மு.கு.இராமச்சந்திரா புத்தகப் பரிசு பெற்ற 'கரையும் தார்மீக எல்லைகள்'

1 mins read
f152db99-3a00-4b31-a2df-27a826e795e3
பரிசுபெற்ற திரு. சிவானந்தம் நீலகண்டனுடன் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் திரு. நா. ஆண்டியப்பனும் கழகச் செயலாளர் திருவாட்டி கிருத்திகாவும். படம் : சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் -

திரு சிவா­னந்­தம் நீல­கண்­ட­னின் "கரை­யும் தார்­மீக எல்­லை­கள்" என்­னும் கட்­டுரை நூல் இவ்­வாண்­டின் $2,000 மு கு இரா­மச்­சந்­திரா புத்­த­கப் பரி­சைப் பெறு­கிறது.

ஆனந்­த­ப­வன் உண­வக ஆத­ர­வு­டன் சிங்கப்­பூர்த் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கம் ஆண்­டு­ தோறும் வழங்கி வரும் இந்த புத்­த­கப் பரி­சுத் திட்­டத்­தின் 12வது ஆண்­டுப் பரி­ச­றி­விப்பு விழா கடந்த ஞாயிறு மாலை வலை­யொளி வாயி­லாக இணை­யத்­தில் நடைபெற்றது.

வளர்தமிழ் இயக்­கத் தலை­வர் திரு. எஸ் மனோ­க­ரன் இதில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்துகொண்டு உரை­யாற்­றி­னார்.

2021ஆம் ஆண்­டின் புத்­த­கப் பரிசு தேர்­வுக் குழு­வில், கணை­யாழி இத­ழின் ஆசி­ரி­ய­ரும் தஞ்­சைத் தமிழ்ப் பல்­க­லைக் கழ­கத்­தின் முன்­னாள் துணை­வேந்­த­ரு­மான முனை­வர் ம. இரா­சேந்­தி­ரன், மலாயா பல்­க­லைக்­க­ழ­கத்­தின் மொழி, மொழி­யி­யல் புலத் தமிழ்ப் பிரி­வின் மூத்த விரி­வு­ரை­யா­ளர் முனை­வர் மலர்­விழி சின்­னையா, சிங்­கப்­பூர் சமூக அறி­வி­யல் பல்­க­லைக்கழ­கத்­தின் தமிழ் மொழி, இலக்­கி­யத் துறை­யின் தலை­வர் முனை­வர் மு. மணி­வண்­ணன் ஆகி­யோர் நடு­வர்­க­ளா­கப் பணி­யாற்றினர்.

இவ்­வாண்டு போட்­டிக்கு 15 கட்­டுரை நூல்­கள் வந்­தி­ருந்­த­தாக சிங்­கப்­பூர் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கம் தெரி­வித்­தது.

நிகழ்­வில் நடு­வர்­க­ளின் சார்­பில் உரை­யாற்­றிய முனை­வர் மலர்­விழி சின்­னையா பரி­சுக்­கு­ரிய நூலைத் தெரிவு செய்­த­தற்­கான கார­ணங்­க­ளை­யும் அது மற்ற நூல்­களில் இருந்து எவ்­வாறு வேறு­ப­டு­கிறது என்­ப­தை­யும் எடுத்­து­ரைத்­தார்.