ஆயிரம் பார்வையாளர்களுடன் மரினா பே சேண்ட்ஸ் அரங்கில் குமாரின் நகைச்சுவைப் படைப்பு

ஆயிரம் பார்வையாளர்களுடன் மரினா பே சேண்ட்ஸ் அரங்கில் குமாரின் நகைச்சுவைப் படைப்பு

2 mins read
dcf5c95b-1bb4-4f39-94cd-af2a0b198ad0
திரு குமார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

எஸ். வெங்­க­டே­‌ஷ்­வ­ரன்

சமூ­கத்­தில் பெரும்­பா­லோர் தடுப்­பூசி போட்டுக்­கொண்­டுள்ள சூழ­லில் நிகழ்ச்­சி­களுக்கு மேலும் பலர் நேர­டி­யா­கச் செல்­வதற்கு அர­சாங்­கம் கட்­டுப்­பா­டு­களைச் சற்று தளர்த்­தி­யுள்­ளது.

இதைத் தொடர்ந்து, 1,000 பார்­வை­யாளர்­களுடன் கூடிய முதல் கலை நிகழ்­வாக நகைச்­சு­வைக் கலை­ஞர் குமா­ரின் 'குமார் அன்­மாஸ்க்ட்' (Kumar Unmasked) நிகழ்வு மரினா பே சேண்ட்ஸ் அரங்­கில் நடை­பெற்று வரு­கிறது.

நேற்று முன்­தி­னம் தொடங்கி இம்­மாதம் 26ஆம் தேதி வரை நடை­பெ­றும் இந்த நகைச்­சுவை நிகழ்­வில், கொரோனா கிரு­மித்­தொற்­றால் சமூ­கத்­தில் ஏற்­பட்ட புது வாழ்க்­கை­மு­றை­கள் குறித்த நகைச்­சுவை இடம்­பெ­றுகிறது என்­றார் திரு குமார், 53.

"தற்­போ­தைய சூழலில் ஒரு­வரின் வாழ்­வில் நகைச்­சுவை மிக முக்­கி­யம் என்று நினைக்­கி­றேன். பல­வற்றை எளி­மை­யான கண்­ணோட்­டத்­தில் பார்க்க அது உத­வு­கிறது. முப்பது ஆண்­டு­க­ளாக என் ரசி­கர்­க­ளாக இருப்­ப­வர்­க­ளுக்­குத் தெரி­யும். யாரை­யும் காயப்­ப­டுத்­தும் நோக்­கத்­தில் என் நகைச்­சுவை பாணி இருக்­காது," என்­றார் அவர்.

அண்­மை­யில் இன­வா­தம் தொடர்­பான சம்­ப­வங்­கள் நடந்­துள்­ளதை நினை­வு­கூர்ந்த குமார், இந்­தப் பிரச்­சி­னையை எதிர்­கொள்ள பெற்­றோ­ரின் பங்கு மிக முக்­கி­யம் என்று குறிப்­பிட்­டார்.

"வீட்­டில் தவ­றான முறை­யில் பேசு­வதை நிறுத்­த­வேண்­டும். தவ­றான சிந்­த­னை­கள் அங்குதான் முளைக்­கின்­றன. பிள்­ளை­கள் வள­ரும் சூழல் மிக முக்­கி­யம்," என்­றார் திரு குமார்.

கொரோனா நோய்ப்­ப­ர­வல் காலம், தம்மைப் போன்ற கலை­ஞர்­க­ளுக்­குப் பெரும் அடி­யாக இருந்­தது என்­றும் தற்­போது நேரடி நிகழ்ச்­சி­கள் நடப்­பது வர­வேற்­கத்­தக்­கது என்­றும் சொன்­னார் திரு குமார். தமது நிகழ்ச்­சி­யைப் பார்க்க வரு­ப­வர்­கள் நிச்­ச­யம் வயிறு குலுங்கச் சிரித்து மகிழ்ச்சி­யு­டன் வீடு திரும்­பு­வார்­கள் என்­றும் நம்­பி­கை­ய­ளித்­தார் இவர்.

கடந்த ஆண்டு டிசம்­பர் மாதத்­தில் நிதித் திரட்­டுக்­கான ஒரு கலை நிகழ்ச்சி, இவ்­வாண்டு மார்ச் மாதம் எஸ்­பி­ள­னேட் அரங்­கில் 'லெட்ஸ் ஜோகெட் & கோரெங் டுகெதர்', ஏப்­ரல், மே மாதங்­களில் கேபிட்­டோல் அரங்­கில் 'ஐ எம் குமார்' ஆகிய நிகழ்ச்­சி­களை திரு குமார் படைத்­துள்­ளார்.

பிரம்­மாண்டமாக நடக்­கும் 'குமார் அன்­மாஸ்க்ட்' நிகழ்ச்­சிக்­கான நுழை­வுச்­சீட்­டு­கள், சிஸ்­டிக் இணை­யத்­த­ளத்­தில் $58 முதல் $113 வரை­யி­லான விலை­யில் விற்­பனை­யா­கின்­றன. இந்த 90 நிமிட நிகழ்ச்சிக்கு 'பேஸ் என்டர்டெய்ன்மென்ட் ஏஷியா', 'ரா ரா புரொ­டக்‌‌‌ஷன்ஸ்' ஆகிய அமைப்­பு­கள் ஏற்­பாடு செய்­துள்­ளன.