சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் ஈராண்டுக்கு ஒருமுறை பெரியார் விழாவுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. இவ்வாண்டு 'பெரியாரும் சமத்துவமும்' என்ற தலைப்பில் விழாவை இணையம்வழியாக மன்றம் இம்மாதம் 7ஆம் தேதியன்று நடத்தியது.
விழாவுக்கு மன்றத்தின் தலைவர் திரு வீ கலைச்செல்வம் தலைமை ஏற்றிருந்தார். தமிழர் பேரவையின் தலைவர் திரு வெ பாண்டியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிற்றுரை வழங்கினார்.
சிங்கப்பூருக்கு பெரியாரின் வருகை பற்றிய குறுநாடகம், தமிழ் மொழி போட்டியில் வெற்றிபெற்ற மாணவரின் பேச்சு ஆகிய அங்கங்கள் நிகழ்வின்போது இடம்பெற்றிருந்தது. முனைவர் பேராசிரியர் சுப திண்ணப்பனின் சிறப்புரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
செய்தி: ஏற்பாட்டுக் குழு

