பெருகும் இறையுணர்வு

ஸ்ரீ மாரி­யம்­மன் கோயி­லில் தனி­யா­கக் குடி­கொண்டு இருக்­கும் பெரி­யாச்சி சன்­னி­தி­யில் அர­வா­னின் களப்­பலி நிகழ்வு பெரிய அள­வில் நடை­பெ­றும். சூரிய சந்­தி­ரரை எதி­ரெ­திரே சந்­திக்க வைத்து, கிருஷ்­ணர் ஏற்­ப­டுத்­திய அமா­வாசை திதி­யன்று அர்ச்­சு­ன­னின் மகன் அர­வா­னைப் பலி தரும் நிகழ்­வைக் குறிக்­கும் சடங்கு இது.

தொண்­டூ­ழி­யர்­கள் பி. வீர­மணி, 51, திரௌ­ப­தை­யா­க­வும் பவன் பிர­காஷ், 34, கிருஷ்­ண­ரா­க­வும் வேட­மி­டு­கின்­ற­னர். இதற்­காக 48 நாள் விர­த­மி­ருக்க வேண்­டி­யி­ருந்­த­தாக இரு­வ­ரும் தெரி­வித்­த­னர்.

எட்டு ஆண்­டு­க­ளா­கத் தீமி­தித் திரு­வி­ழா­வில் திரௌ­ப­தை­யாக நடிக்­கும் திரு வீர­மணி, இது நடிப்பு என்­ப­தை­யும் தாண்டி இறை­சக்தி தம்மை நிரப்­பும் அனு­ப­வம் எனப் பகிர்ந்­தார். கிருஷ்­ண­ராக நடிக்­கும் திரு பவன், தாம் இதற்­குத் தேர்வு செய்­யப்­பட்­டது குறித்து மகிழ்ச்சி அடைந்­தா­லும், வச­னங்­க­ளைச் சரி­யா­கச் சொல்லி, கதா­பாத்­தி­ரத்­தின் மேன்­மை­யைக் கட்­டிக்­காக்­க­வேண்­டும் என்­ப­தில் உறு­தி­யு­டன் இருந்­த­தா­கக் கூறி­னார்.

அபி­மன்யூ வத­மும் படு­க­ள­மும்

தீமி­திக்கு முதல் நாள் அன்று காலை­யில் அபி­மன்யு வதம் நடை­பெ­றும். சக்­கர வியூ­கத்­துக்­குள் சிக்கி உயி­ரி­ழக்­கும் அபி­மன்­யு­வின் கதை நாட­க­மாக நடிக்­கப்­படும். அர்­ஜு­ன­ராக நடிப்­ப­வரே அபி­மன்­யூ­வா­க­வும் நடிப்­பார்.

அதற்கு அடுத்து, தீமிதி நாளன்று இடம்­பெ­றும் முக்­கிய நிகழ்வு படு களம். அதி­காலை நான்கு மணி முதல் இந்­தச் சடங்­கிற்­கான பணி­கள் தயா­ராகி விடும். அபி­மன்யூ, துரோ­ணர், கர்­ணன், துரி­யோ­த­னன், துச்­சா­த­னன் ஆகி­யோ­ரைக் குறிக்­கும் மண் உரு­வங்­கள் அமைக்­கப்­பட்டு, அவர்­களை வதம் செய்­யும் நிகழ்வு நடை­பெ­றும். இவர்­களில் முதல் மூவ­ருக்­குச் சொர்க்­கம், மற்ற இரு­வ­ருக்­கும் நர­கம் என்­பாள் பாஞ்­சாலி. துரி­யோ­த­ன­னின் தொடை பிளக்­கப்­பட்டு, ரத்­தத்தை தடவி கூந்­தலை அள்ளி முடிப்­பார் திரௌ­பதை. அப்­போது ஆல­யத்­தி­லுள்ள நான்கு திரௌ­பதை சிலை­க­ளுக்­கும் வண்ண உடை­களும் நகை­களும் அணி­விக்­கப்­பட்டு, அலங்­கா­ரத்­து­டன் காட்சி தரு­வர்.

இந்த நாட­கங்­களில் கதை­மாந்­தர்­க­ளின் வச­னம் காலங்­கா­ல­மாக அப்­ப­டியே உள்­ளன. எனி­னும் வேட­மேற்­போ­ருக்கு உரிய பயிற்சி தந்து வழி­ந­டத்­தும் பொறுப்பு, கோயி­லின் மூத்த தொண்­டூ­ழி­யர் வீ. பழ­னிச்­சா­மி­யைச் சேர்ந்­த­தா­கும்.

“18 ஆண்­டு­க­ளாக மகா­பா­ர­தக் கதை விளக்­கத்­தைச் சடங்­கு­க­ளின்­போது கூறும் நான், நடி­கர்­க­ளுக்­குப் பக்­க­ப­ல­மா­க­வும் இருக்­கி­றேன். வச­னங்­களை அவர்­கள் மறந்­தால் அவற்றை நினை­வு­ப­டுத்­து­வேன்,” என்­றார் திரு பழ­னிச்­சாமி.

