கல்வியைவிட முக்கியம் மாணவர் நலன்

கல்வியைவிட முக்கியம் மாணவர் நலன்

2 mins read
da967125-1a17-46fb-af1d-fc2dcdea7a18
மாணவர்களின் சிறிய செயல்களிலும் அக்கறைகாட்டி அவர்களது நலனில் கவனம் செலுத்தும் செளமியா சதீஷ். (வலது படம்) -

கட்­ட­டக்­க­லையை பற்­றிய அறிவுத் திறனை மாண­வர்­க­ளுடன் பகிர்ந்­து­கொண்­டால் போதும் என்ற எண்ணத்துடன் ஆசி­ரி­யர் துறை­யில் அடி எடுத்துவைத்தார் தெமா­செக் பல­துறை தொழிற்­கல்­லூரி, பசு­மைக் கட்­ட­டக்­கலை ஆசி­ரி­யர் திரு­மதி சௌம்யா சதீ­ஷ். அவரது கண்­ணோட்­டத்­தையே மாற்­றி­யது சேர்ந்த ஒரு மாதத்­தில் நடந்த ஒரு நிகழ்வு.

கல்லூரியின் அறி­முக வாரத்­தின்­போது ஒரு மாண­வ­னின் தந்தை திடீ­ரென விபத்­தில் கால­மான செய்தி திரு­மதி சௌம்­யா­விற்கு தெரி­ய­வந்­தது. குடும்­பத்தைத் தாங்கிப் பிடித்த தந்தை இறந்த மூன்­றாம் நாளே பள்ளி திரும்பினார் அந்த மாண­வர்.

இவரைப் போலவே ஒவ்­வொரு மாண­வ­ரும் தங்­க­ளுடைய தனிப்­பட்ட வாழ்க்­கை­யில் நிறைய பிரச்­சினை­களை­யும் சவால்­க­ளை­யும் எதிர்­கொள்­கின்­ற­னர், ஆசி­ரி­யர் என்ற முறை­யில் தமது கடமை கற்­பித்­த­லுக்கு மேலா­னது என்­பதை அப்போது திருமதி சௌம்யா உணர்ந்­தார்.

2015ஆம் ஆண்டு ஆசி­ரி­ய­ர் தொழிலைத் தொடங்­கிய இவர், ஆசி­ரி­யர்­க­ளுக்­கான அதி­பர் விருதை பெற இவ்வாண்டு முன்மொழியப்­பட்ட 17 பேரில் ஒரு­வர். பசுமைக் கட்­டடக் ­க­லை­யில் குறிப்பாக பெரும் ஆர்­வம் கொண்ட திரு­மதி சௌம்­யா­வின் தாரக மந்திரம், "பகிரும்­போது பன்மடங்கு பெருகும் அறிவு."

சுற்­றுப்­புற நிலைத்­தன்­மையை கட்­டிக்­காக்க கட்­டடத் துறையில் மாற்றங்கள் வேண்­டும் என்று நம்­பும் இவர், பொறுப்­புள்ள சுற்­றுப்­புற நிலைத்­தன்­மை­யின் மீது அக்­கறைகொண்ட மாண­வர்­களைத் தமது கற்பித்தலின் வழி உரு­வாக்க முனைகிறார்.

இவர் வலியுறுத்துவது முக்கியமாக ஒன்றைத்தான்.

"ஓர் ஆசி­ரி­ய­ராக முத­லில் மாண­வர்­களைப் புரிந்­து­கொண்டு அவர்­ க­ளது உடல்நல­னை­யும் மன­ந­ல­னை­யும் உறுதி செய்ய வேண்­டும். படிப்பு, கற்­றல் என்­பது எந்த வய­தி­லும் பெறக் கூடியவை. ஆனால் பிரச்­சினை­களைச் சமாளித்து தீர்வுகண்டு நிம்­மதி பெற்­றால்­தான் அவர்­க­ளால் படிப்­பில் கூடுதல் கவ­னம் செலுத்த முடி­யும்."

மன அழுத்­தத்­தால் தவித்த மாண வரை மன­நல சிகிச்­சைக்கு அழைத்துச் செல்­வது, வீட்­டில் பிரச்­சினை­களைச் சந்­தித்து வந்த மாண­வரை தீபா­வளி அன்று தமது வீட்­டிற்கு விருந்­திற்கு அழைப்­பது, மாண­வ­ரின் வீட்­டிற்குச் சென்று பல­கா­ரங்­கள் தந்து ஆத­ரவுக் கரம் நீட்டுவது என இவரது சிறுசிறு செயல்­கள் மாண­வர்­களின் மன­தில் இடம் பிடித்தன.

அவர்க­ளது ஒரு வழி­காட்­டி­யாகவே மாறி­யி­ருக்­கி­றார் திருமதி சௌம்யா.

சென்ற ஆண்டு கிரு­மித்­தொற்று தலை­தூக்­கியபோது ஆசி­ரி­யர்­க­ளுக்கு பல புதிய சவால்­களும் வந்து சேர்ந்­தன.

மாண­வர்­களை நேர­டி­யாகச் சந்­தித்து உரை­யாடி, கேள்­வி­கள் கேட்டு, அவர்­க­ளது கேள்­வி­க­ளுக்கு பதில்கூறிப் பழகிய திரு­மதி சௌம்யா தொழில்­நுட்ப உத்­தி­களைக் கற்­று, மாண­வர்­க­ளின் கவ­னத்தை பெற முயற்­சி­ எடுத்­தார்.

"இக்கடி­ன­மான சமயத்தில், மாண­வர்­கள் எந்­நே­ர­மும் என்னை தொடர்பு ­கொண்டு பேச­லாம் என்­பது நான் அதி­கம் வலி­யு­றுத்­தும் ஒன்று. இணை­யம் வழியே பாடங்­கள் நடப்பதால் என்னுடன் நேரடித் தொடர்பு இல்­லா­மல் போக­லாம். ஆனால் மாண­வர்­கள் ஒரு­போ­தும் தனி­மை­யில் உதவி அளிக்க ஆளின்று தவிக்கக்கூடாது," என்றார் திருமதி செளம்யா.