ஒட்டகச்சிவிங்கிகளின் சீரான பயணத்தை உறுதிசெய்த விலங்கியல் தோட்ட அதிகாரி

ஒட்டகச்சிவிங்கிகளின் சீரான பயணத்தை உறுதிசெய்த விலங்கியல் தோட்ட அதிகாரி

2 mins read
1232903b-ad7e-4e26-a571-cdeee90d19db
விலங்குகளை வேறு நாட்டிலிருந்து கொண்டுவரும்போது வழக்கமாக காப்பாளர்கள் உடன் செல்வதில்லை. ஆனால் அடில் பாலாஜியைக் கொண்டு வருவதில் நிறைய சிக்கல்கள் இருந்ததால் தாமும் மற்றொரு காப்பாளரும் அவை கூடவே வந்ததாக திரு பரமசிவம் ராமசாமி கூறினார். படம்: மண்டாய் வைல்ட்லைஃப் குரூப் -

மைசூர் விலங்­கி­யல் தோட்­டத்­தி­லி­ருந்து மண்­டா­யில் உள்ள சிங்­கப்­பூர் விலங்­கி­யல் தோட்­டத்­துக்கு இவ்­வாண்டு இரண்டு ஒட்­ட­கச்­சி­விங்­கி­க­ளைக் கொண்­டு­வருவதில் முக்­கி­ய பங்­காற்­றி­ய­வர் மாண்­டாய் வன­வி­லங்­குக் குழு­மத்­தில் தாவ­ர­வ­கை­களை உண்டு வாழும் விலங்­கு­க­ளுக்­கான காப்பா­ள­ரா­கப் பணி­யாற்­றும் திரு பர­ம­சி­வம் ராம­சாமி.

பாலாஜி, அடில் இரண்­டு­ட­னும் பிணைப்பை ஏற்படுத்­திக்கொண்டு அவற்­று­டன் பய­ணிக்க திரு பர­ம­சி­வம் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டார். அவ­ரு­டன் சக பணி­யா­ள­ரான ஜமா­லு­தீன் வாஹிட்­டும் தேர்­வா­னார்.

கடந்த 28 ஆண்­டு­க­ளாக பல்­வேறு கால்­ந­டை­க­ளு­டன் பணி­யாற்­றிய அனு­ப­வம் கொண்ட பர­ம­சி­வம், ஒட்­ட­கச்­சி­வங்­கி­கள் ஒரு வய­தாக இருக்­கும்­போது அவற்றை முதன்­மு­த­லில் சந்­தித்­தார். அத­னால் ஒட்­ட­கச்­சி­விங்­கி­கள் இவ­ரி­டம் எளி­தில் ஒட்­டிக்­கொண்­டன.

காப்­பா­ளர்­கள் ஐந்து மாதத்­தில் உண­வ­ளித்து, பரா­ம­ரித்து, அவற்­றின் நம்­பிக்­கை­யைப் பெற்­ற­னர்.

அத்­து­டன் சிங்­கப்­பூ­ருக்­கான பய­ணத்­தில் விலங்­கு­க­ளுக்­குச் சிர­மத்­தைக் குறைக்க பெரு­மு­யற்சி எடுக்­கப்­பட்­டது. ஒட்­ட­கச்­சி­விங்­கி­க­ளின் உய­ரத்­துக்கு ஏற்ப மடிக்கக்­கூ­டிய மரக்­கூண்­டு­கள் அமைக்­கப்­பட்­டன. அவற்­றில் அமை­தி­யு­டன் இருப்­ப­தற்கு விலங்கு­க­ளுக்­குப் பயிற்சி அளிக்­கப்­பட்­டது.

மைசூ­ரி­லி­ருந்து ஆந்­தி­ரப் பிர­தே­சத்­துக்கு கிட்­டத்­தட்ட ஒருநாள் சாலைப் பய­ணம், பின்­னர் ஏழு நாள் கப்­பல்­ ப­ய­ணம்.

திரு பர­ம­சி­வ­மும் திரு ஜமா­லு­தீ­னும் விலங்­கு­கள், அமை­தி­யா­க­வும் உடல்­ந­லத்­து­ட­னும் இருப்­பதை உறு­தி­செய்­து­கொண்டே வந்­த­னர்.

மூன்று மாதத் தனி­மை­யின்­போது அடில், பாலாஜி விடப்­பட்ட புதிய சூழல், பரா­ம­ரிப்­பா­ளர்­கள், உண­வு­வ­கை­க­ளுக்­குப் பழ­கிக் கொண்­டன. தற்­போது ஒட்­ட­கச்­சி­விங்­க­ளுக்­கான பகு­தி­யில் அவை நல­மாக இருப்­ப­தா­கக் கூறி­னார் திரு பர­ம­சி­வம்.

"ஒட்­ட­கச்­சி­விங்­கி­க­ளுக்­குப் போதிய உணவு, நட­மாட வச­தி­யான இடம், செறி­வு­பெற வாய்ப்­பு­கள் ஆகி­யவை கிடைப்­பதை உறுதி செய்­து­வ­ரு­கி­றோம்," என்றார் அவர்.