கலை வளர்க்கும் புரவலர்களுக்கு அரசாங்கம் அங்கீகாரம்

ஜனார்த்­த­னன் கிருஷ்­ண­சாமி

கலை­க­ளுக்கு ஆத­ர­வ­ளிப்­ப­தன் மூலம் சமூ­கத்­தின் ஒட்­டு­மொத்த மன அமை­திக்­குப் பங்­க­ளிப்­ப­தாக தேசிய கலை­கள் மன்­றத்­தின் 'கலை­க­ளின் நண்­பர்' விரு­தைப் பெற்ற ஷபீர் ஹசான்­பாய், 71, கூறு­கி­றார்.

நன்­கொடை அளிப்­ப­தி­லும் நன்­கொடை திரட்­டு­வ­தி­லும் பல்­லாண்­டு­க­ளாக மும்­மு­ர­மா­கச் செயல்­பட்டு வரு­கி­றார் திரு ஷபீர்.

"நானும் என் பங்­கா­ளி­களும் எடுத்­துள்ள முயற்­சி­க­ளால் இது­வரை 20 கலைத்­துறை மாண­வர்­க­ளுக்கு நிதி­யு­தவி அளித்­தி­ருக்­கி­றோம்," என்று அவர் தமிழ் முர­சி­டம் தெரி­வித்­தார்.

திரு ஷபீர் உட்­பட கலைப் புர­வ­லர்­க­ளா­க­வும் கலை­க­ளின் நண்­பர்­க­ளா­க­வும் உள்ள 264 கொடை­யாளிகளுக்கு அண்­மை­யில் விரு­து­கள் வழங்­கப்­பட்­டன. இவர்­கள் கடந்­தாண்டு 40 மில்­லி­யன் வெள்­ளியை கலை அமைப்­பு­க­ளுக்­கும் கலை­ஞர்­க­ளுக்­கும் கொடை­யாக வழங்­கி­னர்.

இவர்களை அங்கீகரிக்கும் மெய்­நி­கர் விருது நிகழ்ச்சி செப்­டம்­பர் 17ஆம் தேதி சிங்­கப்­பூர் சீன கல­சார நிலை­யத்­தில் நடந்தது. இதில் கலா­சார சமூக, இளை­யர் துறை அமைச்­சர் எட்­வின் டோங் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்­டார்.

விருது குறித்து பெருமை அடை­வ­தாகக் கூறிய திரு ஷபீர், நிதியை சரி­யாக, செயல்­தி­றன்­மிக்க முறை­யில் பயன்­ப­டுத்­தும் பொறுப்பு ஒவ்­வொரு புர­வ­ல­ருக்­கும் உள்­ளது என்றும் தெரி­வித்­தார்.

தம்­மைப் போல கலை அமைப்­பு­களை ஆத­ரிக்க விரும்­பு­வோர், எத்­த­கையை அள­வில் நிதி வழங்­கி­னா­லும் கலை அமைப்­பைச் சரி­யாக புரிந்­து­கொண்டு தரு­வது சிறந்­தது எனத் தெரி­வித்­தார்.

"உள்­ளூர் கலை­ஞர்­க­ளுக்கு ஊக்­கம் தரு­வதும் அவர்­க­ளைப் பொருத்­தமான உதவி அமைப்­பு­க­ளு­டன் இணைப்­ப­தும் முக்­கி­யம்," என்றும் பகிர்ந்துகொண்டார் திரு ஷபீர்.

தனி­ந­பர்­கள் சில நேரங்­களில் தவறு செய்­தா­லும் சமூக நல­னைக் கருதி அறப் ­ப­ணி­க­ளைப் புர­வ­லர்­கள் கைவி­டக்கூடாது என்று கூறிய திரு ஷபீர், சிங்­கப்­பூ­ரைப் பொறுத்­த­வரை பத்தில் 9 அமைப்­பு­கள் நம்­பிக்­கைக்­கு­ரி­ய­வை என்றார்.

திரு ஷபீர், உலோக மறு­ப­ய­னீட்டு குடும்ப வர்த்­தக­மான இன்டோ ஸ்ட்­ரெய்ட்ஸ் டிரே­டிங்­ நிறுவனத்தில் 50 ஆண்­டு­க­ளாக நிர்­வா­கி­யா­கப் பணி­யாற்­றி­யுள்­ளார்.

சிங்­கப்­பூர் இந்­தி­யர் கல்வி அறக்­கட்­ட­ளை­யின் துணைத் தலை­வர், சிண்டா எனும் சிங்­கப்­பூர் இந்­தி­யர் மேம்­பாட்­டுச் சங்­கத்­தின் அறங்­கா­வ­லர் அவை உறுப்­பி­னர் என பல சமூ­கப் பொறுப்­பு­க­ளை­யும் அவர் வகிக்­கி­றார். கலை­க­ளின் பக்­கம் தமது கவ­னம் திரும்­பி­ய­தற்­கான கார­ணத்­தைத் தமிழ் முர­சி­டம் தெரி­வித்­தார்.

"என் மனைவி சிறந்த பாட­க­ரு­ம் இசைப் பிரியரும் ஆவார். மகள் பியானோ வாசிப்­பார். என் பேரப்­பிள்­ளை­கள் பியானோ, சாக்­ஸஃ­போன் ஆகிய கரு­வி­களை வாசிப்­பார்கள். எனக்கு இசைத்­தி­றமை இல்­லா­விட்­டா­லும் நான் அனைத்து வகை இசை­யையும் கேட்டு மகிழ்­வேன்," என்று கூறி­னார் திரு ஷபீர்.

கலை­கள் நமக்குத் தேவை என்றும் அவற்றை ஆதரிப்பது அவசியம் என்றும் மக்­க­ளி­டையே விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து ­வது முக்கியம் என்று திரு ஷபீர் வலியுறுத்தினார். கலா­சா­ரம், இன நல்­லி­ணக்­கம் போன்ற சமூக பண்­பு­ந­லன்­கள் வளர்க்­கப்­பட்­டால் அதனால் கலை ரசி­கர்­களும் பெருகுவார்கள்," என்று அவர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!