உடலுக்கும் உயிருக்கும் தடுப்பூசியே கவசம்

இந்து இளங்­கோ­வன்

பெயர் குறிப்­பிட விரும்­பாத அந்த மூதாட்­டிக்கு 69 வயது. கொவிட்-19 எதி­ரான தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வ­தில் அவ­ருக்கு உடன்­பாடு இல்லை. நீரி­ழிவு நோயாளி என்­ப­தால் தடுப்­பூ­சி­யைத் தம் உட­லுக்­குள் செலுத்­தி­னால் உடல் நலம் மேலும் பாதிக்­கப்­படும் என்ற பயம் அவ­ருக்கு.

தெரிந்­த­வர்­கள் அனை­வ­ரும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­தும் காய்ச்­சல், உடம்பு வலி போன்ற பக்­க­வி­ளை­வு­க­ளால் தவித்­த­தைக் கண்ட மூதாட்டி, தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­ளத் தயங்­கி­னார்.

இருப்­பி­னும், பிள்­ளை­க­ளின் வற்­பு­றுத்­த­லால் இவ்­வாண்டு ஜூலை மாதம் தனது முதல் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­டார். இப்­போது கூடு­தல் தடுப்­பூசி (பூஸ்­டர்) போட்­டுக்­கொள்ள மறுக்­கி­றார்.

"நான் அதி­கம் வெளியே செல்­வ­தில்லை. பெரும்­பா­லும் வீட்­டி­லே­யே­தான் இருக்­கி­றேன். என் குடி­யி­ருப்பு வட்­டா­ரத்­தில் அதி­கம் கிரு­மித்­தொற்று பர­வ­வில்லை.

"உட­லில் எத்­த­கைய மாற்­றத்தை விளை­விக்­குமோ என்று தெரி­யாமல் எப்­படி இந்­தத் தடுப்­பூ­சியை மீண்­டும் மீண்­டும் போட்­டுக்­கொள்­வது? தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வ­ருக்­கும் இப்­போது கிரு­மித்­தொற்­று­கிறது," என்று தம் கருத்­தைப் பகிர்ந்­து­கொண்­டார் அந்த மூதாட்டி.

இவ­ரைப் போலவே சில முதி­ய­வர்­கள், தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள இன்­ன­மும் தயங்­கு­கின்­ற­னர்.

சிங்­கப்­பூ­ரில் கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துக்­கொண்டே போவ­தால் தங்­க­ளை­யும் தங்­க­ளைச் சுற்­றி­ இருப்­ப­வ­ரை­யும் பாது­காத்­துக்­கொள்ள வேண்­டும் எனத் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வதை முதி­ய­வர்­களி­டையே சுகா­தார அமைச்சு ஊக்­கு­வித்து வரு­கிறது.

அண்­மைய கொவிட்-19 நில­வ­ரம்

கடந்த 28 நாட்­களில் மட்­டும் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் இறந்­த­வர்­களில், இரண்டு தடுப்­பூசி­க­ளை­யும் போட்­டுக்­கொண்­ட­வர்­கள் 26.6 விழுக்­காட்­டி­னர். மீதம் 73.4 விழுக்­காட்­டி­ன­ரும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத, அல்­லது முதல் தடுப்­பூ­சியை மட்­டும் போட்­டுக்­கொண்­ட­வர்­கள் ஆவர்.

கடந்த இரு வாரங்­களில் 60 வய­துக்கு மேற்­பட்­டோ­ரி­டையே பதி­வான புதிய கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­கள், பெரும்­பா­லும் 500க்கு மேலாக இருந்­தன. நேற்று முன்­தின நில­வ­ரப்­படி, கிரு­மித்­தொற்­றால் சிங்­கப்­பூ­ரில் உயி­ரி­ழந்த 215 பேரில், 60 வய­துக்கு மேற்­பட்­டோர் 205.

