முதியோர் நலனில் அக்கறை கொள்ளும் லோகாம்பிகை

ஜனார்த்­த­னன் கிருஷ்­ண­சாமி

ஆத­ர­வில்­லா­மல் வாழும் முதி­ய­வர்­க­ளைக் கண்­கா­ணிப்­ப­தில் அக்­கம்­பக்­கத்­தி­னர் முடிந்­த­வரை அக்­கறை காட்ட வேண்­டும் என்று கூறு­கி­றார் 'பிரம்' நிலை­யத்­தின் சமூக நட்­பு­ற­வுத் திட்­டத் தொண்­டூ­ழி­யர் லோகாம்­பிகை சடாச்­ச­ரம், 63.

ஆத­ரவு தேவைப்­ப­டு­வோர், குறிப்­பாக இந்­தி­யர்­கள், உதவி நாடத் தயங்­கு­வ­தா­கக் குறிப்­பிட்ட திரு­வாட்டி லோகாம்­பிகை, பிறர் என்ன நினைப்­பார்­களோ என்ற எண்­ணத்தை விட்­டொ­ழித்து வழங்­கப்­படும் உத­வி­யைப் பயன்­ப­டுத்­திக்­கொள்­ளு­மாறு அறி­வு­றுத்­தி­னார்.

தற்­போ­தைய கொவிட்-19 கிரு­மிச் சூழ­லின்­போது முதி­யோர் பலர் வீட்­டில் முடங்­கி­யி­ருப்­ப­தால் இவர்­களின் பிரச்­சி­னை­கள் வெளிப்­படை­யா­கத் தெரி­வ­தில்லை. எனவே, திரு­வாட்டி லோகாம்­பிகை போன்ற சமூக ஊழி­யர்­க­ளின் மூலம் முதி­ய­வர்­க­ளின் தேவை என்ன என்­பது கண்­ட­றி­யப்­ப­டு­கிறது.

மார்ச் மாதத்­தில் மோச­மான வீட்­டுச் சூழ­லில் எந்த ஒரு பரா­ம­ரிப்­பு­மின்றி வாழும் மூதாட்டி ஒரு­வரைப் பற்றி அண்­டை­வீட்­டார் தக­வல் அளித்­த­தன் மூலம் தமக்­குத் தெரிய வந்­த­தாக கூறி­னார். மூன்று பிள்­ளை­க­ளுக்­குத் தாயான திரு­வாட்டி லோகாம்­பிகை, அவ்­வப்­போது அந்த மூதாட்­டி­யைச் சென்று பார்ப்­பார். மூதாட்டி தோற்­றத்­தில் வாட்­டத்­து­டன் இருப்­ப­தை­யும் அவ­ரது கால்­கள் வீங்கி இருப்­ப­தை­யும் திரு­வாட்டி லோகாம்­பிகை கண்­ட­தா­கக் குறிப்­பிட்­டார்.

கடந்த மாத பிற்­பா­தி­யில் திரு­வாட்டி லோகாம்­பிகை மீண்­டும் அந்த மூதாட்­டி­யின் வீட்­டுக்­குச் சென்­ற­போது மனி­தக் கழி­விற்­கி­டையே கட்­டில் மீது அந்த மூதாட்டி போதிய தண்­ணீ­ரின்றி கிடந்­தார்.

"மருத்­துவ வண்­டி­யில் செல்ல அவர் மறுத்­த­போ­தும் உதவி வழங்க ஒரு­வர் வந்­தி­ருக்­கி­றார் என்ற நிம்­மதி உணர்வு அவர் முகத்­தில் தெரிந்­தது," என்று அவர் கூறி­னார்.

முதி­யோ­ரின் தேவை­கள் பல என்­ப­தால் மற்ற அமைப்­பு­க­ளின் துணை­யு­டன் அவர்­க­ளது பிரச்­சினை­க­ளைத் தீர்க்க முற்­ப­டு­வ­தாக திரு­வாட்டி லோகாம்­பிகை கூறி­னார்.

"துன்­பு­றுத்­தல் போன்ற பிரச்­சினை­கள் தொடர்­பில் போலி­சா­ரின் துணை தேவைப்­ப­டு­கிறது. ஆனால் போலி­சா­ரின் தலை­யீட்­டைச் சிலர் விரும்­பா­த­தால் அவர்­க­ளுக்கு உதவு­வ­தி­லும் பிரச்­சினை ஏற்­ப­டு­கிறது. அவ­திப்­படும் முதி­யோ­ரில் பலர் முழு­ம­ன­து­டன் தீர்­வு­களை நாடிச்­செல்­வ­தில்லை," என்று அவர் கூறி­னார்.

பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு காண்­ப­தில் முட்­டுக்­கட்­டை­யாக இருப்­பது பயம் என்­ப­தால் மன­திற்கு அமைதி அளிக்­கும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட முதி­யோரை ஊக்கு­விக்­கி­றார். தாதி­ய­ராக முன்பு பணி­யாற்­றிய இவர், அந்த அனு­ப­வம் தமக்­குப் பெரி­தும் கைகொ­டுத்­திருப்­ப­தாக தெரி­வித்­தார்.

"வசதி குறைந்த நோயா­ளி­கள் உதவி நாடு­வ­தில் தயக்­கம் காட்டு­வதை நான் என் தாதி­யர் பணி­யில் பார்த்­தி­ருக்­கி­றேன். தற்­போ­தைய சூழ­லில் அந்த அனு­ப­வம் உத­வு­கிறது," என்று கூறி­னார்.

"மன­திற்­கான பயிற்சி (mindfulness) முதி­யோ­ருக்­குப் நற்­பலனை அளித்­து­வ­ரு­வதை நான் கண்­கூ­டா­கப் பார்க்­கி­றேன். நானே இந்­தப் பயிற்­சியை மேற்­கொண்டு அமைதி பெறு­கி­றேன்," என்று கூறி­னார் திரு­வாட்டி லோகாம்­பிகை.

இப்­ப­யிற்­சியை தமி­ழில் நடத்­து­வோ­ருக்­கான தேவை அதி­கம் இருப்­ப­தா­கக் கூறிய அவர், தமிழ் பேசும் தொண்­டூ­ழி­யர்­கள் இத­னைக் கற்­பிக்க முன்­வ­ர­வேண்­டும் என்­றும் கேட்­டுக்­கொண்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!