பூக்­குழி அமைத்­தல்

எட்டு அடி அக­ல­மும் 18 அடி நீள­மும் கொண்­டுள்ள பூக்­குழி, கோயில் வளா­கத்­திற்­குள்­ளேயே அமைக்­கப் படும். இதில் தணல் ஏற்­ப­டுத்த சந்­த­னக் கட்­டை­கள் எரிக்­கப்­படும். பூக்­குழி மூட்­டும் பணி­யில் இவ்­வாண்டு 45 தொண்­டூ­ழி­யர்­கள் ஈடு­ப­டு­வர். இவ்­வாண்டு 20,000 மரக்­கட்­டை­கள் மலே­சி­யா­வி­லி­ருந்து தரு­விக்­கப்­பட்­டுள்­ளன. இதில் 15,000 மரக்­கட்­டை­கள் பயன்­ப­டுத்­தப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. கட்­டை­கள் எரிந்து தண­லாக 6 முதல் 8 மணி நேரம் வரை ஆகும்.

பூக்­கு­ழிக்­குப் பக்­கத்­தில் பால் ஊற்­று­வ­தற்­கான சிறு குழி ஒன்­றும் அமைக்­கப்­படும். கடந்த ஆண்டு 60 பேர் மட்­டும் பூக்­குழி இறங்­கி­னர். இவ்­வாண்டு 950 பேர் பூக்­குழி இறங்க பதிவு செய்­துள்­ள­னர்.

வெள்ளி ரத ஊர்­வ­லம்

விழா­வின் மற்­றொரு முக்­கிய நிகழ்­வான ஸ்ரீ மாரி­யம்­ம­னின் வெள்ளி ரதப் புறப்­பாடு இவ்­வாண்டு இடம்­பெ­றும். கொவிட்-19 கார­ண­மாக ரதம் நிற்­கும் இடங்­கள் பெரி­தும் குறைக்­கப்­பட்­டுள்­ளன.

கிரு­மிப் பர­வ­லுக்கு முந்­திய கால­கட்­டத்­தில் ஒரு நாளுக்கு ஐந்து இடங்­கள் வரை­யி­லும் நிற்­கும் மாரி­யம்­ம­னின் தேர், இப்­போது நாளுக்கு ஒரே ஒரு இடத்­தில்­தான் நிற்­கும்.

தீமிதி அன்று, ஸ்ரீ ஸ்ரீநி­வா­சப் பெரு­மாள் ஆல­யத்­தி­லி­ருந்து பாத ஊர்­வ­ல­மா­கப் புறப்­படும் பக்­தர்­கள், ஐந்து கிலோ­மீட்­டர் நடந்து ஸ்ரீ மாரி­யம்­மன் ஆல­யத்தை அடைய வேண்­டும். கொவிட்-19 பர­வல் சூழ­லால் கடந்த ஆண்டு ஆல­யத்­தின் தொண்­டூ­ழி­யர்­க­ளுக்­குள்ளே விழா நடத்­தப்­பட்­டது. இந்த முறை ஆல­யத்­திற்கு அரு­கி­லுள்ள பகோடா ஸ்தி­ரீட்­டில் பக்­தர்­கள் பதிவு செய்து 20 மீட்­டர் தொலைவு நடப்­பார்­கள்.

பக்­தர்­க­ளின் இறை­யு­ணர்வு

பதி­னாறு ஆண்­டு­க­ளாக தீமி­தி­யில் கலந்­து­கொண்டு வரும் திரு சி. காளி­தா­சன், 37, “கட்­டுப்­பாடு களால் நானும் என் சகோ­த­ரர்­களும் நண்­பர்­களும் ஒரே நேரத்­தில் பூக்­குழி இவ்­வாண்டு பதி­வு­செய்ய இய­ல­வில்லை. ஆனா­லும், வேண்­டு­தல் இன்றி இத­னைச் செய்­யும் எனக்கு இந்த வாய்ப்ப்பு கிடைத்­ததை நினைத்து மகிழ்­கி­றேன்,” என்­றார்.

பதின்­மூன்று ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு மீண்­டும் தீமி­தி­யில் கலந்­து­கொள்­ளும் திரு திலீப் குமார், 35, கிரு­மிப்­ப­ர­வ­லால் தமது சுற்­று­லாத்­துறை வேலை­யும் சுய­தொ­ழி­லும் பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கக் கூறி­னார்.

“தற்­போ­தைய நிலை மேலும் தொடர்ந்­தால் பெரிய இன்­னல்­கள் ஏற்­ப­ட­லாம். என் வேண்­டு­த­லுக்கு அம்­மன் செவி­ம­டுப்­பாள் என நம்­பு­கி­றேன்,” என்­றார் திரு திலீப்.

