வெளி­நாட்டு ஊழி­ய­ருக்கு உத­விய ஃப்ரிடா

ஹோட்­டல் துறை­யில் ஐந்­தாண்டு களா­கப் பணி­யாற்றி வரும் 28 வயது குமாரி ஃப்ரிடா எங், வேலை­யில் கொண்­டி­ருக்­கும் பேரார்­வம் விரு­து­களை அவர் வசம் இழுக்­கிறது.

இவ்­வாண்­டின் பிர­சித்­திப்­பெற்ற சிங்­கப்­பூர் பய­ணத்­து­றைக் கழக விரு­துக்கு முன்­மொ­ழி­யப்­பட்ட 77 பேரில் இவ­ரும் ஒரு­வர். ஹோட்­டல் களுக்­கான பிரி­வில் உன்­னத வாடிக்­கை­யா­ளர் சேவை விருதை இவர் வென்­றுள்­ளார்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்றை எதிர்த்து போராடி மீள்­தி­ற­னு­ட­னும் கடப்­பாட்­டு­ட­னும் செயல்­படும் பங்­கா­ளி­க­ளை­யும் வர்த்­த­கங்­க­ளை­யும் அங்­கீ­க­ரிப்­பது இந்த விரு­தின் நோக்­க­மா­கும்.

ஹோட்­டல் பிரி­வில் உன்­னத வாடிக்­கை­யா­ளர் சேவை வழங்­கி­யற்­காக குமாரி எங் பணி­யாற்­றும் குவின்சி ஹோட்­டல் இவரை விரு­துக்கு நிய­மித்­தது.

கடந்­தாண்டு கிரு­மிப் பர­வ­லின் போது சிங்­கப்­பூ­ருக்கு வரும் பயணி களை சில வாரங்­க­ளுக்கு தனி­மைப்­ப­டுத்­தும் வளா­கங்­க­ளாக பல உள்­ளூர் ஹோட்­டல்­கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டன. அதில் ஒன்று குவின்சி ஹோட்­டல். கடந்த 2016ஆம் ஆண்­டி­லி­ருந்து குமாரி ஃப்ரிடா விருந்­தி­னர் சேவை அதி­கா­ரி­யாக அங்கு பணி­யாற்றி வரு­கி­றார்.

முன்­னிலை வர­வேற்­புப் பொறுப்பு களுக்கு அப்­பால், ஹோட்­ட­லில் தங்­கிய அனு­ப­வம் குறித்து விருந்­தி­னர்­கள் பகி­ரும் கருத்­து­க­ளை­யும் அவர் கேட்­பார்.

ஒரு­முறை, குவின்சி ஹோட்­ட­லில் தங்கி இருந்த வெளி­நாட்டு ஊழி­யர் தமது அறை­யின் தொலை­பே­சி­வழி வர­வேற்­புப் பிரி­வில் பணி­யாற்­றும் ஃப்ரிடா­வைத் தொடர்பு கொண்­டார்.

உணர்ச்­சி­க­ளைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யா­மல் அழு­தார் அந்த ஊழி­யர். வேலையை இழந்­து­வி­டு­வோமா, கொவிட்-19 பரி­சோ­தனை முடிவு சாத­க­மாக இல்­லாத பட்­சத்­தில் என்ன செய்­வது என்ற மனக் குழப்­பம் அவ­ருக்கு. கிரு­மித்­தொற்­றுக் கட்­டுப்­பா­டு­க­ளால் அவ­ரால் அறை­யி­லி­ருந்து வெளி­வர முடி­யா­த­தால் அழுத்­தம் மேலும் அதி­க­மா­னது.

அவ­ரது கவ­லை­க­ளைக் கேட்டு அறிந்த ஃப்ரிடா, பக்­கு­வ­மா­கப் பேசி அவ­ரைத் தேற்­றி­னார்.

ஊழி­ய­ரின் கிரு­மிப்­ப­ரி­சோ­தனை முடி­வு­க­ளைத் தெரிந்­து­கொள்ள உத­வி­ய­தோடு அவர் தனி­மைப்­ப­டுத்­தப்­படும் நேரத்­தில் அவ­ருக்கு உத­வத் தயா­ராக இருப்­ப­தாக உறுதி அளித்­தார்.

ஒவ்­வொரு நாளும் அந்த வெளி­நாட்டு ஊழி­ய­ரைத் தொடர்­பு­கொண்டு நலம் விசா­ரித்­தார் ஃப்ரிடா. மேலும் அவ­ருக்­குச் சற்று உற்­சா­கம் தர, முறுக்கு பொட்­ட­லத்தை வாங்கி அவ­ரது அறைக்கு அனுப்­பி­னார்.

சுமார் ஒரு மாதம் அங்கு தங்­கி­யி­ருந்த வெளி­நாட்டு ஊழி­ய­ருக்கு தொற்­றுப் பரி­சோ­தனை முடிவு நற்­செய்­தி­யாக வந்­தது. அவர் வேலைக்­கும் திரும்­பி­னார்.

"தனி­மைப்­ப­டுத்­தப்­படும் நேரத்­தில் யாரி­ட­மா­வது பேச முடிந்­த­தில் அவ­ருக்கு ஆறு­தல். அவ­ரது நல­னில் நாம் அக்­கறை கொண்­டுள்­ளோம் என்­பதை வெளிப்­ப­டுத்த முடிந்­த­தில் எனக்கு மகிழ்ச்சி. நாட்­டிற்­குப் பங்­க­ளிக்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு நன்­றி­கூற கட­மைப்­பட்­டி­ருக்­கி­றோம்," என்று தெரி­வித்­தார் குமாரி ஃப்ரிடா.

இதற்கு முன்­னர் சிங்­கப்­பூ­ரின் சிறந்த வர­வேற்­பா­ளர் போட்­டி­யின் இறு­திச் சுற்­றுக்கு தகுதி பெற்­றார் ஃப்ரிடா,

- செய்தி: ப. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!