பக்கவாதத்தால் இந்தியர் களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறதா?
இன ரீதியாகப் பார்க்கும்போது, பக்கவாதம் இந்தியர்களை அதிகம் தாக்கக்கூடிய நோய் என்று சொல்ல முடியாது.
எனினும் சீனர்களுடன் ஒப்பிடுகையில், வயதில் குறைந்த இந்தியர்களைப் பக்கவாதம் அதிகம் தாக்குகிறது.
பக்கவாதம் ஏற்பட்ட சீனர் களைக் காட்டிலும், இந்திய நோயாளிகளில் 60 வயதிற்கும் குறைவானவர்கள் அதிகம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
குறுகியநேர பக்கவாதம்
மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குப் போதிய ரத்த ஓட்டம் கிடைக்காதபோது, (Transient Ischemic Attacks) எனும் குறுகிய நேர பக்கவாதம் (mini-strokes) ஏற்படுகிறது.
ஆனால் சில நிமிடங்களுக்குள் ரத்த ஓட்டம் மூளையின் பகுதிக்கு சீராக சென்றுவிடுவதால், எந்த நிரந்தரப் பாதிப்பும் இல்லாமல் பக்கவாத அறிகுறிகளிலிருந்து ஒருவர் மீண்டு வந்துவிடுகிறார்.
ஆனால் குறுகியநேர பக்கவாத தாக்குதலிலிருந்து மீண்டு வந்தவருக்கு பக்கவாதம் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. ஆக அதிக அபாயநிலையில் உள்ளவர் களுக்கு முதல் வாரத்தில் பக்கவாதம் ஏற்பட 12% வரையில் வாய்ப்பு உள்ளது.
இதனால் குறுகியநேர பக்கவாதத்தை அவசரநிலையாகக் கருத வேண்டும். அதன் அறிகுறிகளிலிருந்து மீண்டு வந்தாலும், அவசர மருத்துவ வாகனத்தின் சேவையை நாட வேண்டும்.
இவ்வாறு செய்தால், பக்கவாதம் வந்ததன் காரணத்தை கண்டறிந்து, மருந்துகள் பரிந்துரைக்கப்படும்.
அடுத்தமுறை பக்கவாதம் வரும் சாத்தியத்தை அது குறைக்கலாம்.
குறுகியநேர பக்கவாதத்தின் அறிகுறிகள்
ஒருபுறம் முகம் கோணலாகப் போவது, கை பலவீனமாவது, பேசுவதில் சிரமம் ஏற்படுவது ஆகியவை ஏற்பட்டால் உடனடியாக 995 எண்ணுக்கு அழைக்கவும்.
வீட்டிலிருந்து வேலை செய்வோரின் கவனத்துக்கு
அதிக உடல் அசைவுகள் இல்லாத வாழ்க்கைமுறை பக்கவாதத்திற்கு இட்டுச் செல்லலாம்.
இதைத் தடுக்க ஒரு வாரத்தில் குறைந்தது இரண்டரை மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
வீட்டிலிருந்து வேலை செய்தால், வேலைக்குச் செல்லும் நேரத்தை உடற்பயிற்சிக்கு பயன்படுத்தவும்.
மெய்நிகர் தளங்களின் உதவியுடன் உடற்பயிற்சியில் ஈடுபடலாம். அல்லது வீட்டுக்கு அருகில் இருக்கும் பூங்காவிற்கு செல்லவும்.
பக்கவாத நோயாளிகளைப்
பராமரிப்போருக்கு உதவி
• https://www.healthhub.sg/programmes/130/strokehub
• Stroke Buddy செயலி
ஆலோசனை தரும்
ஆதரவுக் குழுக்கள்
• சிங்கப்பூர் தேசிய பக்கவாதச் சங்கம் (Singapore National Stroke Association)
• பக்கவாத ஆதரவு நிலையம் (Stroke Support Station - S3)

