சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம், பாவேந்தர் விழாவை இவ்வாண்டு தமிழ்மொழி விழாவின் ஓர் அங்கமாக ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஆண்டு உவமைக்கவிஞர் சுரதாவின் நூற்றாண்டு என்பதால் அவரைப் போற்றும் விதமாக அவரது படைப்புகளை ஒட்டிச் சுழலும் சொற்போர் அமையும்.
எதிர்வரும் 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு 'ஸூம்' வழி இந்நிகழ்வு நடைபெறும். உவமைக் கவிஞர் சுரதா பெரிதும் முக்கியத்துவம் தந்து பாடியது தாய்மொழிச் சிந்தனையா? திரைத்துறை பங்களிப்பா? பகுத்தறிவு சிந்தனையா? என்னும் தலைப்பில் பேச்சாளர்கள் வாதிடுவர். நிகழ்ச்சியின் இணைப்பு:
https://us02web.zoom.us/j/89324592112
Meeting ID: 893 2459 2112

