மின்னியல் உலகில் வீட்டு விற்பனை

ப. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

சுமார் 16 ஆண்­டு­க­ளுக்கு முன், காலை 6 மணிக்கு ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழின் விளம்பரப் பக்­கங்­களைப் புரட்டி, விற்­ப­னைக்கு போகும் வீடு­களை அடை­யா­ளம் கண்டு, பிற்­ப­க­லில் வீடு­களை பார்­வை­யிட சென்ற அனு­ப­வங்­களை நினை­வு­கூர்ந்­தார் திரு­மதி சி.இந்­தி­ ராணி.

'நேட்டலி இந்­திரா' என்று அழைக்­கப்­படும் இந்த 41 வயது சொத்து முக­வர் புரோப்­நெக்ஸ் நிறு­வ­னத்­தின் இயக்­கு­நர்­களில் ஒரு­வர் ஆவார்.

முன்பு, வானொலி விளம்­ப­ரச் சேவை, தம் தொடர்பு விவ­ரங்­கள் பதிக்­கப்­பட்ட ஆலய பிளாஸ்டிக் பை­களை விநி­யோ­கித்­தல், விழாக் கூட்­டங்­களில் துண்­டுப் பிர­சு­ரங்­களை வழங்­கு­தல் போன்ற உத்­தி­களைக் கையாண்டு அவர் தமது சேவை­யை விளம்­ப­ரப்­ப­டுத்­தி­னார்.

தற்­போ­தைய மின்­னி­லக்க உல­கம் சொத்து முக­வர்­க­ளின் செயல்­பா­டு­களை மாற்­றி­விட்­டது.

சொத்து வாங்­கு­வோர் இணை­யத்­தில் அவற்றை தேடு­கின்­ற­னர். சொத்து முக­வர்­களும் இணை­யத்­தில் விற்­பனை, வாட­கைக்­கான வீடு­களை விளம்­ப­ரம் செய்­கின்­ற­னர். அத­னால் சொத்­து ­மு­க­வர்­கள் தங்­கள் தனித்­துவ அடை­யா­ளத்தை இணை­யத்­தில் வலுப்­ப­டுத்­து­வது மேலும் முக்­கி­ய­மா­கி­விட்­டது.

கடந்த ஆண்டு ஏப்­ர­லில் கொவிட்-19 கிரு­மிப் பர­வலை முறி­ய­டிப்­ப­தற்­கான திட்­டம் நடப்­பில் வந்­த­போது, அவ்­வாண்டு ஜூன் 1 தேதி வரை­, சொத்து வாடிக்­கை­யா­ளர்­களை நேரில் சந்­திக்­கக்­கூ­டாது என்­றும் அத­னால் வீடு­களை நேரடி­ யாக பார்­வை­யி­டு­வ­தைத் தள்­ளி­வைக்­க­வும் கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­டன.

அத்­த­ரு­ணத்­தில் தொழில்­நுட்­பம் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­கும் சொத்து முக­வர்­க­ளுக்­கும் கைகொ­டுத்­தது.

ஸூம் வழி சந்­திப்­பு­கள்

அப்­போது பெரும்­பா­லான துறை­கள் ஸூம் மெய்­நி­கர் தளத்தை கொண்டு சந்­திப்­பு­களை வழி­நடத்திய வேளையில், அத­னைப் பயன்­ப­டுத்த திரு­மதி இந்­தி­ராணி கற்­றுக்­கொண்­டார்.

அதனை எப்­படிப் பயன்­ப­டுத்­து­வது என்று கற்­றுக்­கொள்­ளும் அதே சம­யத்­தில் அதனை வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­கும் கற்­றுக்­கொ­டுக்க வேண்­டி­யி­ருந்­தது.

அதோடு கைபே­சி­யால் வீட்­டைக் காணொளி வழி நேர­டி­யாக படம்­பி­டிக்­கும் உத்­தி­க­ளை­யும் திரு­மதி இந்­தி­ராணி வீட்டை விற்க விரும்பு வோருக்­குச் சொல்­லி­கொ­டுத்­தார்.

