தாயன்புக்கான ஏக்கத்தை பிரதிபலிக்கும் 'நீ இல்லாமல்'

தாயன்புக்கான ஏக்கத்தை பிரதிபலிக்கும் 'நீ இல்லாமல்'

2 mins read
94a179c0-8e7a-4ec0-afce-1636e9bc3032
-
multi-img1 of 2

இந்து இளங்­கோ­வன்

2019ஆம் ஆண்டு இயற்கை எய்­திய பிர­பல உள்­ளூர் நடி­க­ரும் இசைக்­க­லை­ஞ­ரு­மான 'வேட்டை' நாடக புகழ் திரு ரிஷி­கு­மார், இறப்­ப­தற்கு முன் பாடிய இறுதி பாடல் இரண்டு வாரங்­க­ளுக்கு முன்பு அன்­னை­யர் தினத்­தன்று வெளி­யி­டப்­பட்­டது.

'நீ இல்­லாமல்' என்ற இந்­தத் தமிழ்ப் பாடலை இயற்றி அந்த இசைக் காணொ­ளி­யைத் தயா­ரித்­த­வர் கார்த்­திக் சுந்­த­ர­மூர்த்தி ராஜன். இவர் தயா­ரித்து வெளி­யிட்ட முதல் பாடல் இது. மறைந்த திரு ரிஷி­கு­மா­ரு­டன் பணி­யாற்­றிய அனு­ப­வத்­தைப் பற்றி நினைவு கூர்ந்த கார்த்­திக், " அவர் இரவு ஒரு மணி வரை எங்­க­ளு­டன் பொறு­மை­யாக இருந்து சிறப்­பாக பாடித் தந்­தது மட்­டு­மல்­லா­மல் பின்­னணி பாடல் பாடிய எனக்­கும் கற்­றுத்­தந்­தார். அது மறக்­க­மு­டி­யாத ஓர் அனு­ப­வ­மாக இருந்­தது," என்­றார்.

சிங்­கப்­பூ­ரில் கடந்த சில ஆண்­டு­க­ளா­கப் பல இளை­ஞர்­கள் கலைத் துறை­யில் ஆர்­வம் காட்டி ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். குழு­வாக இணைந்து பாடல்­கள் தயா­ரித்து வெளி­யி­டு­வது, குறும்­ப­டங்­கள் தயா­ரிப்­பது, நாட­கங்­களை மேடை­யேற்­று­வது எனத் தங்­க­ளது திறன்­களை அவர்­கள் வெளிப்படுத்­துகின்­ற­னர். அந்த வரி­சை­யில் 'நீ இல்­லாமல்' பாட­லுக்­குப் பின்­னா­லும் இளை­யர் கூட்­டம் உள்­ளது. இப்­பா­ட­லுக்கு இசை­ய­மைத்­த­வர் இளம் உள்­ளூர் இசை­ய­மைப்­பா­ளர் சத்­தியா. பாடல் வரி­களை கார்த்­திக்­கு­டன் இணைந்து எழு­தி­யது ராக­தீ­பன். பாடல் காணொ­ளிக்­கான பட­ப்பி­டிப்பு சிங்­கப்­பூ­ரி­லும் மலே­சி­யா­வில் நடந்­தன.

இந்­தப் பாட­லின் பின்­ன­ணி­யில் உள்ள பொரு­ள் குறித்து கார்த்திக் விளக்­கம் தந்­தார். அவ­ரது குழந்­தைப் பருவ நினை­வு­களும் தாயைப் பிறந்து வாழ்ந்த அனு­ப­வ­மும் இந்­தப் படைப்பை உரு­வாக்­கத் தூண்­டி­ய­தாகக் கூறி­னார்.

"சிலர், அம்மா இல்­லா­மல் இருக்­க­லாம், சிலர் தங்­க­ளது அம்மாவி­ட­மி­ருந்து பிரிந்து வாழ்ந்­துக்ொ­ண்­டி­ருக்­க­லாம், சில­ருக்கு தனது அம்மா யார் என்று தெரியா­மல் இருக்­கக்­கூ­டும். ஆனால் இவர்­கள் அனை­வ­ரின் வாழ்க்கையில் சந்­திக்­கும் ஏக்­கத்­தைத்­தான் இப்­பா­டல் வழி வெளிப்­ப­டுத்த முயன்­றுள்­ளோம். நான் எனது பாலர் பரு­வத்­தில் வீட்­டை­விட்டு வெளி­யேறி சிறு­வர் இல்­லத்­தில் வளர்ந்­தேன். இப்­பா­டல் வரி­க­ளின் வழி தாயன்­புக்­கான ஏக்கத்தை வெளிப்­ப­டுத்த விரும்­பு­கி­றேன்." என்­றார் கார்த்­திக்.

'நீ இல்லாமல்ல்' பாடல் யூடியூப் காணொளித் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.