மீள்திறனைக் கற்றுக்கொடுக்கும் தந்தை

கி. ஜனார்த்­த­னன்

தம் அனு­ப­வங்­க­ளி­லி­ருந்து கற்­றுக்­கொண்ட பாடங்­க­ளைப் பின்­னர் பிள்­ளை­க­ளுக்­குக் கூறி வாழ்க்­கைச் சவால்­க­ளுக்கு அவர்­க­ளைத் தயார்­செய்­வதே ஒரு தந்­தை­யின் கடமை என்­கி­றார் திரு பாலன் கோபால், 49. பிள்­ளை­க­ளின் வாழ்க்­கை­யில் முக்­கிய அங்­க­மாக இருந்து, அவர்­கள் கூறு­வ­தைக் காது­கொ­டுத்து கேட்டு, அவர்­க­ளது உணர்­வு­க­ளைப் புரிந்­து­கொண்டு நல்ல தந்­தை­யாக இருக்க முற்­ப­டு­கி­றார் இவர்.

உட­லு­று­திப் பயிற்­று­விப்­பா­ள­ரா­க­வும் பயி­ல­ரங்கு நடத்­து­ந­ரா­க­வும் உள்ள திரு பாலன், இரண்டு மகன்­க­ளுக்­குத் தந்தை. குடும்ப நலனை ஊக்­கு­விக்­கும் 'ஃபேமிலிஸ் ஃபார் லைஃப்' (Families For Life) அமைப்­பில் தொண்­டூ­ழி­யராக இருக்­கி­றார். சுய முன்­னேற்­றம் தொடர்­பி­லும் நல்ல பெற்­றோ­ராக இருப்­பது தொடர்­பி­லும் இவர் தம் வகுப்­பு­களில் கற்­றுத்­த­ரு­கி­றார். தம்­மைப் போன்ற ஒரே சிந்­த­னை­யு­டை­ய­வர்­க­ளைச் சந்­திப்­ப­து மனித நூல­கத்­திற்­குச் செல்­வது போன்­றது என்று கூறி­னார் திரு பாலன். இத்­த­கைய குழுக்­க­ளால் சமூ­கத்­தில் சிறந்த தந்­தை­யர் உரு­வா­குவ­தா­கக் கூறினார்.

"நான் என் பிள்­ளை­க­ளுக்குச் சிறு தக­வல்­க­ளைக் கூறி­னாலோ சிறு வேலை­க­ளைச் செய்ய சொன்­னாலோ ஏதே­னும் ஒரு படிப்­பி­னையை அதில் இணைக்­கப் பார்ப்­பேன்," என்று அவர் கூறி­னார்.

திரு பால­னின் இரு புதல்­வர்­களில் மூத்­த­வ­ரின் வயது 17, இளை­ய­வ­ருக்கு 14 வயது. பிள்­ளை­க­ளின் மீள்­தி­றனை வளர்ப்­ப­தற்­காக அவர்­க­ளு­டன் திரு பாலன் உடற்­ப­யிற்­சி­யில் ஈடு­ப­டு­வார். அத்­து­டன், குடும்­ப­மா­கத் தியா­னத்­தில் ஈடு­ப­டு­வர்.

சிறு வய­தாக இருந்­த­போது உணர்ச்­சி­களை வெளிப்­ப­டுத்­தா­மல் அடக்­கி­வைத்­துக்­கொள்ள வேண்­டும் என்ற சிந்­த­னை­யில் வளர்ந்­த­வர் இவர். ஆனால் அதற்­குப் பதி­லாக பிள்­ளை­கள் தங்­க­ளது உணர்ச்­சி­க­ளைச் சரி­யான முறை­யில் கையாண்டு அவற்றை வெளிப்­ப­டுத்­து­வது முக்­கி­யம் எனக் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!