இவ்­வாண்டு அங்­க­பி­ர­தட்­ச­ணம் செய்த தனி­யார் வாகன ஓட்­டு­நர் விக்­னேஷ் மணி­மா­றன், 31, இம்­முறை கூட்ட நெரி­சல் இல்­லா­த­தால் தம் சகோ­த­ரர்­க­ளு­டன் சேர்ந்து மன­நி­றை­வு­டன் வேண்­டு­தலை நிறை­வேற்­றி­ய­தா­கக் கூறி­னார்.

1970களில் தமது 50வது வய­தில் நோய்­வாய்ப்­பட்ட மனை­விக்­காக பூக்­குழி இறங்­கத் தொடங்­கிய திரு ராமச்­சந்­தி­ரன், 92, தற்­போது ஸ்ரீ நாரா­யண மிஷன் முதி­யோர் பரா­ம­ரிப்பு இல்­லத்­தில் வசிக்­கி­றார். ஆயி­னும், தாம் இன்­ன­மும் தம் மகன்­ க­ளு­டன் பூக்­குழி இறங்க விரும்­பு­வ­தாக அவர் சொன்­னார்.

“முதல் முறை பூக்­குழி இறங்­கி­ய­போது பயந்­து­போன நான், இனி அதைச் செய்­யக்­கூ­டாது என முடி­வெ­டுத்­தேன். அப்­போது எனக்கு ஏற்­பட்ட கனவு ஒன்று என் மனத்தை மாற்­றி­யது. அன்று முதல் 30 ஆண்டு ­க­ளா­கப் பூக்­குழி இறங்­கி­னேன்,” என்று அவர் நினை­வு­கூர்ந்­தார்.

அய­ராது அருந்­தொண்டு

இவ்­விழா சிறப்­பாக நடை­பெற 150 பேர் இரவு பக­லாக உழைக்­கின்­ற­னர். கடைசி நாள்­களில் சிலர் கோயி­லி­லேயே தங்­கி­வி­டு­வது என்­பது வழக்­க­மாக இருந்­தா­லும் இவ்­வாண்டு கிரு­மிப் பர­வல் கார­ண­மாக யாரும் ஆல­யத்­திற்­குள் தங்­க­வில்லை. கிரு­மிப்­ப­ர­வ­லுக்கு முந்­திய கால­கட்­டத்­தில் 500 தொண்­டூ­ழி­யர்­கள் ஒன்­றி­ணை­வர். ஆடி மாதத் திங்­கட்­கி­ழ­மை­யன்று தொடங்­கும் தீமி­தித் திரு­விழா தொடர்­பான சடங்­கு­கள், ஐப்­பசி மாதத் திங்­கட்­கி­ழ­மை­யன்று நிறை­வு­றும். இவ்­வாண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி கொடி­யேற்­றத்­து­டன் தொடங்­கிய விழா, அக்­டோ­பர் 27ஆம் தேதி­யன்று மகா­பா­ர­தத்­தின் இறுதி அத்­தி­யா­யம் படிக்­கப்­பட்டு, மறுநாள் மஞ்­சள் நீராட்டு சடங்­கு­டன் ஆஞ்­ச­நே­யர் கொடி இறக்­கத்­து­டன் நிறை­வு­பெ­றும்.

“ஐந்­தாண்­டு­க­ளாக தொடர்ந்து நான் பூக்­குழி இறங்­கு­கி­றேன். முத­லில் என் அப்பா இறங்­கி­னார். இப்­போது நான். என் மக­னும் இறங்­கு­வான் என்று நினைக்­கி­றேன். வேண்­டு­தல் இருந்­தா­லும் இல்­லா­விட்­டா­லும், இது நம் சிங்­கப்­பூர் மக்­க­ளுக்கு முக்­கி­ய­மான சடங்கு. நமது பாரம்­ப­ரி­யம். நாம்­தான் இதைக் கட்­டிக்­காக்க வேண்­டும்,” என்று கூறிய திரு இலங்­கேஸ்­வ­ரன், 32, இந்த ஆண்டு தீமி­திக்க வாய்ப்பு கிடைத்­ததை அந்த மாரி­யம்­ம­னின் அரு­ளா­கவே நினைக்­கி­றார்.

கொவிட்-19 கட்டுப்பாடுகளால் முன்னதாக பதிவுசெய்யாமல் நேரில் வரும் பக்தர்கள், பார்வையாளர்கள் அல்லது ஆதரவாளர்களுக்கு கோயிலுக்குள் அனுமதி இல்லை.

எனினும் தீமிதித் திருவிழா நிகழ்வுகளை இந்து அறக்கட்டளை வாரியத்தின் யூடியூப் அல்லது ஃபேஸ்புக் தளத்தில் காணலாம்:

https://www.youtube.com/hindu endowmentsboard

https://www.facebook.com/hindu endowmentsboard

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!