பயிற்றுவிப்பாளரைத் தாக்கிய பக்கவாதம்

ப. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

பல்­க­லைக்­க­ழக ஓட்­டப்­பந்­தய வீரர்­க­ளுக்கு பயிற்சி அளித்­து­விட்டு, 55 வயது திரு சி.பாண்­டி­யன் உண­வங்­காடி நிலையத்தில் சக பயிற்றுவிப்­பா­ள­ரான நண்­பர் திரு ச.மாற­னு­டன் உணவு அருந்திக்­கொண்­டி­ருந்­தார். அப்­போது திரு பாண்­டி­ய­னுக்­குத் திடீ­ரென்று விக்­கல் வந்­தது.

பிறகு, உட­லின் வலது பக்­கம் பல­வீன மாகிப்போனது போன்ற உணர்வு. பேச­வும் சிர­மப்­பட்­டார்.

உயிர்க்­காப்பு பயிற்­சி­க­ளுக்­குச் சென்­றி­ருக்­கும் மாறன், திரு பாண்­டி­யனுக்கு பக்­க­வா­தம் தாக்­கி­யி­ருப்பதை உணர்ந்­தார்.

யோசிப்­ப­தற்கு நேரம் இல்லை.

தமது வாக­னம்­வரை திரு பாண்­டி­ய­னைச் சுமந்துசென்று, சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­ம­னைக்கு அவரை விரைந்து அழைத்­துச் சென்­றார் திரு மாறன்.

அங்கு செல்­லும்வரை, திரு பாண்­டி­யன் சுய­நி­னைவை இழந்­து­வி­டா­மல் இருக்க, அவ­ரி­டம் உரை­யா­டிக்­கொண்டே வாகனத்தை ஓட்­டி­னார் மாறன்.

"காலம் கடந்து திரு பாண்­டி­யன் அனு மதிக்­கப்­பட்­டி­ருந்­தால், உடல் முட­மா­கிப் போகும் நிலைக்கு இவர் ஆளா­யி­ருக்­கக்­கூ­டும் என்று மருத்­து­வர் தெரி­வித்­தார்.

"பக்­க­வாத அறி­கு­றியை கண்­ட­தும் உட­ன­டி­யாக மருத்­துவ உத­வியை நாட வேண்­டும் என்­பதை இது நினை­வு­ப­டுத்­து­கிறது," என்று கடந்­தாண்டு அக்­டோ­பர் மாதம் நடந்த இச்­சம்­ப­வத்தை நினை­வு­கூர்ந்­தார் திரு மாறன், 53.

திரு பாண்­டி­ய­னின் உட­லின் வல­து பக்கம் பக்­க­வா­தத்­தால் பாதிக்­கப்­பட்­ட­தால், தலை முதல் கால்வரை அவ­ரது அசைவு கள் பாதிக்­கப்­பட்­டன.

முதல் ஒன்­பது நாட்­க­ளுக்கு, திரு பாண்­டி­ய­னின் உடல்­ந­லம் அணுக்­க­மா­கக் கண்­கா­ணிக்­கப்­பட்­டது. அதன்பிறகு ஊட்­ரம் சமூக மருத்­துவமனைக்கு மாற்­றப்­பட்டு ஆறு வாரங்­கள் சிகிச்­சை பெற்­றார்.

குண­ம­டைய நீண்ட பய­ணம்

தமக்கு என்ன நடக்­கிறது என்ற குழப்­ப­மும் விரக்­தி­யும் வந்­த­போது, உள­வி­யல் நிபு­ண­ரான திரு பாண்­டி­ய­னின் மூத்த மகள் பிரிதிஸ்­வரி, 25, அவ­ருக்­குப் பக்க ­ப­ல­மாக இருந்­தார்.

பேச்­சுப் பயிற்சி, தின­சரி நட­வ­டிக்­கைளை மேற்­கொள்­வ­தற்­கான தொழில் சிகிச்சை (occupational therapy), உடற் பயிற்சி ஆகி­ய­வற்றை மேற்­கொண்­டு­வர அவ­ரது உடல்­ந­ல­னில் சற்று முன்­னேற்­றம் தெரிந்­தது.

விளை­யாட்­டுப் பயிற்­று­விப்­பா­ள­ருக்கு எப்­படி பக்­க­வா­தம் வந்­தி­ருக்­கும் என்று சுற்­றி­யி­ருந்­த­வர்­கள் எண்­ணி­னர். திரு பாண்­டி­ய­னின் வாழ்க்­கை­மு­றை­தான் இதற்­குக் கார­ணம்.

கைபே­சி­யில் திரைப்­ப­டம் பார்த்­த­வாறு நீண்ட நேரம் முடங்கி இருப்­பது, அதி­காலை 2 மணிக்கு தூங்கி போதிய உறக்­கம் இல்­லா­மல் போவது, இர­வில் அடிக்­கடி உண­வங்­கா­டிக் கடை­யில் ஆரோக்­கி­ய­மற்ற 'சப்­பர்' உண­வுக்­குப் போவது, நேரத்­து­டன் சாப்­பி­டா­தது, அள­வுக்கு மீறி சாப்­பி­டு­வது என்று நல­மற்ற வாழ்க்­கை­மு­றையை இவர் கடைப்­பி­டித்து வந்­தார்.

மன உறு­தி­யு­டன் மீண்­டு­வந்தார்

மருத்­து­வ­ம­னை­யி­லி­ருந்து திரு பாண்­டி­யன் வீடு திரும்­பி­ய­தும், ஊன்­று­கோல் உத­வி­யு­டன் மெல்ல மெல்ல நடந்­தார்.