இந்த மெய்­நி­கர் ஸூம் சந்­திப்பு­ களில் வீட்டை விற்­ப­வ­ரும் வீட்டை வாங்க விரும்­பு­வ­ரும் சொத்து முக­வ­ரு­டன் இணை­வர்.

சொத்து வாங்­கு­வது விற்­பது தொடர்­பி­லான பணக் கணக்கு களை­யும் வீட்­டுப் பரி­வர்த்­தனை செயல்­மு­றை­க­ளை­யும் மெய்­நி­கர் சந்­திப்­பு­களில் விளக்க முடி­கிறது.

தனி­யார் கூட்­டு­ரிமை வீடு­கள் விற்­ப­னைக்கு அறி­மு­க­மா­கும்போது மெய்­நி­கர் வீட்­டுக் காணொ­ளி­களை மட்­டும் பார்­வை­யிட்டு நேர­டி­யா­கச் சென்று பார்க்­கா­ம­லேயே வீடு வாங்­கி­ய­வர்­களும் உண்டு என்று அவர் குறிப்­பிட்­டார்.

கடந்த 2009ஆம் ஆண்­டி­லி­ருந்து சொத்து முக­வ­ராக பணி­யாற்­றும் மற்­றொ­ரு­வ­ரான சிங்­கப்­பூர் ரியல்­டர்ஸ் இன்­காப்­ப­ரே­‌‌ஷன் நிறு­வன இணைப் பிரிவு இயக்­கு­நர் திரு தங்­க­மணி கணே­சன், 34, கொவிட்-19 சம­யத்­தில் பெரும்­பா­லும் வீடு வாங்க விரும்­பு­வோ­ரி­டம் முப்­ப­ரி­மாண வடி­வி­லான வீட்­டுக் காணொ­ளி­களைக் காட்­டி­ய­தாக சொன்­னார்.

விளம்­ப­ரக் காணொளி உத்தி

கிரு­மித்­தொற்று சம­யத்­தில் அதிக அள­வில் வீட்டு விற்­பனை விளம்­பரக் காணொ­ளிப் பதி­வு­கள் சமூக வலைத்­த­ளங்­களில் பர­வ­லாக பகி­ரப்­பட்­டன. திரு­மதி இந்­தி­ராணி இந்த உத்தி முறையை சில ஆண்டு ­க­ளுக்கு முன்­னரே தொடங்­கி­விட்­டார்.

சரா­ச­ரி­யாக இரண்டு நிமி­டங்­கள் நீடிக்­கும் காணொ­ளி­களில், வீட்­டின் அக்­கம்­பக்க வச­தி­க­ளைப் பற்றி பேசு­வ­து­டன் விற்­பனை ஆகும் வீட்டை சுற்­றிக்­காட்டி அதன் தனித்­துவ அம்­சங்­க­ளைப் பற்­றி­யும் அவர் விளக்­கு­வார்.

இது ஃபேஸ்புக், இன்ஸ்­டகி­ராம் போன்ற தளங்­களில் பதி­வேற்­றம் செய்­யப்­ப­டு­கிறது.

"ஊட­கத் துறை­யில் வேலை அனு­ப­வம் இருந்­த­தால், மின்­னி­லக்­கக் காணொ­ளி­யில் நேர­டி­யாக முன்­னால் நின்று பேசு­வது இயல்­பாக வந்­தது. பாரம்­ப­ரிய விளம்­ப­ரங்­க­ளைக் காட்­டி­லும் இன்­னும் அதி­க­மா­னோரை இது சென்­ற­டை­கிறது," என்று கூறி­னார் திரு­மதி இந்­தி­ராணி.

நேர­டிச் சந்­திப்­புக்கு முன், முன்­கூட்­டியே வாடிக்­கை­யா­ளர்­கள் இக்­கா­ணொ­ளியை பார்த்­து­வி­டு­வ­தால், தம்மை பற்­றிய ஓர் அபிப்­பி­ரா­யம் உரு­வாகி வாடிக்­கை­யா­ளர்­க­ளு­டன் வெளிப்­ப­டை­யாக கலந்­து­பே­சு­வது சுல­ப­மான­தாக அவர் விளக்­கி­னார்.

