குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு தீபா­வளி உற்­சா­கம்

குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு தீபா­வளி உற்­சா­கம்

1 mins read
3f21c85f-0edd-4f32-9bdb-314a925a1daf
குடியிருப்பாளரான திருவாட்டி பாக்கியம், கோவில் தலைவர் திரு சுரேஷ் குமார் (வலமிருந்து 2வது), கோயில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஆகியோரிடமிருந்து தீபாவளி அன்பளிப்புப் பையைப் பெறுகிறார். படம்: ஸ்ரீ சிவ கிருஷ்ணா கோவில் -

தீபா­வ­ளியை முன்­னிட்டு மார்­சி­லிங் ரைசில் உள்ள ஸ்ரீ சிவ கிருஷ்ணா கோவி­லின் நிர்­வா­கக் குழு உறுப் பினர்­களும் தொண்­டூ­ழி­யர்­களும் இணைந்து மார்­சி­லிங், உட்­லண்ட்ஸ் வட்­டா­ரத்­தில் உள்ள குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு இம்­மா­தம் 23ஆம் தேதி அன்­ப­ளிப்­புப் பைகளை வழங்­கி­னார்­கள்.

ஓரறை, ஈரறை வீடு­களில் வசிக்­கும் சுமார் 30 பேருக்கு அன்­ப­ளிப்புப் பைகள் அளிக்­கப்­பட்­டன.

நூறு வெள்ளி மதிப்­பி­லான பல­கா­ரங்­களும் (முறுக்கு, லட்டு), தீபா­வளி அலங்­கா­ரப் பொருட்களும் அன்­ப­ளிப்­புப் பைகளில் வைக்­கப்­பட்­டி­ருந்­தன. அன்­ப­ளிப்­புப் பைக­ளைப் பெற்­றுக்­கொண்ட குடி­யிருப்­பா­ளர்­கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அன்­ப­ளிப்­புப் பைகளை மாதம்­தோ­றும் வழங்­கத் திட்­ட­மி­டு­வ­தாகக் கோயில் நிர்­வா­கம் தெரி வித்தது.