மூன்று நண்பர்களின் சைக்கிளோட்டப் பயணம்

ஆர்த்தி சிவ­ரா­ஜன்

பள்­ளிக் காலத்­தி­லி­ருந்து 30 ஆண்டு­க­ளாக தொட­ரும் நட்பை மேலும் வலுப்­ப­டுத்த நிஸாம் ஏ ஹாஜா, ரம­ணன் ரகு­ரா­மன் சுதா­கர் மஹா­லிங்­கம் மூவ­ருக்­கும் சைக்­கி­ளோட்­டம் கைகொ­டுக்­கிறது. 41 வய­தா­கும் இந்த மூன்று நண்­பர்­களும் தொடர்ந்து வளர்ந்த இந்த நட்பை பலப்­ப­டுத்த சைக்­கி­ளோட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

நண்­பர்­க­ளி­டையே தொடங்­கிய சைக்­கி­ளோட்­டம் அவர்­க­ளது குடும்­பத்­தி­ன­ரை­யும் ஈர்த்­தது. மெல்ல மெல்ல தேசிய நிகழ்­வு­க­ளி­லும் பங்­கேற்­கும் ஆர்­வத்தை அவர்களிடம் வளர்த்­துள்­ளது.

இந்த ஆண்டு நடை­பெற்ற ஓசி­பிசி சைக்­கிள் மெய்­நி­கர் சவாரி 2021ல் (OCBC Cycle Virtual Ride) மூன்று நண்­பர்­களும் தங்­கள் குடும்­பங்­க­ளு­டன் கலந்­துக்­கொண்­ட­னர்.

இரண்­டா­வது ஆண்­டாக நடை­பெ­றும் இந்த மெய்­நி­கர் நிகழ்­வில் 6,100க்கும் மேற்­பட்­டோர் பங்­கேற்­ற­னர்.

நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யத்­தில் மேலா­ள­ரா­கப் பணி­பு­ரி­யும் திரு நிஸாம், இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்பு ஓசி­பிசி சைக்­கிள் ஓட்­டும் நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்­டார். கடந்த ஆண்டு மெய்­நி­கர் நிகழ்­வில் தமது நண்­பர்­க­ளு­டன் 23 கிலோ மீட்­டர் பிரி­வில் பங்­கேற்ற இவர், இந்த ஆண்டு 200 கிலோ மீட்­டர் பிரி­வில் கலந்து­கொண்­டார்.

தந்­தை­யின் சைக்­கி­ளோட்ட முயற்­சி­க­ளால் ஈர்க்­கப்­பட்ட நிஜா­மின் பிள்­ளை­க­ளான 10 வயது பெரோஸ் ஸிடே­ன், மூன்று வயது பியோனா ஸியா இருவரும் சைக்­கிள் ஓட்­டு­வ­தில் ஆர்­வம் காட்­டு­கின்­ற­னர். 23 கிலோ மீட்­டர், ஐந்து கிலோ மீட்­டர் பிரி­வு­களில் அவர்கள் பங்­கேற்­ற­னர்.

மூத்த கட்­ட­டக் கலை­ஞ­ராக பணிபுரி­யும் நிஸா­மின் மனைவி திரு­மதி தீனுல் பிர்­தவுஸ், 35, தமது மக­ளு­டன் சேர்ந்து ஐந்து கிலோமீட்­டர் தூரத்தை நிறைவு செய்­தார்.

குடும்­பத்­தி­னரை தேசிய சைக்­கி­ளோட்ட நிகழ்ச்­சி­களில் ஈடு­ப­டுத்­திய நிஸாம், தமது நண்­பர்­க­ளின் குடும்­பங்களையும் இதில் ஈடு­ப­டத் தூண்­டி­னார்.

சென்ற ஆண்டு நடை­பெற்ற ஓசி­பிசி சைக்­கிள் மெய்­நி­கர் சவாரி­ யில் முதல்முறை­யா­க தமது குழந்­தை­க­ளா­கிய மூன்று வயது ரக்­‌‌ஷத் ரம­ணன், ஆறு வயது ரஷனா ரம­ணன் ஆகி­யோ­ரு­டன் கலந்­து­கொண்­டார் திரு ஆர்.ரம­ணன்.