சொத்து முக­வ­ரான திரு கணே­ச­னும் அதே நிறு­வ­னத்­தில் பணி­யாற்­றும் அவ­ரது மனைவி திரு­மதி செ.மஹா­லட்­சு­மி­யும் இவ்­வாண்டு தொடக்­கத்­தி­லி­ருந்து இணைந்து வீடு விற்­பனை விளம்­பரக் காணொ­ளி­களில் இடம்­பெற்று வரு­கின்­ற­னர்.

வீட்­டின் சுற்­றுப்­பு­றத்தை நன்கு ஆராய்ந்து, வீட்­டி­லுள்ள தனித்­துவ சிறப்­பு­க­ளை­யும் வெளிக்­காட்­டு­வ­தில் இரு­வ­ரின் பங்­கும் உள்­ளது.

"குறிப்­பிட்ட எண்­ணிக்­கை­யில் மட்­டுமே பிறர் வீட்­டிற்கு செல்ல முடி­யும் என்ற கட்­டுப்­பாடு இருந்­த­போது, இந்த விளம்­ப­ரக் காணொளி­கள் பெரி­தும் உத­வின. வாடிக்­கை­யா­ளர்­க­ளி­ட­மி­ருந்­தும் அவற்­றுக்கு நல்ல வர­வேற்பு கிடைத்­தது," என்று கூறி­னார் இணை மூத்த விற்­பனை நிர்­வா­கி­யான திரு­மதி செ.மஹா­லட்­சுமி, 33.

இரு­வர் மட்­டுமே வீட்­டிற்­குள் அனு­ம­திப்­ப­டு­வர் என்ற கட்­டுப்­பாடு இருந்­த­போது வீட்டை நேர­டி­யாக வந்து பார்க்க அனு­மதி கொடுப்­ப­தற்கு அதனை விற்­ப­வர்­கள் அஞ்­சி­னர். அத்­த­ரு­ணம் திரு கணே­சன் விற்­கப்­படும் வீட்­டிற்கு தனி­யா­கச் சென்று, தம் கைபேசி வழி அங்கு காணொளி எடுத்து, வீடு வாங்கு பவ­ரி­டம் அந்­தக் காணொ­ளியை அனுப்பி, வெற்­றி­க­ர­மாக விற்­ப­னை­யை­யும் முடித்­தார்.

சமூக வலைத்­த­ளங்­களில் விளம்பரக் காணொ­ளி­களைப் பார்த்த பிறகு அவ்­வீட்டை வாங்­க­லாம் என்ற எண்­ணம் கொண்­ட­வர்­கள்­தான் தங்­க­ளைப் பெரும்­பா­லும் தொடர்பு கொண்­ட­னர் என்­றும் இத­னால் வாடிக்­கை­யா­ளர்­கள் பிடிக்­காத வீட்டை நேர­டி­யாக பார்க்­கும் சாத்­தி­ய­மும் குறை­கின்­றது என்­றும் திரு கணே­சன் தெரி­வித்­தார்.

புதிய வாடிக்­கை­யா­ளர்­களை ஈர்க்க இந்த விளம்­ப­ரக் காணொளி­ கள் உத­வு­கின்­றன என்று கூறும் இந்த ஜோடி, இவற்றை டிக்-டாக்­கி­லும் லிங்ட்­டின் தளத்­தி­லும் புது­வித காணொ­ளி­க­ளாக அறி­மு­கப் படுத்த ஆயத்­த­மாகி வரு­கின்­ற­னர்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு பிற­கும் இந்த மின்­னி­லக்க காணொளி மோகம் தொட­ரும் என்று நம்­பும் இந்த மூன்று சொத்து முக­வர்­களும் சொத்து ஆலோ­சனை வழங்­கும் காணொ­ளி­க­ளை­யும் எதிர்­கா­லத்­தில் தயா­ரிக்க எண்­ணம் கொண்­டுள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!