின் சிறப்பு' என்ற தலைப்­பி­லும் திரு­மதி மஹா­லட்­சுமி வெங்­கட்­ரா­மன் 'பெற்­றோ­ரும் பிள்ளை வளர்ப்­பும்' என்ற தலைப்­பி­லும் திரு­மதி அல­மேலு ஐங்­க­ரன் 'சமூ­க சேவை' என்ற தலைப்­பிலும் தங்­க­ளது சொந்த அனு­ப­வங்­க­ளைப் பகிர்ந்­து­கொண்டு அனை­வ­ரது மன­தி­லும் நம்­பிக்­கையை விதைத்­த­னர்.

இன்­றைய அதி­ந­வீன, அதி­வேக உல­கத்­தில் பெண்­கள் மன­உ­று­தி­யு­ட­னும் மனஆற்­ற­லு­ட­னும் உந்­து­தல்­மிக்க வெற்­றிப் பய­ணத்தை அமைத்­துக்­கொள்ள பாதை காட்­டிய "வானமே எல்லை" நிகழ்ச்சி முற்­றி­லும் பெண்­களே வழி­ந­டத்­திய பெண்­க­ளுக்­கான நிகழ்ச்சி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!