'டெல்டா'வுக்கு எதி­ரான பாது­காப்பு

முதி­ய­வர்­க­ளி­டையே கிரு­மிப் பர­வ­லைத் தடுத்து தொற்­றுச் சம்­ப­வங்­க­ளைக் குறைத்­திட தடுப்­பூசி கைகொ­டுக்­கிறது.

அத்­து­டன் உல­கெங்­கும் அதி­க­மா­கப் பர­வி­வ­ரும் டெல்டா உரு­மா­றிய கிரு­மியை அண்­ட­வி­டா­மல் தடுக்­க­வும் தடுப்­பூசி உத­வும் என்று பிரான்­சில் நடத்­தப்­பட்ட ஆய்வு ஒன்று காட்­டு­கிறது. கடந்த திங்­கட்­கி­ழ­மை­யன்று இந்த ஆய்வு முடி­வு­கள் வெளி­யி­டப்­பட்­டன. கிரு­மித்­தொற்­றால் ஏற்­ப­டக்­கூ­டிய கடு­மை­யான பாதிப்­பு­கள், உயி­ரி­ழப்­பு­கள் ஆகி­ய­வற்றை மையப்­ப­டுத்தி ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது. 50 வய­துக்­கும் மேற்­பட்ட 22 மில்­லி­யன் மக்­களை ஆய்­வுக்கு உட்­ப­டுத்­தி­ய­தில் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­களைக் காட்­டி­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள், மருத்­து­வ­மனை­களில் அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தும் உயி­ரி­ழப்­ப­தும் 90% குறைவு என்று கண்­ட­றி­யப்­பட்­டது.

பய­மின்றி வெளியே நட­மா­ட­லாம்

அஞ்­சல் துறை­யில் வேலை செய்து ஓய்வு பெற்­று­விட்ட 71 வயது சோம­சுந்­த­ரம் இரா­ம­லிங்­கம், ஏப்­ரல் மாதமே தனது இரு தடுப்­பூ­சி­களை­யும் போட்­டுக்­கொண்­டார்.

கடந்த செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று பூஸ்­டர் தடுப்­பூ­சி­யை­யும் போட்­டுக்­கொண்ட இவர், தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­தால் ஓர­ளவு பயம் இல்­லா­மல் தம்­மால் வெளியே சென்றுவர முடி­கிறது என்­றார்.

பூஸ்­டர் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­ட­தன் மூலம் ஒரு வகை­யில் தமது ஆரோக்­கி­யத்­தை­யும் உறு­திப்­ப­டுத்­திக்­கொள்ள முடி­வ­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

வேலை­யில் பாதுகாப்பு

தின­மும் பல­ரது வீட்­டிற்கு 62 வயது செய்­தித்­தாள் விநி­யோ­கிப்­பா­ளர் திரு இளங்­கோ­வன் செய்­தித்­தாட்­களை விநி­யோ­கம் செய்­கி­றார். இப்­ப­டிப் பல இடங்­க­ளுக்­குச் சென்று பல­ரு­டன் உரை­யாட வேண்­டிய கட்­டா­யம் இருப்­ப­தால் ஏப்­ரல் மாதத்­தி­லேயே தடுப்­பூ­சி­க­ளைப் போட்­டுக்­கொண்­டார். இப்­போது பூஸ்­டர் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­ளத் தயா­ராக இருக்­கி­றார்.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வது

ஒரு முன்­னெச்­ச­ரிக்­கையே

பூஸ்­டர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­தும் 'எல்­லா­வி­த­மான பிரச்­சி­னை­களும்' தங்­க­ளுக்கு ஏற்­பட்­ட­தைத் தம்­மி­டம் நண்­பர்­கள் கூறி­ய­தாக ஓய்­வு­பெற்ற பரா­ம­ரிப்பு அதி­காரி 68 வயது ஜஸ்­வந்த் சிங் கூறி­னார்.

