58 வயதிலும் குறையாத வேகம்

ப. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

திரு ரா. சுப்­பி­ர­ம­ணி­யத்­துக்கு வேலைக்­குச் செல்­லும் வய­தில் இரண்டு மகள்கள் உள்­ள­னர்.

58 வயது ஆகி­யுள்ள நிலை­யில் தமது ஓய்­வு­கா­லத்தை ஏற்­கெ­னவே அவர் திட்­ட­மிட்­டு­விட்­டார்.

ஆனால் அதற்கு இன்­னும் பல ஆண்­டு­கள் இருப்­பதை அவ­ரது அன்­றாட நட­வ­டிக்­கை­கள் புலப்­

ப­டுத்­து­கின்றன.

தமது விருப்­ப­தற்கு இணங்க சாத­னை­களைப் புரிந்து வரு­கி­றார் சொத்து முக­வ­ரான திரு சுப்­பி­ர­ம­ணி­யம். கடந்த ஆண்டு 10 நாட்­களில் ஆக அதிக தூரம் நடந்­தி­ருக்­கும் (501,370 அடி­கள்) சாத­னை­யை­யும் சிங்­கப்­பூ­ரில் ஆக அதி­க­மாக 103.6 கிலோ மீட்­டர் நடந்­துள்ள சாத­னை­யை­யும் அவர் படைத்­துள்­ளார்.

அதோடு சக நண்­பர்­க­ளு­டன் இணைந்து குழு­வில் ஐவ­ராக 100 கிலோ மீட்­டர் தூரம் நடந்து சாதனை புரிந்­துள்­ளார்.

திரு சுப்­பி­ர­ம­ணி­யத்­தின் இந்­தச் சாத­னை­கள் சிங்­கப்­பூர் சாதனை புத்­த­கத்­தில் இடம்­பெற்­றுள்­ளன.

அண்­மைய கால­மா­கவே திரு சுப்­பி­ர­ம­ணி­யம் அனைத்­து­லக நெடுந்­தொ­லைவு நடைப் போட்­டி­களில் சிங்­கப்­பூ­ரைப் பிரதி­

நி­தித்து பதக்­கங்­களை வென்­றுள்­ளார். தற்­போ­தைய கொவிட்-19 கிரு­மித்­தொற்று சூழ­லைக் கருதி அனைத்­து­லக போட்­டி­கள் ஒத்­தி­ வைக்­கப்­பட்டுள்ள நிலை­யில்,

உட­லு­று­தியை நிலை­நாட்­டும் வகை­யில் தொடர்ந்து புதிய இலக்குகளை எட்­டும் இவ­ரது கடப்­பாடு பிர­மிக்க வைக்­கிறது.

அந்த வரி­சை­யில், இம்­மா­தம் 8ஆம், 9ஆம் தேதி­களில் அவர் தொடர்ச்­சி­யாக 12 மணி நேரத்­துக்கு 84.05 கிலோ மீட்­டர் தூரம் நடந்­தார். 12 மணி நேரத்­தில் ஆக அதி­க­மான கிலோ­மீட்­டர் நடந்த வீரர் எனும் பெருமை திரு சுப்­பி­ர­ம­ணி­யத்­தைச் சேரும்.

"நெடுந்­தொ­லைவு நடை­யில் ஈடு­ப­டு­வ­தற்கு மனதை திட­மாக வைத்­துக்­கொள்­வது அவ­சி­யம், அது சவால்­மிக்­கது.

"பிறரை அஞ்­சி­டச் செய்­யும் தூரத்தை கடப்­ப­தில்­தான் எனக்கு விருப்­பம்," என்­றார் திரு சுப்­பி­ர­ம­ணி­யம்.

நெடுந்­தொ­லைவு நடை என்­றால் அது சுப்­பி­ர­ம­ணி­யம்­தான் என்று சொல்­லும் அள­வுக்கு, 30 நாட்­களில் 1.5 மில்­லி­யன் அடி­கள் நடந்து மீண்­டும் இம்­மா­தம் மற்­றொரு சாத­னையை அவர் நிகழ்த்­தி­யுள்­ளார். 1.5 மில்­லி­யன் அடி­கள் சுமார் 1,200 கிலோ மீட்­டர் தூரத்­திற்­குச் சமம்.

இந்­தச் சாத­னை­யைப் படைக்க அவர் கிட்­டத்­தட்ட ஒரு மாதத்­துக்கு தின­மும் சரா­ச­ரி­யாக 40 கிலோ மீட்­டர் நடை பயிற்­சி­யில் ஈடு­பட்­டார். இது நாளுக்கு ஒரு நெடுந்­தொ­லைவு நடைப் போட்­டி­ யில் பங்­கெ­டுப்­ப­தற்கு ஈடா­கும்.

"இளம் வய­தில் திரு சுப்­பி­ர­ம­ணி­யம் ஒரு முன்­னணி நடைப் போட்டி வீர­ராக திகழ்ந்­த­வர். கிட்­டத்­தட்ட 16 ஆண்­டு­கள் இடை­வெ­ளிக்­குப் பிறகு, மீண்­டும் அனைத்­து­லக நடைப் போட்­டி­களில் பங்­கு­பெற்று பதக்­கங்­களை வென்­றுள்­ளார்.

"இவ்­வ­ய­தில் அவர் தொடர்ந்து சாதனை புரி­வதை குறித்து பெரு­மி­தம் கொள்­கி­றோம்," என்­றார் சிங்­கப்­பூர் சாதனை புத்­த­கத்­தின் தலை­வர் திரு ஒங் எங் ஹுவாட்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!