இந்த ஆண்டு நிகழ்­வில் 200 கிலோ மீட்­டர் பிரி­வில் திரு ரம­ண­னும் 23 கிலோமீட்­டர் பிரி­வில் ரஷ­னா­வும் ஐந்து கிலோமீட்­டர் பிரி­வில் ரக்­‌‌ஷத்­தும் கலந்­து­கொண்­ட­னர்.

100 கிலோமீட்­டர் பிரி­வில் ரம­ண­னின் தந்தை திரு எஸ். ரகு­ரா­மன், 68, பங்­கேற்­றார்.

"ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் தொடர்­பில் இருப்­ப­தற்­கும் ஆரோக்­கி­ய­மாக இருப்­ப­தற்­கும் நாங்­கள் சைக்­கி­ளோட்­டத்தைத் தேர்வு செய்தோம். எங்­கள் குடும்­பத்­தா­ரும் இந்த விளை­யாட்­டில் கலந்­து­கொள்­ளும்­போது எங்­க­ளி­டையே நல்ல நெருக்­கம் ஏற்­ப­டு­கிறது," என்று கூறி­னார் திரு ரம­ணன்.

திரு சுதா­கர் கடந்த ஆண்டு மெய்­நி­கர் நிகழ்­வில் முதல் முறை­யா­க 23 கிலோமீட்­டர் பிரி­வில் கலந்­து­கொண்டார். இவர், இந்த ஆண்டு தமது ஏழு வயது மகன் வெற்­றி­வே­லு­டன் பங்­கேற்­றார்.

தந்தை 200 கிலோமீட்­டர் பிரி­வி­லும், மகன் ஐந்து கிலோமீட்­டர், பிரி­வி­லும் கலந்­து­கொண்­ட­னர்.

"சென்ற ஆண்­டி­லி­ருந்­து­தான் நான் தொடர்ந்து சைக்­கி­ளோட்­டத்தில் ஈடுபட்டேன். நண்பர்கள் நிஸாம், ரம­ணன் இரு­வ­ரு­ட­னும் சேர்ந்து வாரந்­தோ­றும் சைக்­கிள் ஓட்­டு­வ­தால், எங்­கள் உடல்­ந­லம் மேம்­பட்­டது. பள்­ளி­யில் இருந்த அதே நட்பு இப்­போ­தும் தொடர்ந்து வளர்­கிறது," என்­றார் திரு சுதா­கர்.

மூன்று குடும்­பங்­களும் சைக்­கிள் ஓட்­டும் தூரத்தை தொடர்ந்து அதி­க­ரிக்க முயற்சி செய்து வரு­கின்­றன.

"சிங்­கப்­பூர் தீவு முழு­வ­தும் சைக்­கிள் ஓட்ட திட்­ட­மிட்­டுள்­ளோம். சுமார் 120 கிலோ மீட்­டர் தூரத்தை ஒரே தட­வை­யில் பய­ணம் செய்ய பயிற்சி செய்து வரு­கி­றோம்" என்று தங்­கள் எதிர்­காலத் திட்­டம் குறித்து நிஸாம் கூறி­னார்.

தங்­கள் குடும்­பத்­தின் ஆத­ரவு இல்­லா­மல் இது எது­வும் சாத்­தி­ய­மில்லை என மூவ­ரும் கூறி­னர். அவர்­க­ளின் பிறந்­த­நாள்­க­ளுக்­காக அவர்­க­ளின் மனை­விமார் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் ஒரு சைக்­கிளை வாங்­கி­ய­தா­க­வும் கூறி­னர். சைக்­கிள் ஓட்­டும் ஆர்­வத்­தின் மூலம் இவர் ­க­ளின் நட்­பும் குடும்­பப் பிணைப்­பும் சிறப்­பாக மலர்ந்­துள்­ளதை நண்­பர்­கள் குறிப்­பிட்­ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!