"எனக்கு முதல் இரண்டு தடுப்­பூ­சி­கள் போதும். ஒரு வித்­தி­யா­ச­மும் இந்த பூஸ்­டர் தடுப்­பூ­சி­யில் இருப்­ப­தாக எனக்­குத் தெரி­ய­வில்லை. தடுப்­பூசி என்­பது முன்­னெச்­ச­ரிக்கை என்று அர­சாங்­கம் கூறி­ய­தால் முதல் இரண்டை நான் போட்­டுக்­கொண்­டேன்," என்­றார் திரு சிங்.

நமது உயிர் மட்­டு­மின்றி

பிறர் உயி­ருக்­கும் உத்­த­ர­வா­தம்

மருத்­து­வ­மனை ஒன்­றில் நோயாளி சேவைப் பிரி­வில் 63 வயது திரு­மதி ம. அன்­பழகி மூன்று ஆண்­டு­க­ளாக பணி­யாற்றி வரு­கிறார். மருத்­து­வப் படுக்­கைப் பிரிவு­களில் தங்­கி­யி­ருக்­கும் நோயா­ளி­களைப் பார்ப்­ப­தற்­காக வரும் குடும்ப உறுப்­பி­னர்­கள், நண்­பர்­கள் போன்­றோ­ரி­ட­மி­ருந்து விவ­ரத்­தைக் கேட்டு அறிந்­து­கொள்­வது, அவர்­களின் கேள்­வி­க­ளுக்­குப் பதி­ல­ளிப்­பது போன்ற பொறுப்­பு­கள் திரு­மதி அன்­ப­ழ­கிக்கு உண்டு. ஒரே நாளில் கிட்­டத்­தட்ட 50 பேரைச் சந்­திக்க நேரி­ட­லாம் என்ற நிலை­யில் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வதே சிறந்த முடிவு என்­றார் அவர். மேலும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வ­தைச் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை பணி­யாளர்­க­ளி­டையே அர­சாங்­கம் பெரி­தும் வலி­யு­றுத்தி வரு­கிறது.

தம்­மு­டைய இரு இளம் பேரன்­களு­டன் அடிக்­கடி நேரத்­தைச் செல­வ­ழிப்­ப­தால் அனை­வ­ருக்­கும் பாது­காப்பு அளிக்­க­வல்­லது தடுப்­பூசி என்­பது திரு­மதி அன்­ப­ழ­கி­யின் நம்­பிக்கை.

"என் பேரன்­கள் இரு­வ­ருக்­கும் 5 மற்­றும் 7 வய­து­தான். இந்த வய­துப் பிரி­வி­ன­ருக்கு அர­சாங்­கம் இன்­னும் கொவிட்-19க்கு எதி­ரான தடுப்­பூ­சியை அங்­கீ­க­ரிக்­க­வில்லை. இந்­நி­லை­யில், எளி­தில் பாதிப்­ப­டை­யும் நிலை­யில் அவர்­கள் இருக்­கிறார்­கள். நானும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­மல் இருந்­தால் என் பேரப்­பிள்­ளை­க­ளின் பாது­காப்­புக்கு உத்­த­ர­வா­தம் இல்­லா­மல் போய்­விடும்," என்­றார் அவர்.

பூஸ்­டர் தடுப்­பூ­சித் திட்­டம் தொடங்­கப்­பட்­ட­தை அடுத்து திருமதி அன்­பழகி தம்­மு­டைய 65 வயது கண­வ­ரு­டன் சென்று தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­டார்.

"பூஸ்­டர் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­ட­போது முதல் இரண்டு தடுப்­பூ­சி­க­ளைக் காட்­டி­லும் வலி சற்று கூடு­த­லாக இருந்­தது. மிதமான காய்ச்­ச­லும் வந்­தது. ஆனால் பின்­னா­ளில் பெரும் பாதிப்பு ஏற்­ப­டு­வதை இந்த தடுப்­பூசி தடுக்­கும் என்ற எண்­ணம் எனக்கு ஆறு­தல் அளிக்­கிறது," என்­றார் திரு­மதி அன்­ப­ழகி.

கூடு­தல் செய்தி: சி.சுபா­ஷினி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!