வாலியின் புகழ் பாடிய நிகழ்வு

2 mins read
99f33ffe-af2f-44c1-8e64-00b4ef69c83a
கவிஞர் வாலியின் புகழ் பாடிய நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தொடங்கி வைத்த தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் (வலமிருந்து 2வது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஆர்த்தி சிவ­ரா­ஜன்

சித்­தி­ரைப் புத்­தாண்டு நிகழ்ச்­சி­கள் சிறப்­பாக இடம்பெற்று வரு­வதை கண்டு மகிழ்ச்சி அடை­வதாகவும் தமிழ் மொழி தொடர்ந்து சிங்­கப்­பூ­ரில் வாழும் மொழி­யாக இருக்க வேண்­டும் என்ற நோக்­கத்­து­டன் அனைத்து சமூக அமைப்­பு­களும் ஈடு­பட்டு வருவதாகவும் தொடர்பு, தக­வல் அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ரன் தெரிவித்தார்.

"தற்­போது லிட்டில் இந்­தி­யா­வில் உள்ள தொழில் முனை­வர்­கள் அனை­வ­ருமே கொவிட்-19 சூழ் ­நி­லைக்கு ஈடு­கொ­டுத்து வித்­தி­யா­ச­மான முறை­யில் வியா­பா­ரத்­தைத் தொடர்ந்து நடத்தி வரு­வதை பார்த்து நான் மிக்க மகிழ்ச்சி அடை­கி­றேன். அதே நேரத்­தில், பொரு­ளி­யலுக்கு அப்­பாற்­பட்டு, நம் கலா­சா­ரங்­கள் சம்­பந்­தப்­பட்ட நிகழ்ச்­சி­க­ளை­யும், நம் மொழி மற்­றும் பாரம் ­ப­ரி­யம் தொடர்பான நிகழ்ச்­சி­க­ளை­யும் தொடர்ந்து நடத்த வேண்­டும்," என்­றார் திரு ஈஸ்­வ­ரன்.

'லி‌‌‌ஷா' எனப்­படும் லிட்­டில் இந்­தியா வர்த்­த­கர்­கள், மர­பு­டை­மைச் சங்­கம் இம்­மா­தம் 15ஆம் தேதி நடத்­திய தமி­ழும் இசை­யும் என்ற நிகழ்ச்­சி­யில் சிறப்பு விருந்­தி­ன­ராகக் கலந்­து­கொண்டு இவ்­வாறு பேசி­னார் அமைச்­சர் ஈஸ்­வ­ரன்.

@Officiallishasg என்ற லி‌‌‌ஷா­வின் ஃபேஸ்புக் பக்­கத்­தில் இந்­நி­கழ்ச்சி மெய்­நி­க­ராக ஒளி­ப­ரப் ­பா­னது. இந்த நிகழ்ச்­சிக்கு ஆத­ர­வ­ளித்த 28 பங்­கா­ளி­க­ளுக்கு அமைச்­சர் ஈஸ்­வ­ரன் விரு­து­களை வழங்­கி­னார். அவர்­க­ளின் ஆத­ர­வுக்கு நன்றி தெரி­விக்­கும் வகை­யில் அன்­ப­ளிப்பை வழங்­கி­யது லி‌‌‌ஷா. 'டயா­ஜியோ' (Diageo) நிறு­வனத்­தில் அனைத்­து­லக ரீதி­யில் வணிகச் சின்ன நிர்வாகியாகப் பணி­யாற்­றும் ஜெய­சுதா சமுத்­தி­ரன் இந்­நிகழ்ச்­சி­யைத் தொகுத்து வழங்­கி­னார்.

கவிஞர் வாலியின் படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு வகையான பாடல்களும் நடனங் களும் நடைபெற்றன. திருமதி ஜெய­சுதா, பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் கவிஞர் வாலி பற்றிய பல சுவாரசியமான விவ ரங்களைப் பகிர்ந்தார். வெவ்வேறு உள்ளூர் கலைஞர்கள் திறமைகளை வெளிப்படுத்தி கவிஞர் வாலியின் படைப்புகளுக்கு உயிரூட்டினர்.

இவ்விழாவிற்கு ஆதரவு வழங்கிய அரசாங்கத்திற்கும் அனைத்து வணிக நிறுவனங் களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்ட லி‌‌‌ஷாவின் தலை­வ­ரான திரு சி. சங்­க­ர­நா­தன், "கடந்த ஆண்டு இந்த விழாவை நடத்த முடியவில்லை. இந்த ஆண்டு நிச்சயமாக நடத்த வேண்டும் என்ற முடிவை எடுத்தேன்," என்றார்.

"நிதிப்பற்றாக் குறையின் காரணமாக கிட்டத்தட்ட 90 பேரை தொடர்பு கொண்டேன். அனை வரும் இந்த விழாவிற்கு ஆதரவு அளிக்க உறுதியளித்தனர். சில சீன வணிகர்களும் ஆதரவு வழங் கியது மிகவும் உற்சாகமாக இருந் தது," என்றும் அவர் தெரிவித்தார்.