தமிழ் வழி இளையர்களுக்கு இயற்கை உணர்வூட்டிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

கி. ஜனார்த்­த­னன்

காலத்­தின் சவால்­க­ளுக்­குத் தீர்­வு­கள் ஆரா­ய­வேண்­டும், அவற்றை இளை­யர்­க­ளி­டம் சென்று சேர்க்க வேண்­டும் என்ற நோக்­கத்­து­டன் 'தமிழ்ச்­சூ­ழ­லில் சுற்­றுச்­சூ­ழல்' என்ற உரை நிகழ்ச்­சிக்கு சிங்­கப்­பூர் கடை­ய­நல்­லூர் முஸ்­லிம் லீக் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

இதில் தொடக்­கப்­பள்ளி முதல் தொடக்­கக்­கல்­லூரி வரை­யி­லான நிலை­க­ளைச் சேர்ந்த ஆறு படைப்­பா­ளர்­கள் 'ஸூம்' இணைய நேரடி காணொ­ளித்­த­ளத்­தில் இயற்கை மற்­றும் சுற்­றுப்­பு­றப் பாது­காப்பு ஒட்­டிய தலைப்­பு­களில் பேசி­னர்.

கிட்­டத்­தட்ட ஒரு மணி நேரம் நீடித்த இந்த மெய்­நி­கர் நிகழ்ச்­சி­யில் அப்­ராஸ், மகேஷ்­கு­மார் ரஷ்­மிதா, சிங்­கா­ர­வேலு ரஞ்­சனி, நந்­தினி அழ­கப்­பன், அனிதா சுகந்­த­ராஜ், வை.நர்த்­த­ன­நிலா ஆகிய மாண­வர்­க­ளு­டன் முனை­வர் ஜெ. சுந்­த­ர­மூர்த்தி உரை­யாற்­றி­னார்.

புரா­தன தமிழ் இலக்­கி­யங்­க­ளி­லி­ருந்து மாண­வர்­கள் மேற்­கோள் காட்­டித் தத்­தம் தலைப்­பு­களை ஆராய்ந்­த­னர். நெகி­ழிப் பையின் தீமை­க­ளைப் பற்றி உரை­யாற்­றிய தொடக்­க­நிலை ஐந்து மாண­வர் அப்­ராஸ், நெகிழி தயா­ரிப்பு மற்­றும் குப்பை போடு­வ­தால் ஏற்­படும் சுற்­றுப்­பு­றக் கேடு பற்றி விளக்­கி­ய­து­டன் முடிந்­த­வரை நெகி­ழிப் பையின் பயன்­பாட்­டைக் குறைப்­பது எப்­படி என்­ப­தை­யும் கூறி­னார்.

உலக வெப்­ப­ம­ய­மா­தல் பற்றி பேசிய தொடக்­க­நிலை ஐந்து மாணவி மகேஷ்­கு­மார் ரஷ்­மிதா, இதற்­குப் பெரும் கார­ண­மாக இருக்­கும் கரி­ய­மில வாயு­வைப் பற்­றி­யும் அதைக் குறைப்­பது எப்­படி என்­ப­தை­யும் விளக்­கி­னார்.

தண்­ணீர் சேமிப்பு தொடர்­பில் மாண­வர் ரஞ்­சனி, சில வழி­மு­றை­க­ளைப் பட்­டி­ய­லிட்­டார்.

மாண­வி­கள் அனிதா சுகந்­த­ராஜ் மற்­றும் வை.நர்த்­த­ன­நிலா, திருக்­கு­றள், வள்­ள­லார் பாடல்­கள் போன்­ற­வற்றை மேற்­கோள் காட்டி இயற்­கை­யைப் பற்­றிய உணர்வு தமிழ் இலக்­கி­யத்­து­டன் பின்­னிப் பிணைந்­தி­ருப்­ப­தைச் சுட்­டி­னர்.

தமிழ் இலக்­கி­யச் சான்­று­க­ளைப் பற்றி பார்­வை­யா­ளர்­க­ளுக்கு மேலும் உணர்த்­தும் வகை­யில் சிறப்­புப் பேச்­சா­ள­ரும் நீ ஆன் பல­துறைத் தொழிற்­கல்­லூ­ரி­யின் சுற்­றுப்­புற, நீர் தொழில்­நுட்­பத் துறை­யின் மூத்த ஆய்­வா­ள­ரு­மான சுந்­த­ர­மூர்த்தி ஜெய­ரா­மன் பேசி­னார். நாட்­டின் வளர்ச்­சிக்­குச் சுற்­றுப்­பு­றப் பாது­காப்­பின் பங்கு இன்­றி­ய­மை­யா­தது என்று அவர் தெரி­வித்­தார்.

வாழை­யி­லை­யில் உணவு உண்­ப­தா­லும் தண்­ணீர் பரு­கச் செப்­புக் குவ­ளை­யைப் பயன்­ப­டுத்­து­வ­தா­லும் ஏற்­படும் நன்­மை­களை விளக்­கி­னார். இயற்­கை­யைப் பற்­றிய கலந்­து­ரை­யா­டல் தமி­ழில் மிகப் பழ­மை­யா­னது என வளர்­த­மிழ் இயக்­கத்­தின் ஆலோ­ச­கர் திரு ஆர். ராஜா­ராம் தெரி­வித்­தார்.

தற்­போ­தைய சூழ­லில் நேரடி காணொ­ளித்­த­ளம் வழி பார்­வை­யா­ளர்­களை ஈர்க்­கும் வகை­யில் ஏற்­பாட்­டா­ளர்­கள் நிகழ்ச்­சியை நடத்­திய முயற்­சி­யை­யும் அவர் பாராட்­டி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!