தாதிமைத் துறையில் பாதை கண்டார்; இப்போது இளையர்களுக்கு வழிகாட்டுகிறார்

ப.பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

இரத்த புற்­று­நோ­யால் தமது குடும்ப உறுப்­பி­னர் 1983ஆம் ஆண்­டில் இறந்­தது இன்­னும் 60 வயது மூத்த ஸ்தாவ் தாதி­ய­ரான திரு பெ.ராம­நா­த­னின் நினை­வை விட்டு இன்றும் நீங்கவில்லை.

அச்­ச­ம­யம் தமது குடும்ப உறுப்­பி­னரைக் கவனித்துக்­கொண்ட தாதி­யர்­க­ளின் அன்­பும் கடமை உணர்­வும் ராமநாதனைப் பெரி­தும் கவர, அவர் அதே பாதை­யில் செல்ல முடிவு செய்தார். அப்­போது ஊட்­ரம் சாலை­யில் இருந்த முன்­னைய தாதிமை பள்­ளி­யில் துணைத் தாதி­ய­ராகப் பணியை தொடங்­கினார் ராமநாதன். அங்கு அவர் சந்தித்த சக தாதி, அவர் வாழ்வில் சரி பாதி ஆனார்.

அந்நாளில் எடுத்த பணி முடிவு இந்நாளில் விருதுக்குக் கைகொடுத் துள்ளது. இவ்­வாண்­டின் சுகா­தார அமைச்­சின் தாதி­யர் தகுதி விரு­தினை திரு ராமநாதன் பெற்றுள்ளார்.

சிங்­கப்­பூ­ரின் தனி­யார், பொது துறை மருத்­துவ கட்­ட­மைப்­பு­க­ளி­லி­ருந்து வரும் மொத்­தம் 125 தலை­சி­றந்த தாதி­யர்­க­ளுக்கு இவ்­வி­ருது வழங்­கப்­பட்­டது.

பல்­லாண்டு கால தாதி­யர் அனு­ப­வத்­தில் சிங்­கப்­பூர் பொது மருத்து­வ ­மனை, மன­நலக் கழ­கம், அலெக்ஸ்­சான்ட்ரா மருத்­து­வ­மனை போன்ற இடங்­களில் பல்­வேறு மருத்­துவப் பிரி­வு­களில் சேவை­யாற்றும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

தற்­போது கூ டெக் புவாட் மருத்து­வ­ம­னை­யின் இரு­த­ய­வி­யல், மூப்­பி­யல் துறை­யில் பணி­யாற்­றும் திரு ராம­நா­தன் அடிக்­கடி அவ­சர சிகிச்சை தேவைப்­படும் சூழ்­நி­லை­களைக் கையாள வேண்­டி­யுள்­ளது.

அவர் பணியாற்றும் பிரிவில் கடந்­தாண்டு இரு­தய பிரச்­சி­னை­ க­ளால் அனு­ம­திக்­கப்­பட்ட சுமார் 50 வயதுதக்க ஆட­வர் உயி­ருக்கு போரா­டிக்­கொண்­டி­ருந்­தார்.

மருத்­துவக் குழு­வி­னர் அவரை காப்­பாற்­றி­னர். அவர் மெல்ல மெல்ல குண­ம­டைந்து பழைய நிலைக்கு திரும்பியதில் திரு ராமநாத­னும் அவரது சக தாதி­யர்­க­ளுக்கு முக்­கிய பங்கு வகித்­த­னர்.

"அந்­நோ­யாளி மருத்­து­வ­மனைப் பரா­ம­ரிப்பு முடிந்து வீடு திரும்­பிய போது என்னை கட்­டிப்­பி­டித்து கை குலுக்கி நன்றி தெரி­வித்­தார். இத்­த­கைய பொன்­னான தரு­ணங்­களே என்னை இத்­தனை காலம் இத்­து­றை­யில் நீடித்­தி­ருக்க உத­வி­ன," என்று கூறி­னார் திரு ராம­நா­தன்.

தாதிமைத் துறையில் பழுத்த அனு­ப­வம் பெற்­றி­ருக்­கும் திரு ராமநாதன் தமது மருத்­துவப் பிரி­வில் சேரும் மாணவத் தாதி­யர்­க­ளுக்கு பயிற்சி வழங்­கு­வ­தி­லும் மும்­மு­ரமாக உள்ளார்.

சிறந்த முறை­யில் அவர்­ களுக்கு ஆசா­னாக இருந்து, தாதிமை நுணுக்­கங்­களை சொல்­லிக் கொடுத்­த­தில், 2019 ஆம் ஆண்­டில் தேசிய சுகா­தார பர­மா­ரிப்பு குழு­மத்­தின் கற்­பித்­தல் உன்­னத விருது இவ­ரைச் சென்­ற­டைந்­தது.

அவ­ருடைய 31 வயது மக­ள் அனு­சி­யா­வும் தாதிமைத் துறையை தேர்­தெ­டுத்­துள்­ளதில் திரு ராம­நா­த­னுக்கு மகிழ்ச்சி.

இவ்வாண்டு ­வி­ருது கிடைத்­த­தில் பெரு­மி­தம் கொள்­ளும் தாதி ராமநாதன், தொடர்ந்து புதிய தாதி­யர்­க­ளுக்கு உற்­சா­கம் அளித்து இத்­து­றை­யில் அவர்கள் நீடித்து பணிசெய்ய தம்­மால் முடிந்­த முயற்சிகளை எடுக்கக் கடப்­பாடு கொண்­டுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!