மீண்டும் சிறகு விரிக்கும் சாங்கி விமான நிலையம்

1 mins read

ப. பாலசுப்பிரமணியம்

சாங்கி விமான நிலைய நடவடிக்கைகளும் பயணிகளின் எண்ணிக்கையும் இவ்வாண்டு அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு ஏப்ரலில், விமான நடவடிக்கைகள் இரட்டிப்பாகி பயணிகளின் எண்ணிக்கை 7 மடங்கு பெருகியது. கொவிட்-19 சற்று தீவிரமாக உள்ளபோதும் ஏப்ரலில் 173,000 பயணிகளை சாங்கி கையாண்டது. இந்த எண்ணிக்கை குறைவென்றாலும் முன்னேற்றமே. சிங்கப்பூர் சிவில் விமானப்போக்குவரத்து ஆணைய இயக்குநர் திரு டேனியல் இங், தற்போது 70 நகரங்களுக்குச் சேவை அளிக்கும் சாங்கி படிப்படியாக கிருமித்தொற்றுக்கு முன்னதாக இருந்த 160 நகரங்களுகடன் விமான தொடர்புகளை மீண்டும் ஏற்படுத்தும் பாதையில் முன்நோக்கி செல்வதாகக் கூறினார். அதற்கு ஆயத்தமாகி வருகின்றனர் அங்குள்ள ஊழியர்கள்.