தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நடுவானில் வரும் பயம் நாட்படத் தெளியும்: வான்குடை அனுபவம் குறித்து மகேஸ்வரன்

3 mins read
292b9a31-4305-4044-91da-439e556b3fa2
செஞ்சிங்கங்களின் வான்குடை சாகசம், சிங்கப்பூரர்களுக்கு விருப்பமானதொரு தேசிய தின அங்கமாகிவிட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இர்­‌‌‌ஷாத் முஹம்­மது

மரினா பே மிதக்­கும் மேடை­யில் பத்து ஆண்­டு­க­ளுக்குமுன் தேசிய தின அணி­வகுப்­பின்­போது முதன்­மு­றை­யாக வான்­குடை சாக­சம் புரிந்­தார் மூத்த வாரண்ட் அதி­காரி மகேஸ்­வ­ரன் பிராங்க்­ளின் மிராண்டா. அவர் மீண்­டும் இவ்­வாண்டு மூன்­றா­வது முறை­யாக அதே மேடை­யில் தரையிறங்­கி­னார்.

கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி­யன்று ஒத்­தி­வைக்­கப்­பட்ட சிங்­கப்­பூ­ரின் 56வது தேசிய தின அணி­வ­குப்பு நடந்­தே­றி­யது. அதில் 'ரெட் லயன்ஸ்' எனும் செஞ்­சிங்­கங்­கள் அணி­யின் ஐந்து சாகச வீரர்­களில் ஒரு­வ­ராக அவர் இடம்­பெற்­றி­ருந்­தார்.

கிட்­டத்­தட்ட 5,000 அடி உய­ரத்­தில் விமா­னத்­தி­லி­ருந்து குதித்து மரினா பே மிதக்­கும் மேடை­யின் குறு­கிய தளத்­தில் ஐவ­ரும் ஒரு­வர்பின் ஒரு­வ­ராக மிகத் துல்­லி­ய­மா­கக் குதித்­ததை, அரங்­கில் இருந்த அனை­வ­ரும் ஆர­வா­ரத்­து­டன் கைதட்டி வர­வேற்­ற­னர்.

"குறைந்த எண்­ணிக்­கை­யில் பார்­வை­யா­ளர்­கள் ஆங்­காங்கே அமர்ந்­தி­ருந்த காட்சி வித்­தி­யா­ச­மாக இருந்­தது. இதற்கு முன்­னர் 20,000க்கும் மேற்­பட்­ட­வர்­க­ளுக்­குக் கைய­சைத்த நினை­வு­கள், என் கண் முன்னே தோன்ற 1,000 பேர் மட்­டுமே இருந்த அரங்­கில் கைய­சைத்த அனு­ப­வம் உண்­மை­யில் வித்­தி­யா­சம்­தான். ஆனால் பல்­லா­யி­ரக்­க­ணக்­கா­னோர் தொலைக்­காட்சி­யில் பார்த்­துக்­கொண்டு இருப்­பார்­கள் என்ற உணர்­வும் என்­னுள் இருந்­தது," என்­றார் அவர்.

"நோய்ப் பர­வல் சூழ­லில் இந்த வாய்ப்பு கிடைத்­த­தற்­கும் இதன்­மூ­லம் எத்­த­னையோ ஆயி­ரம் மக்­க­ளின் உணர்­வு­களை மேலோங்க வைக்­கும் வாய்ப்பு கிடைத்­த­தற்­கும் மிகுந்த பெரு­மைப்­ப­டு­கி­றேன்," என்று அவர் குதூ­க­லத்­து­டன் தெரி­வித்­தார்.

வழக்­க­மாக 10,000 அடி உய­ரத்­தி­ல் இ­ருந்து வான்­கு­டை­யின் உத­வி­யு­டன் தரை­ இ­றங்­கும் ஆற்­றல் கொண்­ட­வர்­கள் செஞ்­சிங்­கங்­கள்.

