பற்றைத் தழுவினர், தமிழ் பற்றுமிகு படைப்பாளிகள்!

‘பற்­றுக பற்­றற்­றான் பற்­றினை’ என்று வள்­ளுவ பெருந்­தகை கூறிச் சென்ற வாக்­கினை இன்­றைய சூழ­லில் பொருத்தி, தமிழ் படைப்­பொன்றை உரு­வாக்கி படைத்­தும் காட்­டி­னர் ‘சிங்­போ­ரிமோ தமிழ் ஓபன் மைக்’ (SingPoWriMo Tamil Open Mic) 2021 களத்­தில் இறங்­கிய ஆறு படைப்­பா­ளர்­கள்.

தேசிய நூலக வாரி­யத்­தின் இளம் எழுத்­தா­ளர் வட்­டம் பெரு­மை­யு­டன் வழங்­கிய ‘சிங்­போ­ரிமோ’ தமிழ் ‘ஓபன் மைக்’ 2021 நிகழ்ச்சி, மே 15ஆம் தேதி­யன்று வட்­டத்­தின் ஃபேஸ்புக் பக்­கத்­தில் முழு காணொ­ளி­யாக வெளி­யி­டப்­பட்­டது.

இந்­நி­கழ்ச்சி இளம் எழுத்­தாளர் வட்­டத்­தின் ‘சிங்­போ­ரிமோ’ தமிழ் எனும் தமிழ்­மொழி விழாவை முன்­னிட்டு ஃபேஸ்புக் வழி நடத்­தப்­பட்ட ஒரு மாத கவி­தைச் சவாலை நிறை­வு­செய்­யும் வகை­யில் அமைந்­தது. கவிதை சவா­லுக்­கும் இந்த ‘ஓபன் மைக்’ நிகழ்­விற்­கும் வளர்­தமிழ் இயக்­க­மும் தமிழ்­மொழி கற்­றல் வளர்ச்­சிக் குழு­வும் ஆத­ரவு வழங்­கின.

‘பற்று’ எனும் கருப்­பொ­ரு­ளைக் கொண்ட நிகழ்வு, பல­த­ரப்­பட்ட பங்­கேற்­பா­ளர்­களை ஈர்த்­தது. “நாம் வர்த்­த­க­மொ­ழி­யில் பேசும்­போது அறி­வைத் தூண்­டு­கி­றோம், ஆனால் தாய்­மொ­ழி­யில் பேசும்­போது ஒரு­வ­ரது மன­தைத் தொடு­கி­றோம்,” என்று தனது மொழிப்­பற்றை வெளிப்­ப­டுத்­தி­னார் பங்­கேற்­பா­ளர் திரு­மதி இசக்கி செல்வி. இத்­த­கைய பற்றை மழலை மொழி­யில் கேட்­ப­தற்கு எப்­படி இருந்­தி­ருக்­கும் என்­பதை உணர்த்­தி­னார், நிகழ்ச்­சி­யின் ஆக இளைய படைப்­பா­ளர் சுரேஷ் நிவோ­சன், 11.

கவி­ய­ரங்­கா­கத் தொடங்­கிய யோசனை, கவிதை, உரை­நடை படைப்­பு­கள், பாடல்­கள், அனு­ப­வப் கதைகள், கலந்­து­ரை­யா­டல்­கள், சிந்­த­னை­த் துளிகள் என ஒரு கதம்ப நிகழ்­வாக வெளி­வந்­துள்­ளது. இதில் இசை, இலக்­கி­யக் கூறு­களை நிகழ்ச்சி நெறி­யா­ளர்­கள் ரேவதி மனோ­க­ர­னும் மிரு­துளா குமா­ரும் இணைத்து வழங்­கி­னர். தமிழ்­மொழி வாழும் மொழி­யா­கத் திகழ்­வ­தைத் வலி­யு­றுத்­தும் நோக்­கத்­தில் இந்­நி­கழ்ச்சி நடந்­தே­றி­யது. நிகழ்ச்­சி­யின் காணொ­ளியை யூடி­யூ­ப்பி­லும் காண­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!