எந்திரவியலில் தடம் பதிக்கும் முனைவர் ராஜேஷ்

எஸ்.வெங்­க­டேஷ்­வ­ரன்

சுத்­தி­க­ரிப்பு என்­பது ஒரு கடி­ன­மான தொழில். சமூ­கத்­திற்கு ஆற்­றும் சேவை என்­று­கூட சொல்­ல­லாம்.

அதி­லும் கொவிட்-19 கிரு­மித்­தொற்று நில­வும் சூழ­லில் சுத்­தி­க­ரிப்­புக்­கான தேவை, பன்­ம­டங்கு அதி­க­ரித்­துள்­ளது.

இத்­த­கைய சுத்­தி­க­ரிப்­புத் துறை­யில் உற்­பத்­தித்­தி­றன் மிகுந்த இயந்­தி­ரங்­கள் தயா­ரிப்­பில் முக்­கி­யப் பங்கு வகித்து வரு­கி­றார் முனை­வர் மோகன் ராஜேஷ் இலரா, 39.

செயற்கை நுண்­ண­றி­வுத் தொழில்­நுட்­பம் கொண்டு தயா­ரிக்­கப்­படும் இயந்­திரங்­கள் குறித்­துக் கடந்த 16 ஆண்­டு­க­ளாக இயந்­தி­ர­வி­யல் ஆராய்ச்­சி­யில் ஈடு­பட்­டுள்ள இவர், தற்­போது சிங்­கப்­பூர் தொழில்­நுட்ப வடி­வ­மைப்­புக் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் (எஸ்­யு­டிடி) பொறி­யி­யல் பொருள் மேம்­பாட்­டுத் துறை உத­விப் பேரா­சி­ரி­ய­ராக பணி­பு­ரி­கிறார்.

கிட்­டத்­தட்ட 30 வித­மான சுத்­தி­க­ரிப்பு இயந்­தி­ரங்­களில் ஆராய்ச்சி மேற்­கொண்டு வரும் 50 ஆய்­வா­ளர்­கள் கொண்ட குழுவை வழி­ந­டத்தி வரு­கி­றார் திரு ராஜேஷ்.

உரு­வத்தை மாற்­றக்­கூ­டிய எந்­தி­ர­வி­யல் ஆராய்ச்­சி­யில் 'எஸ்­யு­டிடி' பல்­க­லைக்­க­ழ­கத்­தைச் சேர்ந்த இந்த ஆராய்ச்­சிக் குழு, உல­கின் முதல் நிலை­யில் இருப்­ப­தா­கக் கூறி­னார் முனை­வர் ராஜேஷ்.

"2011ஆம் ஆண்­டில் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பேரா­சி­ரி­ய­ரா­கச் சேர்ந்து, எந்­தி­ர­வியல் ஆராய்ச்­சி­யில் ஈடு­பட்­ட­போது எந்­தத் துறைக்கு இந்த இயந்­தி­ரங்­க­ளின் பயன்­பாடு அவ­சி­ய­மாக இருக்­கும் என்று சிந்­தித்­தோம். பரா­ம­ரிப்பு, சுத்­தி­க­ரிப்பு ஆகிய துறை­களில் மனி­த­வ­ளம் குறை­வா­க­வும் வேலை கடி­ன­மா­க­வும் இருக்­கும் என்­பதை அறிந்­தோம். அதில் நம் இயந்­தி­ரங்­கள் பெரு­ம­ள­வில் உத­வும். சுத்­தத்­திற்கு சிங்­கப்­பூர் அறி­யப்­ப­டு­வ­தால் இங்கு தயா­ரிக்­கப்­படும் சுத்­தி­க­ரிப்பு இயந்­தி­ரங்­க­ளுக்கு அதிக மதிப்பு இருக்­கும்," என்­றார் திரு ராஜேஷ்.

தேசிய எந்­தி­ர­வி­யல் திட்­டத்­தின்­கீழ் அடிப்­படை எந்­தி­ர­வி­யல் ஆராய்ச்­சியை மேற்­கொள்ள முடிந்­தது என்­றும் உல­கின் மற்ற பல நாடு­களை ஒப்­பி­டும்­போது சிங்­கப்­பூர் அர­சாங்­கம் எந்­த­ர­வி­யல் ஆராய்ச்­சிக்கு வெகு­வாக ஆத­ர­வ­ளித்­துள்­ளது என்­றும் குறிப்­பிட்­டார் அவர்.

"எந்­தி­ர­வி­யல் துறை ஆராய்ச்­சிக்­குப் பங்­க­ளித்­து­வ­ரும் நாடு­களில் சிங்­கப்­பூர் உயர்ந்த நிலை­யில் உள்­ளது. உல­கத்­த­ரத்­தில் போட்­டித்­தன்­மை­மிக்க ஆய்­வா­ளர்­கள், பொறி­யா­ளர்­களை நாம் உரு­வாக்­கு­வ­தால் அந்த நிலையை எட்­டி­யுள்­ளோம். அனைத்­து­லக அள­வில் நம் தொழில்­நுட்ப உரு­வாக்­கங்­களை உற்­பத்தி செய்ய முடி­வ­தும் அதற்கு ஒரு முக்­கி­யக் கார­ணம்," என்­றார் ராஜேஷ்.

