இனவாதம் களைய பாதுகாப்புத் தளங்கள் தேவை

இர்­‌‌‌‌‌ஷாத் முஹம்­மது

இன­வா­தத்­தால் பாதிக்­கப்­பட்­ட­வர் களுக்கு பாது­காப்­பான தளங்­கள் தேவை என்­றும் அவை பொது வெளி­யாக இல்­லா­மல் தங்­கள் அனு­ப­வங்­க­ளைப் பகிர்ந்­து­கொள்ள வரை­ய­றுக்­கப்­பட்ட இட­மாக அவை இருப்­பதை அவர்­கள் முக்­கி­ய­மா­கக் கரு­து­வார்­கள் என்று கூறி­னார் நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் உதவி பேரா­சி­ரி­யரான சமூ­க­வி­ய­லா­ளர் முனை­வர் லாவண்யா கதி­ர­வேலு.

கொள்கை ஆய்­வுக் கழ­க­மும் எஸ் ராஜ­ரத்தி­னம் அனைத்­து­ல­கக் ஆய்வுக் கழ­க­மும் இணைந்து நேற்று முன்­தி­னம் இனம், இன­வா­தம் குறித்து ஏற்­பாடு செய்த கலந்­து­ரை­யா­டல் நிகழ்ச்­சி­யில் இந்­தக் கருத்­து­களை அவர் பகிர்ந்­தார்.

இன­வா­தத்­தால் பாதிக்­கப் பட்­ட­வர்­கள் தங்­கள் அனு­ப­வத்­தைப் பகிர்ந்­து­கொள்ள திறந்­த­வெ­ளி­கள் பொருத்­த­மா­ன­வையா அல்­லது குறிப்­பிட்ட வரை­ய­றுக்­கப்­பட்ட தளங்­கள் பொருத்­த­மா­ன­வையா என்­பது பற்றி கலந்­து­ரை­யா­ட­லில் பேசப்­பட்­டது.

அந்­தப் பாது­காப்­பான இடங்­கள் ஒரே கருத்­தைக் கொண்­டோரை எதிர்­க்­க­ருத்து கொண்ட பிரிவு களா­கப் பிரிப்­பது போல தோன்­றி­னா­லும் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு அதில் இடம் உண்டு என்று நம்­பு­ வ­தா­கக் கூறி­னார் முனை­வர் லாவண்யா.

"தங்­க­ளின் அனு­ப­வங்­க­ளைப் பகிர்ந்து அவற்றை கேட்­ப­வர்­கள் அதுபற்றி அறி­ய­ வேண்­டும் என்று பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் விரும்­பு­வார்­கள். மன­த­ள­வில் அது ஆறு­தல் பெற வழி­வ­குக்­கும். ஒரு­வ­ரின் அனு­ப­வத்தை அங்­கீ­க­ரிக்­கும் சமூ­கத்­தைத் தேடிக் கொள்­வது அத்­தி­யா­வ­சி­யம்," என்­றார் அவர்.

"அத­னால் அந்­தத் தளங்­கள் சில­ருக்கு மட்­டுமே உரித்­தா­னவை என்றோ அவ­ர­வர் குழுக்­க­ளா­கச் சேர்ந்­து­கொள்­ளும் இடங்­கள் என்றோ தட்­டிக் கழிக்­கக் கூடாது என்­றும் அவை திறந்த வெளி­யாக மட்­டுமே இருக்க வேண்­டும் என்­றும் கூறக்­கூ­டாது. இரண்டு விதத் திலும் அத்­த­ளங்­கள் அமைந்­தி­ருக்க வேண்­டும்," என்று முனை­வர் லாவண்யா வலி­யு­றுத்­தி­னார்.

இணை­யம் வழி பலர் கலந்­து­கொண்ட கலந்­து­ரை­யா­ட­லின் முதல் பகு­தி­யில் நிதி­ய­மைச்­சர் லாரன்ஸ் வோங் உரை­யாற்­றி­ய­து­டன் கலந்­து­ரை­யா­ட­லி­லும் பங்­கேற்­றார்.

எஸ் ராஜ­ரத்­தினம் அனைத்­து­ல­கக் ஆய்வுக் கழ­கத்­தைச் சேர்ந்த முனை­வர் ச‌ஷி ஜய­கு­மார் அந்த கலந்­து­ரை­யா­டலை வழி­ந­டத்­தி­னார்.

அதை­ய­டுத்து இடம்­பெற்ற நிபு­ணர்­க­ளின் கலந்­து­ரை­யா­டல் நிகழ்ச்சியில் சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் (என்­யு­எஸ்) சமூ­க­வி­யல் துறை­யைச் சேர்ந்த இணைப் பேரா­சி­ரி­யர் டேனி­யல் கோ, என்­யு­எஸ் தொடர்பு, புதிய ஊட­கத் துறை இணைத் தலை­வர் இணைப் பேரா­சி­ரி­யர் எல்மி நிக்­மத், லியான்ஹ சாவ்­பாவ் சீன நாளி­த­ழின் ஆசி­ரி­யர் கோ ஷின் டெக் ஆகி­யோர் முனை­வர் லாவண்­யா­வு­டன் கலந்­து­கொண்­ட­னர்.

சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் பேரா­சி­ரி­யர் போலின் ஸ்ட்­ரா­கன் அந்த அங்­கத்தை வழி­ந­டத்­தி­னார்.

பாது­காப்­புத் தளங்­கள் சமூக ஊட­கங்­க­ளைத் தாண்­டி­ய­வை­யாக இருக்­க ­வேண்­டும் என்­றும் அனை­வ­ரை­யும் உள்­ள­டக்கிய நேர­டிச் சூழ­லில் மக்­கள் பங்­கு­பெ­றும் இடங்­ க­ளாக அவை இருக்க வேண்­டும் என்­றும் கருத்­து­ரைத்­தார் இணைப் பேரா­சி­ரி­யர் எல்மி.

முதி­யோ­ரின் கண்­ணோட்­டங்­கள் சமூக ஊட­கங்­களில் போதிய அளவு இடம்­பெ­றா­த­தால் அவர்­களை அர­வ­ணைக்க இன்­னும் அதி­கம் செய்­ய­லாம் என்று அவர் கூறி­னார்.

இனம் பற்றி பேசும் பாது­காப்­புத் தளங்­க­ளா­கத் தொடங்­கப்­பட்ட சில இன்ஸ்­ட­கி­ராம் பக்­கங்­க­ளைச் சுட்­டிக்­காட்­டிய இணைப் பேரா­சி­ரி­யர் டேனி­யல் கோ, பின்­னர் அவை திறந்த வெளிக்கு மாற்­றப்­பட்­ட­தைத் துணிச்­ச­லான செயல் என்று வரு­ணித்­தார்.

எல்­லா­ரும் பார்க்­கும் வண்­ணம் கலந்­து­ரை­யா­டல்­கள் இடம்­பெ­றச் செய்­தது, இன­வா­தச் செயல்­கள் இன்­னும் நடந்­து­வ­ரு­வ­தை­யும் அந்த அனு­ப­வங்­கள் மறக்­கப்­ப­டக் கூடாது என்­ப­தை­யும் காட்­டு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார்.

அண்­மை­யில் நடந்த இனவாதச் சம்பவங்கள் வருத்­தம் அளிப்­ப­தாகக் கூறிய முனை­வர் லாவண்யா, அதைக் களைய பள்­ளி­க­ளி­லிருந்து ­தொடங்­கு­வது சிறந்­தது என்­றார்.

உள்­ளார்ந்த பாகு­பாடு ஒரு­வ­ருக்கு இருப்­பதை அவர் அறி­யாது இருக்க வாய்ப்­பு­கள் உண்டு.

அதை எதிர்­கொள்­ள­வும் கண்­ட­றி­ய­வும் அப்­பா­கு­பாட்­டி­லி­ருந்து பாது­காத்­துக்­கொள்­ள­வும் ஆசி­ரி­யர்­க­ளுக்­குப் பயிற்சி அளிப்­பது குறித்­தும் சிந்­திக்­க­லாம் என்று முனை­வர் லாவண்யா பகிர்ந்­தார்.

ஒரு­வ­ரது அன்­றாட நடத்­தையை மாற்­று­வது குறித்து மட்­டும் சிந்­திக்­கா­மல் கொள்கைமாற்­றம் செய்­வது குறித்தும் நாம் சிந்­தித்­தால் அதுவே நமது தனிப்­பட்ட சிந்­த­னையை மாற்ற வழி­வகுக்­கும் என்ற சமூ­க­வி­யல் கண்­ணோட்­டத்தை அவர் முன்­வைத்­தார்.

இனம் குறித்த பார்­வையை மாண­வர்­கள் சிறு வயது முதலே கற்­றால் பின்­னர் அது இயல்­பாக அமை­யும் என்று கூறி­னார் மற்­றொரு சமூ­க­வி­ய­ளா­ல­ரான இணைப் பேரா­சி­ரி­யர் கோ.

அத­னால் சிறு வய­தி­லேயே அல்­லது பாலர் பள்ளி முதலே இது குறித்து ஏதா­வது முயற்சி எடுக்க வேண்­டும் என்­பது அவ­ரது கருத்து.

முன்­ன­தா­கத் தமது உரை­யில் அர­சாங்­கம் வகுத்­துள்ள கொள்­கை­கள் கல்­லில் செதுக்­கப்­பட்­டவை அல்ல என்­றும் அவற்றை காலத்­திற்­கும் தேவைக்­கும் ஏற்ப மாற்­ற­லாம் என்­றும் அமைச்­சர் லாரன்ஸ் வோங் கூறினார்.

பின்­னர் நடந்த கலந்­து­ரை­யா­ட­லின்போது கல்­வி­யில், குறிப்­பா­க பாடத்­திட்­டத்­தில் மாற்­றம் செய்ய­லாம் என்று அவர் சொன்­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!