டாக்டர் அப்துல் கலாமின் நினைவாக விருந்து

1 mins read
86c34457-ff77-4c6a-8330-08e77e9847fc
அப்­துல் கலாம் இலட்சியக் கழகத்தின் தலை­வர் திரு கே. கேச­வ­பாணி (இடம்) ஸ்ரீ நாராயண மிஷன் தலைமை நிர்வாக அதிகாரி திரு எஸ். தேவேந்திரனுக்கு காசோலை வழங்குகிறார். படம்: சிங்­கப்­பூர் அப்­துல் கலாம் இலட்சியக் கழகம் -

கடந்த ஜூலை 27ஆம் தேதி, இந்­தி­யா­வின் மறைந்த முன்­னாள் அதி­பர் அப்­துல் கலாம் அவர்­களின் 6வது நினைவுதின­த்தை அனுசரிக்கும் நோக்­கில் சிங்­கப்­பூர் அப்­துல் கலாம் இலட்சியக் கழகத்தினர் ஈசூன் ஸ்ரீ நாரா­யண மிஷ­னில் மதிய உண­வு­வி­ருந்­துக்கு ஏற்­பாடு செய்­த­னர்.

அவர்­க­ளின் அன்­றைய மதிய உண­விற்­கான செல­வினை இல்­லத்­தின் தலைமை நிர்­வாகி திரு.தேவேந்­தி­ர­னி­டம் அப்­துல் கலாம் இலட்சியக் கழகத்தின் தலை­வர் திரு கே. கேச­வ­பாணி வழங்­கி­னார்.

இந்­திய அதி­பர் மாளி­கை­யில் ஒவ்வோர் ஆண்டும் 'இஃப்­தார் விருந்து' அளிக்­கும் நிகழ்வை தமது ஐந்தாண்டு பதவி காலத்­தின்போது மாற்­றி­ய­வர் டாக்­டர் அப்­துல் கலாம். தமது பத­வி­கா­லத்தில் விருந்தை நடத்­தா­மல், அதற்­கான செலவைவிட சற்று அதிகமான தொகையை அவர் ஆத­ர­வற்­ற­வர்­களுக்கு அளித்து வந்­தார் என்று அப்துல் கலாம் இலட்சியக் கழகத்தினர்.