ஜூன் 14ஆம் தேதியிலிருந்து (நாளை முதல்) தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள்
ஐவர் ஒன்றுகூடலாம்
சமூக ஒன்றுகூடலுக்கு விதிக்கப்பட்ட
இரண்டு பேர் உச்சவரம்பு ஐந்துக்கு அதிகரிக்கப்படுகிறது.
அன்றாடம் வீட்டுக்கு வரும் நபர்களின் எண்ணிக்கையும் இரண்டிலிருந்து ஐந்துக்கு உயர்த்தப்படுகிறது.
அதிகமானோர்
செல்ல அனுமதி
சுற்றுலாத் தளங்கள், உல்லாசப் படகு, அருபொருளகம், பொது நூலகம் போன்ற இடங்கள், அங்கு வழக்கமாக வருவோரில் 50 விழுக்காட்டுடன் நடத்த அனுமதி வழங்கப்படும். தற்போது,
இது 25 விழுக்காடாக உள்ளது.
நேரடி நிகழ்ச்சிகள், பார்வை யாளர்களுடன்கூடிய விளையாட்டு நிகழ்ச்சிகள், திரையரங்குகள், தொழில்துறைகளின் சந்திப்பு, மாநாடு மற்றும் கண்காட்சிகள், வழிபாட்டுச் சேவைகள், வீட்டுக்கு வெளியே நடைபெறும் திருமணப் பதிவுகள் போன்றவை மீண்டும் நடத்த அனு மதிக்கப்படும். இத்தகைய நிகழ்ச்சி களில் முன்பரிசோதனையுடன் 250 பேர் வரை பங்கேற்கலாம். ஐம்பது பேருக்குக் கீழ் இருந்தால் முன்பரிசோதனை தேவையில்லை. ஆனால் பாட்டுப் பாடவும் காற்று இசைக்கருவிகளை இசைக்கவும் உணவகங்களில் உணவு உண்ணவும் அனுமதியில்லை.
அழகு பராமரிப்பு சேவைகள்
முகப்பூச்சு, ஆவிக் குளியல் போன்ற முகக்கவசங்களை அகற்ற வேண்டிய சேவைகள் மீண்டும் தொடங்க அனுமதிக்கப்படும்.
இறுதிச் சடங்கு
இறுதிச் சடங்கில் பங்கேற்போர் எண்ணிக்கையில் மாற்றமில்லை. எல்லா நாட்களிலும் நேரத்திலும் இருபது பேர் வரை பங்கேற்கலாம்.
கடைத்தொகுதிகள்,
காட்சிக்கூடங்கள்
இந்த இடங்களில் 16 சதுர மீட்டர் பரப்பளவுக்கு ஒருவர் இருக்கலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இனி 10 சதுர மீட்டர் பரப்பளவுக்கு ஒருவர் என்ற முறையில் அனுமதிக்கப்படும்.
சுற்றுலாக் குழுக்கள்
பேருந்து, படகு, கப்பல் போன்ற போக்குவரத்து வசதிகளுடன்கூடிய சுற்றுலாவில் 50 பேர் வரை பங்கேற்க முடியும். தற்போது இந்த எண்ணிக்கை 20ஆக உள்ளது. இதர நடைப் பயணம் போன்றவற்றுக்கு 20 பேர் வரம்பு நீடிக்கும்.
வீட்டில் நடத்தப்படும்
தொழில்கள்
நாளுக்கு ஐந்து வருகையாளர்களுடன் வீட்டுத் தொழிலை நடத்த அனுமதிக்கப் படும். தற்போது அவர்கள் தொடர்பற்ற விநியோகித்தல், பெறுதல் அடிப்படையில் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹோட்டல் அறையில்
தங்குவோர்
'பார்பிக்யூ'வுக்கு
அனுமதியில்லை
பூங்கா, வீவக பேட்டைகள், கொண்டோமினியம், கண்ட்ரி கிளப் உட்பட பொது இடங்களில் உள்ள
பார்பிக்யூ' மற்றும் முகாம்கள் அமைப்பதற்கான இடங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.

