அன்னையர் தினத்தை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்றம்

அன்னையர் தினத்தை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்றம்

1 mins read
56ee1031-3926-4596-949c-8028f244de09
-

சமூக விழிப்­பு­ணர்­வைத் தூண்­டும் தலைப்­பு­களில் பட்­டி­மன்­றம் நடத்­தும் நோக்­கத்­தில் கேலாங் மேற்கு சமூக மன்ற இந்­தி­யர் நற்­ப­ணிச் செயற்­குழு கடந்த 15 ஆண்­டு­களாக செயல்­பட்டு வரு­கிறது.

அந்த வரி­சை­யில் அன்­னை­யர் தினத்தை முன்­னிட்டு சிறப்பு பட்டி­மன்­றம் ஒன்றை மெய்­நி­கர் பாணி­யில் இம்­மா­தம் 23ஆம் தேதி­யன்று ஏற்­பாடு செய்­தி­ருந்­தது. 100க்கும் மேற்­பட்­டோர் நிகழ்­வில் கலந்­து­கொண்­ட­னர். தொடர்பு, தக­வல் அமைச்­ச­ரும் இரண்­டாம் உள்­துறை அமைச்­ச­ரு­மான திரு­மதி ஜோச­ஃபின் டியோ சிறப்பு விருந்­தி­ன­ராக அதில் கலந்­து­கொண்­டார்.

தாய்­மொழி, கலா­சா­ரம், பண்­பாடு ஆகி­ய­வற்றை முன்­னி­றுத்தி 16வது ஆண்­டாக இப்­பட்­டி­மன்­றத்­தைத் தொடர்ந்து நடத்­தி­வ­ரும் செய­ல­வை­யைப் பாராட்­டி­ய­து­டன் தொடர்ந்து பல நிகழ்ச்­சி­க­ளை சமூ­கத்­திற்கு வழங்­கு­மாறு அமைச்­சர் கேட்­டுக்­கொண்­டார்.

இன்­றைய இளை­யர்­க­ளி­டம் தாய்­மொ­ழிப் புழக்­கம் குறை­வ­தற்­குக் கார­ணம் சமூ­கச் சூழலா, குடும்­பச் சூழலா என்ற பட்­டி­மன்­றத்தை முனை­வர் இரத்­தின வேங்­க­டே­சன் நடு­வ­ராக வழி­ந­டத்தினார். திரு­மதி ஸ்வர்­ண­லதா ஆவு­டை­யப்­பன், திரு அர்­ஷத், குமாரி வைஷ்­ணவி கண்­ணன், திரு முஹம்­மது பிலால், திரு சுப்பு அடைக்­க­ல­வன், குமாரி சிநேஹா முரளி ஆகி­யோர் ஒட்­டி­யும் வெட்­டி­யும் பேசினர். இளை­ய­ரி­டையே தாய்­மொ­ழிப் புழக்­கம் குறை­வ­தற்­குக் குடும்­பச் சூழலே கார­ணம் என்று நடு­வர் தீர்ப்பு வழங்­கி­னார்.

செய்தி, படம்: கேலாங் மேற்கு சமூக

மன்ற இந்­தி­யர் நற்­ப­ணிச் செயற்­குழு