சுத்­தி­க­ரிப்பு இயந்­தி­ரங்­க­ளைத் தயாரிக்­கும் 'லயன்ஸ்­போட் இன்­டர்­நே­ஷ­னல்' (Lionsbot International) உட்­பட கப்­பல், கடல்­சார், பூச்­சிக் கட்­டுப்­பாட்­டுக்­கான இயந்­தி­ரங்­க­ளைத் தயா­ரிக்­கும் 'ஓஷி­யா­னியா ரோபோ­டிக்ஸ்' (Oceania Robotics) என்ற இரு நிறு­வ­னங்­க­ளுக்­கும் துணை நிறு­வ­னர் திரு ராஜேஷ்.

"எந்­தி­ர­வி­யல் சார்ந்த நிறு­வ­னங்­கள் பல இல்­லா­த­தால் நிறைய இளம் எந்­தி­ர­வி­யல் ஆய்­வா­ளர்­கள் சிறிது காலம் கழித்து மற்ற துறை­க­ளுக்கு மாறி­வி­டு­கி­றார்­கள். அவர்­களை இத்­து­றைக்கு ஈர்த்து தக்­க­வைத்­துக்­கொள்ள இந்த நிறு­வ­னங்­களை அமைத்­தேன்," என்­றார் திரு ராஜேஷ்.

ஜூவல் சாங்கி, சிங்­கப்­பூர் தேசிய கலைக்­கூ­டம், ரயில் நிலை­யங்­கள் போன்ற பொது இடங்­கள், அலு­வ­லக வளா­கங்­கள், கொவிட்-19 தொடர்­பான தனி­மைப்­ப­டுத்­தும் வளா­கங்­கள் என்று பல இடங்­களில் ராஜேஷ் ஆராய்ச்­சி­யில் உரு­வான இயந்­தி­ரங்­கள் செயல்­பட்டு வரு­கின்­றன.

உள்­ளூர் மட்­டு­மில்­லா­மல் உல­கில் ஏறக்­கு­றைய 20 நாடு­க­ளுக்கு இந்­தச் சுத்­தி­கரிப்பு இயந்­தி­ரங்­கள் உற்­பத்தி செய்­யப்­படு­கின்­றன.

"கிரு­மித்­தொற்று கார­ணத்­தால் சுத்­தி­கரிப்பு நட­வ­டிக்­கை­கள் முடுக்­கி­வி­டப்­பட்டுள்­ளன. முன்­பெல்­லாம் ஒரு நாளுக்கு ஒரு தடவை மட்­டுமே சுத்­தம் செய்ய வேண்­டிய இடத்தை, இப்­போது பல முறை சுத்­தம் செய்­ய­வேண்­டிய கட்­டா­யம் ஏற்­பட்­டுள்­ளது. இத­னால் ஏற்­படும் மனி­த­வள பற்­றாக்­குறை­க­ளைப் பூர்த்தி செய்ய இயந்­தி­ரங்­கள் கைகொ­டுக்­கின்­றன. கொரோனா நோயா­ளி­க­ளுக்­கான இடங்­க­ளைச் சுத்தி­கரிக்க இயந்­தி­ரங்­க­ளைப் பயன்­ப­டுத்­து­வது பாது­காப்­பா­ன­தா­க­வும் அமை­கின்­றன," என்­றார் ராஜேஷ்.

செயற்கை நுண்­ண­றி­வுத் தொழில்­நுட்­பம் மனி­தர்­க­ளி­ட­மி­ருந்து வேலை­வாய்ப்பு­களைக் பறித்­து­வி­டுமோ என்று சமூ­கத்­தில் நில­வும் அச்­சம் குறித்­துக் கருத்­த­ளித்­தார் ராஜேஷ்.

"கிட்­டத்­தட்ட அனைத்து நிறு­வ­னங்­களி­லும் அமைப்­பு­க­ளி­லும் இப்­போது கணினி மற்­றும் இணை­யப் பயன்­பாட்­டைக் காண­லாம். தொழில்­நுட்­பம் மனித வாழ்க்­கைக்கு ஆக்­க­க­ர­மா­கப் பங்­காற்றி வரு­கிறது.

"அது­போ­லவே செயற்கை நுண்­ண­றி­வின் வளர்ச்­சி­யும் எதிர்­கா­லத்­தில் சமு­தாயத்­தின் வளர்ச்­சிக்­குப் பயன்­படும். உதா­ர­ணத்­திற்கு, சுத்­தி­க­ரிப்பு துறைப் பணி­யா­ளர்­கள் துப்­ப­ரவு வேலை செய்­வ­தற்­குப் பதி­லாக இயந்­தி­ரங்­களை நிர்­வகிப்­ப­தில் கவ­னம் செலுத்­த­லாம். வேலைப் பளு குறை­யும். வேலை­க­ளின் தன்­மை­கள் மாறுமே தவிர வேலை­வாய்ப்­பு­கள் அழி­யாது," என்­றார் முனை­வர் ராஜேஷ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!