தேசிய தினத்தை முன்­னிட்டு 2011, 2012 ஆண்­டு­களில் சாக­சம் புரிந்த திரு மகேஸ்­வ­ரன், மீண்­டும் இந்த ஆண்டு அரங்­கில் மிளிர்­வார் என்று எதிர்­பார்க்­க­வில்லை. ஆனால், அதிர்­‌ஷ்­டம் மீண்­டும் கத­வைத் தட்­டி­ய­தா­கவே அவர் நினைக்­கி­றார். மூன்­றா­வது முறை­யாக வாய்ப்பு கிடைத்த செய்தி, அவ­ருக்கு அள­வற்ற மகிழ்ச்­சி­யைத் தந்­தது.

ஏறக்­கு­றைய 1,550 முறை வானி­லி­ருந்து குதித்­துப் பயிற்சி எடுத்­துள்ள அவ­ரது வான்­குடை சாக­சப் பய­ணம், 2000ஆம் ஆண்டு தொடங்­கி­யது. விடா­மு­யற்­சி­யுடனும் கட்­டுப்­பாட்­டு­ட­னும் பயிற்­சி­யைத் தொடங்­கிய அவர், 2008ஆம் ஆண்­டில் செஞ்­சிங்­கங்­கள் அணி­யில் ஒரு­வ­ரா­கத் தகு­திபெற்­றார்.

தொடக்­கத்­தில் தம் தாயார் மிகுந்த அச்சத்துடன் இருந்­த­தைச் சுட்­டிய அவர், தமக்­கும் ஒவ்­வொரு முறை­யும் அச்­சம் இருக்­கத்தான் செய்­கிறது என்­றார்.

"எந்த மனி­த­னுக்­கும் உய­ரத்­தி­லி­ருந்து குதிப்­ப­தற்­குப் பய­மா­கத்தானே இருக்­கும். தொடர்ந்து பயிற்சி செய்­த­தால்­தான் தன்­னம்­பிக்கை அதி­க­ரித்து, திட­மாக இருக்க முடிந்­தது. எத்­தனை முறை குதித்­தா­லும் பயம் என்­பது இருக்­கத்­தான் செய்­யும். ஆனால் அனு­ப­வம் வளர வளர, பயம் குறை­யும்," என்­றார் மகேஸ்­வ­ரன்.

குறிப்­பாக, பயிற்­சி­யின்­போது கற்­ற­தைச் செயல்­ப­டுத்­து­வ­தில் கவ­ன­மாக இருந்­தார் அவர்.

விமா­னத்­தி­லி­ருந்து குதித்து வானத்­தில் கிட்­டத்­தட்ட 4, 5 நிமி­டங்­கள் 'ஃப்ரீ ஃபால்' முறை­யில் நிலத்தை நோக்கி வரும் நேரத்­தி­லும் சிந்­த­னைக்கு ஓய்­வில்லை.

விமா­னத்­தில் இருக்­கும்­போது வானிலை, காற்­றின் திசை, அதன் வேகம் போன்ற தக­வல்­க­ளெல்­லாம் குதிப்­ப­தற்கு முன்­னர் அவர்­க­ளுக்கு வழங்­கப்­படும். அந்­தக் குழு­வி­னர் தங்­க­ளின் தரை­யி­றங்­கும் திசை, வரிசை, முறை­க­ளைக் கலந்­தா­லோ­சிப்­பர்.

அதன் பின்­னரே துல்­லி­ய­மா­கத் திட்­ட­மிட்டு தரை­யி­றங்­கு­வர்.

உடல் ஆரோக்­கி­யத்­து­டன் இருப்­பது, கட்­டுக்­கோப்­பாக வாழ்­வது, தொடர்ந்து முயற்சி செய்­வது, துணிச்சலாகவும் உறு­தி­யு­ட­னும் செயல்­ப­டு­வது, கட­மை­யு­ணர்­வு­ட­னும் பொறுப்­பு­ணர்­வு­ட­னும் திகழ்­வது போன்ற நெறி­க­ளைத் தமது வாழ்க்­கை­யின் கோட்­பா­டு­க­ளாகப் பின்­பற்­றி­வ­ரு­வ­தாக திரு மகேஸ்­வ­ரன் பகிர்ந்­து­கொண்­டார்.