எழுந்து நிலை­யாக நிற்­பதே இவ­ருக்கு பெரும் சவால். ஆனால் இது­தான் கதி என்று அவர் சோர்ந்துவிடவில்லை.

அசை­வதே சவா­லாக இருந்­த­போது தின­மும் காலை­யில் ஒரு மணி நேர­மா­வது தம் வீட­மைப்­புப் பேட்டை அருகே அவர் நடக்­கச் சென்­று­வி­டு­வார். சுமார் 250 மீட்­டர் தூரத்தை கடக்க, இவ­ருக்கு 20 நிமி­டங்­கள் பிடிக்­கும்.கால் முட்­டிப் பகுதி வீக்­கம் அடை­யும்­போ­தெல்­லாம் ஒத்­த­டம் கொடுத்து வீக்­கத்தை போக்­கி­டு­வார்.

இவ்­வாண்டு தொடக்­கத்­தி­லி­ருந்து கிட்டத்­தட்ட 7 மாதங்­க­ளாக 'S3' எனும் பக்­க­வாத ஆத­ரவு நிலை­யம், இவ­ருக்கு அதிநவீன 'டிரெட்­மில்' உடற்­ப­யிற்­சியை வழங்கி கால் தசை­கள் மேம்­பட வழி­வகுத்­தது.

வீட்­டில் குண­ம­டைந்து வந்த திரு பாண்­டி­ய­னுக்கு, தாய் ஹுவா குவான் அறக்­கட்­டளை அமைப்பு மூன்று வேளை உண­வை­யும் அனுப்பி வைத்­தது. மருத்­து­வப் பரி­சோ­த­னை­க­ளுக்கு இவரை மருத்­துவ வாக­னத்­தில் அழைத்­துச் செல்­ல­வும் அமைப்பு உத­வி­யது.

வாரத்­தில் மூன்று முறை, இரண்டு மணி நேர உடல் ஆற்­றல் செயல்­பாட்­டுப் (psychomotor) பயிற்­சிக்கு திரு பாண்­டி­யனை உட்­ப­டுத்­தி­னார் அவரது அன்­பான நண்­பர் திரு மாறன்.

தம்­மைச் சுற்­றி­யி­ருக்­கும் பயிற்­று­விப்­பா­ளர்­கள், இரண்­டா­வது மகள் 24 வயது ஹ‌ர்ஷினி உட்­பட குடும்­பம், நண்­பர் வட்­டத்­தின் ஆத­ர­வு­டன், திரு பாண்­டி­ய­னின் உடல்­ந­லம் துரி­த­மாக மேம்­பட்­டது.

உடல்­நி­லை­யில் சிறப்­பான முன்­னேற்றம்

கடந்த ஜூலை மாதம் முதல் திரு பாண்­டி­யன் ஊன்­று­கோல் இன்றி நடக்­கி­றார்.

நான்கு நிமி­டங்­களில் 250 மீட்­டர் தூரத்தை கடந்து வரும் நிலைக்கு அவர் முன்­னே­றி­யுள்­ளார்.

"உள்­ளூ­ரில் 800 மீட்­டர் தூர ஓட்­டப் பந்­த­யத்தை சாதனை நேரத்­தில் வென்­ற­வன் நீ, உன்­னால் இதைக் கடந்து வர முடி­யும் என்று நம்­பிக்கை அளித்தேன், ஒரு மாதத்­தில் நடக்­கத் தொடங்­கி­வி­டு­வாய் என்­றேன். எனி­னும் அவர் முன்­னேற்­றத்­துக்கு அவ­ரது மனத்­தி­டமே முக்­கிய கார­ணம்," என்று விளக்­கி­னார் திரு மாறன்.

"பக்­க­வா­தம் ஏற்­பட்­ட­வர்­கள் பலர் சமுதாயத்தை எவ்­வாறு எதிர்­கொள்­ளப்­போகி­றோம் என அஞ்சி வீட்­டில் முடங்கி இருக்கின்­ற­னர். இதி­லி­ருந்து மீண்டு வருவோம் என்­ப­தைச் சவா­லாக எடுத்­துக் ­கொள்ள வேண்­டும். உடல்­ந­லத்­தின் முன்­னேற்­றத்­துக்­கான ஒவ்­வொரு இலக்கை அடை­யும்­போது அடுத்த இலக்­கைப் பற்றி யோசித்து அதனை நோக்கி செயல்­பட வேண்­டும்," என்று கூறி­னார் ஓராண்­டு­கா­லக் கடின உழைப்­பில் துரித முன்­னேற்­றத்தை அடைந்த திரு பாண்­டி­யன்.

இவ்­வாண்டு முதற்­பா­தி­யில் வேலைக்குத் திரும்­பிய திரு பாண்­டி­யன், இன்று நேரத்­து­டன் தூங்­கு­கி­றார். ஆரோக்­கிய உணவை நேரத்­து­டன் சாப்­பி­டு­கி­றார். தின­மும் நான்கு மணி நேரம் உட­ல­சை­வு­களை மேம்­ப­டுத்­தும் பயிற்­சி­க­ளுக்காக ஒதுக்­கு­கி­றார்.

வீட்டு வேலை­களை இயல்­பாக அவர் செய்ய முடி­வது அவர் உடல்­நி­லை தேரி­ வ­ருவதைக் குறிக்­கிறது.

மீண்­டும் ஓடவேண்டும் என்ற அடுத்­த­ இலக்­கை நோக்கி நம்­பிக்­கை­யு­டன் முயன்று வருகிறார் செயல் வீரர் பாண்டியன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!