முஸ்லிம் லீக் (சிங்கப்பூர்) சமூக நல்லிணக்க சேவை அமைப்பின் மகளிர் பிரிவான வளர்பிறை மகளிர் வட்டத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 14) காலை 11 மணிக்கு ஸூம் தளத்தில் நடைபெறவுள்ளது.
'குன்றென நிமிர்ந்து நில்' என்னும் கருப்பொருளை மையமாகக் 'கொண்டு இந்நிகழ்வு நடக்கிறது.
வளர்பிறை மகளிர் வட்டத்தின் தலைவி திருமதி மஹ்ஜபீன், 'கல்வி கண் திறக்கட்டும்' என்ற தலைப்பிலும், துணைத் தலைவி திருமதி மிஸ்காத் பேகம், 'குடும்பத்தை குதூகலமாக்குவோம்' என்ற தலைப்பிலும், உதவிச் செயலாளர் திருமதி நர்கீஸ் பானு, 'தன்னம்பிக்கை உன் கையில்' என்ற தலைப்பிலும், துணைப் பொருளாளர் திருமதி நஸ்ரின் பானு, 'மனிதநேயம் காப்போம்' எனும் தலைப்பிலும், மற்றொரு துணைத் தலைவி திருமதி நபிலா நஸ்ரின், 'அன்பெனும் ஆயுதம்' என்ற தலைப்பிலும் கருத்துரைக்க இருக்கிறார்கள்.
இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினராக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் சித்ரா சங்கரன் பங்கேற்று, கருத்தரங்கத்திற்கு தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றவுள்ளார்.
மூத்த சமூக அடித்தளத் தலைவர் புதிய நிலா மு.ஜஹாங்கீர் வாழ்த்துரை வழங்க, முஸ்லிம் லீக் (சிங்கப்பூர்) துணைத் தலைவர் திரு முஹம்மது பிலால் நிறைவுரை நிகழ்த்த உள்ளார்.
மகளிர் பிரிவு நடத்தும் இந்நிகழ்வில் Zoom: 502 206 2546 Passcode: 14112021 மூலம் அனைவரும் பங்கேற்று ஆதரவு தருமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.
மேல்விவரங்களுக்கு திருமதி மஹ்ஜபீனை 9126 0404 எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

